சத்தியத்தின் வெளிப்பாடு

December 11, 2018 § Leave a comment


‘வெளியை’ சூன்யமாகப் பார்க்கின்றவர்களுக்கு அது ‘வெறுமை’யாகத்தான் தோன்றும். ஆனால் அது நிரப்பப் பட வேண்டிய ஒன்று என்று பார்க்கும்போது, அது சாத்தியக் கூறுகளின் எல்லை நிலம்.

மைக்கலேன்கலோ கூறினார்;’ சலவைக் கற்களை நான் வெறும் கற்காளாகப் பார்ப்பதில்லை. அவற்றுள் பொதிந்து கிடக்கும் உருவங்களாகக் கண்டு  அவற்றைச் செதுக்கி எடுக்கிறேன்’

பிரபஞ்சத்தில் ‘ சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்த முடிவில் வெறும் பாழ் ‘ என்று எதுவுமில்லை. அனைத்தும், ‘சூழ்ந்து அகன்று தாழ்ந்த உயர்ந்த முடிவில் பெரும் ஜோதி’ என்று நம்மாழ்வார் வாக்கில் கூற முடியும்.  இதற்கு ‘உள்பார்வை’ வேண்டும். ‘உள்பார்வையின்’ இன்னொரு பெயர் கற்பனை. இது சிந்திப்பதால் வராது. இதயத்தின் வெளிச்சம். பிரபஞ்சத்தில் எதுவுமே எதேச்சையாக உருவாவதில்லை. அனைத்தும் சத்தியத்தின் வெளிப்பாடுகள்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading சத்தியத்தின் வெளிப்பாடு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: