பிளாட்டோவின் சக்கரம்’

September 8, 2017 § 1 Comment


‘பிளாட்டோவின் சக்கரம்’ (Plato’s wheel) என்று கேள்விப்படிருக்கக்கூடும். ஆரம்பிக்கும் புள்ளியிலியே மீண்டும் வந்து நிற்பது. ‘சரித்திரம் திரும்புகிறது’ (History repeats itself) என்பதும் இதுதான்.
பண்டைய கிரீஸில் பெரிக்லெஸ்ஸின்(கி.மு460-430) மறைவுக்குப் பிறகு அங்கு ஜனநாயகம் ஏற்பட்டது. ‘Demos’ என்றால் ‘மக்கள்’. ‘ஜனநாயகம்’ என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.

பிளாட்டோவுக்கு இது அவ்வளவாக உற்சாகம் தரவில்லை. பிளாட்டோ கூறுகிறார்:’ ஜனநாயகத்தில் அராஜகம் என்றால் சுதந்திரம் என்று நினைக்கின்றார்கள். ஊதாரித்தனம் பொருளாதார மேம்பாடாகிவிட்டது. வன்முறையின் இன்னொரு பெயர் வீரம். வயதானவர்கள் கூட வாலிபர்களைப்போல் கோஷம் எழுப்பிக்கொண்டு வீதிகளில் அலைகிறார்கள்.எதுவும் அளவுக்கு மீறினால் எதிர்விளைவு ஏற்படும். ஜனநாயகம் சர்வாதிகாரத்தில் வந்து முடிந்தால் கூட அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.’

Will Durant ரோமானியச் சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறார்: ‘ பணக்காரர்கள் அதிக பணக்காரர்கள் ஆனார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகளாயினர்.கோடீஸ்வரர்கள், ஏழைகளின் வாக்குகலையும், ஜனநாயகப் பிரதிநிதிகளின் ஆதரவையும் விலைக்கு வாங்கினார்கள். வாங்க முடியாவிட்டால் கொலை செய்தார்கள்.’ ஜனநாயகம் என்பது ஒரு கேலிக் கூத்தாகி விட்டது.’

ஜனநாயகம் அராஜகம் ஆனபோது, செல்வந்தர்கள் Pompeyயை ஆளும்படிக் கூப்பிட்டார்கள்.Pompey கொலை செய்யப்பட்ட பிறகு, சாதாரண மக்கள் ஜூலியஸ் ஸீஸரை நாடாளும்படி அழைத்தனர். அவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்வாதிகாரியாகி, அவன் பிரிய நண்பன் ப்ரூடஸ்ஸாலேயே கொலை செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு வந்த அவன் சகோதரியின் மகன் அகஸ்டஸ், கொஞ்சநாட்கள் ஜனநாயக நாடகமாடி, பிறகு, சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டான்’.

பிளாட்டோவின் சக்கரம் ஒரு சுற்று சுற்றி ஆரம்பப் புள்ளியிலியே வந்து நின்றது.
இப்பொழுது நம் நாட்டுக்கு வாருங்கள். இப்பொழுது சக்கரவர்த்தி ஆகமுடியாது சர்வாதிகாரியாக ஆகலாம். இது digital age அல்லவா? பிச்சைக்கார்கள் ‘mobile’ வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!

Advertisements

§ One Response to பிளாட்டோவின் சக்கரம்’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பிளாட்டோவின் சக்கரம்’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: