A point of no return!

August 17, 2016 § 1 Comment


நேரு காலத்தில், காஷ்மீர் பிரச்னை ஐ.நா.சபைக்குப் போது, அங்கு ஒரு கேள்வி எழுந்தது என்பது என் நினைவுக்கு வருகிறது. அக் கேள்வி, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாகி விட்டது என்றால், எதற்கு அதற்கென்று ஒரு தனிக்கொடி, தனிச்சட்டம், அதாவது, மற்றைய மாநிலத்தவர் அங்கு நிலமோ, வீடோ வாங்க இயலாது போன்ற சட்டங்கள்?’

இதற்குக் காரணம்,  காஷ்மீர் மன்னர் ஹர்சிங்குடன் ஒப்பந்தம்  ஏற்பட்டதே இந்த அடிப்படையில்தான். காஷ்மீர்  சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தனி அங்கமாக இந்தியா வின் Federal set-upல்  இருக்கும் என்ற வாக்குறுதியில்தான்.  இதைக் காஷ்மீரின் பிரதமர்( அப்பொழுது காஷ்மீர்  மாநிலத்தின் முதல் அமைச்சர் ‘பிரதமர்’ என்றுதான் அழைக்கப் பட்டார்) நேருவுக்கு நினைவுறுத்தியபோது,  ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார். வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்தன. காரணம், நேரு  பூர்விகத்தில் காஷ்மீரை ச் சேர்ந்தவர் என்பதால், காஷ்மீரைத் தம் உடைமைப் பொருளாகக் கருதியதுதான்.

நான் 1989ல் ஸ்ரீநகர் சென்றிருந்தேன்.  குலாம்ஷேக் என்ற  என் ஓவிய நண்பர் நானும் ஸ்ரீநகர்ரை ச் சார்ந்த  சாதாரண குடிமக்களுடன் அளவளாயிய போது, அனைவருக்குமே இந்திய அர்சாங்கத்தின் மீதும், ராணுவத்தின் மீதும் எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பது எங்களுக்குப் புரிந்தது.

அமெரிக்காவில் அறிவு ஜீவிகள் அனைவரும், அமெரிக்காவின் வியட்நார் போருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். அப்படியிருக்கும்போது, நம் நாட்டில் மட்டும், நம் அரசாங்கம்  தவறிழைக்கிறது என்று தெரிந்தும்,  தேசபக்தி என்ற ஒரு முட்டாள்தனமான கோஷத்தின் அடிப்படையில், ஊமையராய்ச் செவிடர்களாய் நாம் ஏன்  இருந்து வருகிறோம்?  காஷ்மீர் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை மறுப்பதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டு இளம் நாணுவ  வீரர்களையும் காவு கொடுத்து வருகிறோம்.

பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் அன்று இந்திய என்கிற ஒரு  சமஷ்டி அமைப்பில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அங்கமாக இருப்பதைத்தான் விரும்பினார்கள்.  நிலைமை இன்றிருக்கும் சூழ்நிலைக்கு வந்ததற்குக் காரணம் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்கள்தாம்.  We have reached a point of no return!

 

Advertisements

பிளாட்டோவின் சக்கரம்

June 30, 2011 § Leave a comment


‘பிளாட்டோவின் சக்கரம்’ (Plato’s wheel) என்று  கேள்விப்படிருக்கக்கூடும். ஆரம்பிக்கும் புள்ளியிலியே மீண்டும் வந்து நிற்பது. ‘சரித்திரம் திரும்புகிறது’ (History repeats itself) என்பதும் இதுதான்.

பண்டைய கிரீஸில் பெரிக்லெஸ்ஸின்(கி.மு460-430) மறைவுக்குப் பிறகு அங்கு ஜனநாயகம் ஏற்பட்டது. ‘Demos’ என்றால் ‘மக்கள்’. ‘ஜனநாயகம்’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.

பிளாட்டோவுக்கு இது அவ்வளவாக உற்சாகம் தரவில்லை. பிளாட்டோ கூறுகிறார்:’ ஜனநாயகத்தில் அராஜகம் என்றால் சுதந்திரம் என்று நினைக்கின்றார்கள். ஊதாரித்தனம் பொருளாதார மேம்பாடாகிவிட்டது. வன்முறையின் இன்னொரு பெயர் வீரம். வயதானவர்கள் கூட வாலிபர்களைப்போல் கோஷம் எழுப்பிக்கொண்டு வீதிகளில் அலைகிறார்கள்.எதுவும் அளவுக்கு மீறினால் எதிர்விளைவு ஏற்படும். ஜனநாயகம் சர்வாதிகாரத்தில் வந்து முடிந்தால் கூட அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.’

Will Durant ரோமானியச் சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறார்: ‘ பணக்காரர்கள் அதிக பணக்காரர்கள் ஆனார்கள். ஏழைகK இன்னும் ஏழைகளாயினர்.கோடீஸ்வரர்கள், ஏழைகளின் வாக்குகலையும், ஜனநாயகப் பிரதிநிதிகளின் ஆதரவையும் விலைக்கு வாங்கினார்கள். வாங்க முடியாவிட்டால் கொலை செய்தார்கள்.’ ஜனநாயகம் என்பது ஒரு கேலிக் கூத்தாகி விட்டது.’

