’தோழி யார்?’

September 1, 2017 § Leave a comment


சங்க இலக்கியங்களில் வரும் ‘தோழி’ ஓர் அற்புதமான கதா பாத்திரம். ‘தலைவி’யைக் காட்டிலும் இவள்தான் அகத்துறைப் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கிறாள். தலைவன் – தலைவி சந்திப்பு நிகழ்வதிலிருந்து களவிலிருந்து கற்பொழுக்கம் முடிய இவள்தான், நிகழ்வுகள் அனைத்தையும் ஆக்ரமிக்கிறாள். தங்கலைவன் – தலைவிக்குமிடையே நிகழும் களவொழுக்கச் சந்திப்புக்கள் இவளை நம்பித்தான் நிகழ்கின்றன. ’களவொழுக்கம்’ கல்யாணத்தில், அதாவது, அக்காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாகவேண்டும்.’கற்பின்றிக் களவு நடவாது’ ( ‘கற்பு’ என்றால் ‘திருமணம்’) என்கிறார் நச்சினார்க்கினியர். தலவனை வற்புறுத்தி இத்திருமணம் நிகழ்வதற்கும் தோழிதான் காரணம். ‘களவு’ நிழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள், தலைவின் உடம்பிலே தெரியத் தொடங்கி அது தலைவியின் செவிலித்தாய் கவனத்தை ஈர்த்த்ஹால், தலைவி-தலைவன் காதலை அத்தாய்க்கு எடுத்துச் சொல்ல வேண்டியது தோழியின் கடமை. இதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்று பெயர்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு காலத்தில் தலைவிக்கு உறு துணையாக இருந்து அவளை ஆற்றுபவள் தோழிதான். ‘பிரியாதே என்று தலைவனிடம் எடுத்துச் சொல்லவும் அவளுக்கு உரிமை உண்டு.
அகத்துறை இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய், நற்றாய், என்று வரும் எந்தக் கதாபாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப் படக்கூடாது. இது இலக்கண வரையறை.

இந்தத் த் ‘தோழி’ யார்? ‘தோழிதானே செவிலியின் மகளே’ என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் தலைவியுடன் பிறந்ததிலிருந்து ’உடன் முலை உண்டு’ வளர்ந்தவள் என்கிறார் இளம்பூரணர். அப்படியானால், செவிலி தன் குடும்பத்துடன் தலைவி வீட்டில் இருந்தாள் என்பது பொருள். தலைவியின் ‘நற்றாய்க்கு’ (பெற்ற தாய்) இந்தச் செவிலி தோழியாக இருந்திருக்க வேண்டும். இது பரம்பரை. பரம்பரையாக வரும் தொழில் மரபு போல் தோன்றுகிறது!

தோழியின் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சங்க அகத்துறை இலக்கியங்களில் எந்தக் குறிப்பும் இல்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ’தோழி யார்?’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: