இறுதிக் கனவு

September 5, 2017 § Leave a comment


திரை பாய்ந்த உடல். ஆங்கில எழுத்து ’u’வைக் கவிழ்த்தாற் போல் கூன் விழுந்த முதுகு. கையில் மூன்றாவது காலாக வைத்திருக்கும் தடித்த நீண்ட கம்பு. உண்மையான சூர்ய வெளிச்சத்தை மறந்து போன கண் பார்வை. அம்முதியவர் தள்ளாடித் தள்ளாடி தம்முடைய பழைய கிராமத்தின் ஆற்றங்கரை ஓரம் செல்கிறார்.
அதிர்ச்சி.!
சுழித்துச் சுழித்துப் பிரவாகமாக ஓடும் ஆறு கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணுட்டியவரை மணல்! மணல்! ஆறு எங்கே மறைந்தது?
அவர் திடுக்கிட்டு நின்றார்!
இறுதி மூச்சு அடங்குவதற்கு முன்னால் தாம் குழந்தைப் பருவத்திலும், வாலிப ப் பருவத்திலும் இன்பத்துடன் வாழ்ந்த கிராமத்தையும், அதன் ஆற்றங்கரையையும் பார்த்து விட வேண்டுமென்று வந்தவருக்கு அதிர்ச்சி!
இயற்கை ஏமாற்றவில்லை.
சூரிய ஒளி கண்களில் பளிச்சிட்டது.
கண்ணுக்கெட்டியவரை பசுமை! ஆற்றங்கரை ஓரத்தில்கிளைகளுடன் தாழ்ந்து கரையை முத்தமிட்ட மரங்கள். ஆறு அலைப் பெருக்கெடுத்து ஓடியது.
இளம் பெண்களும், ஆண்களும் குதூகலத்துடன், ஆற்றில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து, ஓடிப் பிடித்துத் தழுவி விளையாடுகின்றனர்.
’அதோ! நான்! அந்த இளம் பெண்ணை ஆற்றில் தள்ள, அவள் எழுந்து என்னைத் தள்ள, இருவரும் ஒருவரை ஒருவரைத் தழுவி இளமையைக் கொண்டாடுகிறோம்! அதோ அந்த ஆற்றோரம் நெடிது நிற்கும் மரத்துக் கிளையில் மீதேறி, ‘தும்’ என்று குதித்து அலைகளை எழுப்பி, நீந்துகிறேன்! இது மானுடத்தின், என்னுடைய, வசந்த காலம்! …’
காட்சிகள் மறைகின்றன. யதார்த்தம் வெறக்கிறது!
வறண்டு போன ஆற்றின் கரையில் நின்று முதியவர் இருமலுக்கிடையே.. முணு முணுக்கிறார்”. அந்தக் …காலம்….. போய்விட்டது! போ ய்………………..’
(இது தொடித்தலை விழுத்தண்டினார் இயற்றிய புறப் பாடலைத் தழுவி எழுதப்பட்டது. ‘மனித நாடகத்தின் தலைவன், வில்லன் எல்லாமே ’காலம்’ (Time) என்றார் ஷேக்ஸ்பியர்.) அதனால்தான் ‘மரணத்தை’ உருவகித்து த் தமிழில் ‘காலன்’ என்கிறோம். பாடலின் கருத்து, அப்பாடலை இயற்றிய புலவராகக் கருதப்படின்றவர் பெயரிலேயே இருக்கின்றது!)

பாடல்;
‘இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செவ்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ
தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைத்து
தழுவழித் தழீஇ தூங்குவழித் தூங்கி
மறை எனல் அறியா மாயம் இன் ஆயமொடு
உயர்சினை மருதத் துறை உறத் தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி,சீர்மிகு
கரையவர் மருள,திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்ட்த்துத் துடுமெனப் பாய்ந்த்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை!
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடிதலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று
இரும் இடை மிடைந்த சில சொற்
பெரும் மூதாளரேம் ஆகிய எமக்கே!
;
(நன்றி:’கணையாழி’ செப்டம்பர் ’17.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading இறுதிக் கனவு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: