இஸ்லாமும் தென்னிந்தியாவும்

இந்தியாவுக்கும் இஸ்லாமுக்குமுள்ள தொடர்பு ,பெருமான்மையான இந்தியர்கள் நினைப்பது போல், வட இந்தியாவில் ஆரம்பிக்கவில்லை. இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில், தற்காலத்தில் கேரளா என்று அழைக்கப் படும் சேர நாட்டிதான் வணிகத் தொடர்பாகத்  தொடங்கியது.

எப்பொழுது தெரியுமா?

இறைத்தூதுவர் நபிநாயக அடிகள் காலத்திலேயே தொடங்கியது.  வணிகத் தொடர்பு காரணமாக அரபு நாடுகளிலிருந்து வந்தார்களேயன்றி, மதத்தைப் பரப்புவதற்காக அல்ல. கொடுங்காநல்லூரில்  பொது சகாப்தம் 621. முதல் மஸுதி, வந்த வணிகர்களின் தொழுகைக்காக கட்டப் பட்டது என்கிறார்கள் நபிநாயகத்தின் காலம் பொது சகாப்தம்  571=632. ஆகவே அவர் வாழ்ந்த காலத்திலேயே இந்த மஸுதி கட்டப்பட்டிருக்க வேண்டும். சேர மன்னன் ஒருவன் இஸ்லாம் மதத்தைத் தழுவினான் என்ற வரலாற்ருச் செய்தியும் உண்டு.

அரபு நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதியாயின. கம்ப ராமாயணத்தில் ஒரு செய்யுள் வருகிறது.

‘ உண்ணமுதம் உந்தி எனையோர் நகர் கொணர்ந்த

துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த

மண்மகள் நன் மார்பின் அணிசரம் என்ன ப்

பண்ணிணியல் வயப் பரிகள்  பந்தியில் நிரைத்தார்

தசரதன்  இராமனின் திருமணதுக்குச் சென்றபோது அவன் தன்னுடைய பரிவாரங்களுடன் செல்கிறான். ‘ வேறொரு நாட்டிலிருந்து துருக்கர்கள் கொண்டு வந்த பல வண்ணக் குதிரைகளும் அவனுடன் செல்கின்றன’.  ‘ துருக்கர்’ என்று முஸ்லீம்கள் அனைவரையும் தமிழில் குறிப்பிடுவது வழக்கம்.

கம்பன் காலம் பத்தாம் நூற்றாண்டு என்றால்அரபு நாடுகளிலிருந்து குதிரை இறக்குமதி அதற்கு முன் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும இராமாயணக் கதையில் கம்பன் ‘துருக்கர் கொண்டு வந்த குதிரைகள்’ என்று கூறுவதைக் கால முரண்பாடாகக் கொண்டாலும்(anachronism)   தென்னிந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையே வணிகத் தொடர்பு  மிகவும் தொன்மையானது என்பது உறுதி.

‘சிலப்பதிகாரத்தில்( பொது சகாப்தம் 5,ம் நூற்றாண்டு ) மதுரை நகரைக் காவல் செய்யும் ‘யவனர்’ என்ற சொல்லுக்குத் ‘துருக்கர்’ என்று பொருள் கொள்கின்றார் அடியார்க்குநல்லார்.

சுஃபி பாடல்ககளுக்கும் சித்தர்கள் பாடல்களுக்குமிடையே பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது.   தென்னிந்தியாவுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே உறவு ,வட நாட்டில் நடந்தது போல், ஆட்சிப் போராக ஆரம்பிக்கவில்லை. வணிக, கலாசாரத் தொடர்பாக த் தொடங்கி இன்னும் நீடித்து வருகிறது.

அதனால்தான், காவி நிறம் இங்குத் தலை தூக்காது என்று நாம் நிச்சியமாக நம்பலாம்