ஜனநாயகம் அராஜகம் ஆனபோது, செல்வந்தர்கள் Pompeyயை ஆளும்படிக் கூப்பிட்டார்கள்.Pompey கொலை செய்யப்பட்ட பிறகு, சாதாரண மக்கள் ஜூலியஸ் ஸீஸரை நாடாளும்படி அழைத்தனர். அவன் கொஞம் கொஞ்சமாகச் சர்வாதிகாரியாகி, அவன் பிரிய நண்பன் ப்ரூடஸ்ஸாலேயே  கொலை செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு வந்த அவன் சகோதரியின் மகன் அகஸ்டஸ், கொஞநாடகள் ஜனநாயக நாடகமாடி, பிறகு, சகரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டான்’.

பிளாட்டோவின் சக்கரம் ஒரு சுற்று சுற்றி ஆரம்பப் புள்ளியிலியே வந்து நின்றது.

இது ரோமானியச் சரித்திரமா அல்லது நம் நாட்டின் தற்காலத்திய வரலாறா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் எனக்க் வியப்பைத் தராது. நமக்கு இன்னும் ரோமானிய உறவு இருந்து வருகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

மொழிப் பற்று

May 17, 2011 § 5 Comments


ஹக்ஸர் உயர்மட்டக் குழுவிலிருந்த போதுதான் இத்தகைய குழுக்களையும், கமிஷன்களையும் அரசாங்கம் ஏன் நியமிக்கிறது என்பது தெரிய வந்தது. ஓய்வு பெற்ற வி.வி.ஐ.பிக்களின் பொழுது போக்குக்காக.

ஹக்ஸர் அவ்வப்பொழுது சில பிரச்னைகளைப் பற்றி ராஜிவ் காந்திக்கு, அவருடைய அம்மாவின் நண்பர் என்ற முறையில் கடிதங்கள் எழுதுவது வழக்கம். அவரை ஒரு கமிட்டித் தலைவாராகப் போட்டுவிட்டால் கடிதங்கள் எழுத மாட்டாரென்ற நம்பிக்கையில் ஹக்ஸர் கமிட்டி உருவாகியது. கமிட்டியின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற அவசியமில்லை. இதனால்,இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க எனக்கு முதல் தடவையாக வாய்ப்பு ஏற்பட்டது.

இந்திரா காந்தி பார்லிமெண் டில் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுக்கும் அங்கத்தினர்களை அயல்நாட்டு தூது கோஷ்டி அங்கத்தினர்களாக அனுப்பிவிடுவது வழக்கம்.

நான்  வார்ஸாவில் இருந்தபோது, அயல்நாட்டு இந்தியத் தூதுவரங்கங்களில் தேசீய மொழியாகிய ஹிந்தி எப்படி நிர்வாக ரீதியாக செயலாக்கம் பெறுகிறது என்பதை ஆராய ஒரு பார்லிமெண் ட் குழுவை  இந்திரா காந்தி அனுப்பினார்.  கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் ஒரு குழு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு குழு என்ற ரீதியில் அனுப்பப் பட்டிருந்தன.

எனக்கு என்ன அதிர்ச்சி என்றால், வார்ஸாவுக்கு வந்த குழுவில் தி.மு.க எம்.பிக்களும்,அ.தி.மு.க எம்.பிக்களும் இருந்தனர் என்பதுதான்.

இந்தியத் தூதுவர் அவர்களைச் சந்திக்க ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். நான் ஒரு தி.மு.க எம்.பியைக் கேட்டேன்: ‘ ஹிந்தி மட்டுந்தான் தேசிய மொழி என்பதை உங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படி இந்தக் குழுவுடன் வர உங்கள் கட்சி சம்மதித்தது?’

‘அ.தி.மு.க. காரர்கள் வருகிறார்கள், நாங்கள் வ்ரக் கூடாதா?’

‘என் கேள்வி உங்கள் இரண்டு கட்சிகளுக்குந்தான்?’

‘ முதலில் அவர்களைக் கேளுங்கள்.அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன். பாரிஸ், ரோம் என்று இந்த மாதிரி இடங்களுக்கு அனுப்புவார்கள் என்று பார்த்தால், வார்ஸா, பெல்கிரேட், மாஸ்கோ என்று எங்கள் கட்சிக்காரர்களை அனுப்பியிருக்கிறார்கள். இங்கெல்லாம், காஸினோ, நைட் கிளப் என்று ஒன்றும் கிடையாதாமே?ரகசியமாய் நடைபெறுகின்றன என்கிறார்களே, உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

‘ போலிஷ் மக்களுக்கும் தமிழர்களைப் போல் மொழிப் பற்று அதிகம். 120 ஆண்டுகள் போலந்து,  ஐரோப்பிய வரைபடத்தில் இல்லாவிட்டாலும், போலிஷ் மக்கள்  தங்கள் கலாசார அடையாளத்தை மொழிமூலமாகத்தான் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். போலிஷ் மொழி அழியாமலிருந்திருக்கிறது.’ என்றேன் நான்.

அவர் என்னைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிற்கு, கையிலிருந்த விஸ்கியைச் சுவைத்துக் கொண்டே கேட்டார்: ‘இங்கெல்லாம் வோட்காதான் கிடைக்கும் என்றார்கள். இது உயர்ந்த ரக ஸ்காட்ச்சாக இருக்கிறதே,  தூதுவரகங்களுக்கு ‘ஸ்பெஷல் சப்ளையா?’

Where Am I?

You are currently browsing the அரசியல் category at இந்திரா பார்த்தசாரதி.