எது சரி?

June 24, 2017 § Leave a comment


‘தாய் மொழி’, ‘தாய் நாடு’ என்ற சொல்லாட்சிக்குப் பண்டைய தமிழிலக்கியங்களில் சான்றுகள் இருக்கின்றனவா? அரசியல் சார்ந்த இச் சொல்லாக்கங்கள் காலனி ஆட்சிக்குப் பிறகு புழக்கத்துக்கு வந்த மேல்நாட்டு இறக்குமதிகள்.
‘இருந்தமிழ் நன்மாலை .இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது’
என்று பூததாழ்வார் சொல்வதைப் பார்க்கும்போது, தமிழ் தம்முடைய மொழி என்ற பெருமை தொனிக்கின்றதே தவிர, தமிழ் தம்முடைய தாய் மொழி என்ற குறியீட்டு உருவகம் உருப் பெற்றதாகத் தெரியவில்லை. ‘தமிழன்’ என்ற உணர்வும், பெருமையும் இருந்திருக்கின்றன.
’சேர, சோழ, பாண்டிய, தேசங்கள் மூன்றும் உள்ளடங்கிய ’தமிழ் நாடு’ என்ற உணர்வு சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்திருக்கின்றது என்பது சிலப்பதிகார ‘வஞ்சிக்காண்டத்தினி’ன்றும் புலனாகின்றது. அங்கும் ‘தாய் நாடு’ என்று எதுவும்
குறிப்பிடப் படவில்லை.
’தாய்மொழி’ என்ற வழக்கு எப்படி வந்தது? அந்தக் காலத்தில் தந்தைதான் தொழில் நிமித்தம் வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. குழந்தைகள் பிறந்தகாலம் தொட்டுத் தாயிடந்தான் அதிக நேரம் இருந்தன. பேசக் கற்றுக் கொடுப்பது தாய். பேசும் மொழி தாயை ச் சார்ந்திருப்பதால் ‘தாய் மொழி’ என்ற குறியீடு ஏற்பட்டிருக்க வேண்டும்.
‘தாய்நாடு’ என்ற குறியீடும் இதையொட்டி உருவானதுதான். ஆதிப் பூர்வகுடி இனங்கள் முழுவதுமே தாய்வழிச் சமூகமாக இருந்திருக்க வேண்டுமென்று சமூகவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் ‘தாய் நாடு’ என்ற கருத்தாக்கம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகளில் ‘தகப்பன் நாடு’ என்ற குறியீடும் வழக்கில் இருக்கிறது.
‘’பாரத் மாதா’ என்று சமயம் சார்ந்த நிலையில், நாட்டை உருவகப் படுத்தும் மரபு அண்மைக் கால நிகழ்வு. ‘நைகார நீர்வீழ்ச்சி இந்தியாவில் இருந்திருந்தால், அது சமயம் சார்ந்த ஒரு
வழிபாட்டுத் தலமாக’ ஆகியிருக்கும் என்று மோனியர் வில்லியம்ஸ் கூறுவார். அது போல்தான், ‘தாய் நாடு’ என்ற இறக்குமதியான கருத்து, சமயப் போர்வையில் ‘பாரத் மாதா’ ஆகிவிட்டது.
’பாரத்’ என்றும் ‘பாரதம்’(தமிழ்) என்றும் இந்தியாவைக் குறிப்பிடுகிறார்கள். ‘பாரத்’ என்பது,’பரத்’ என்ற சொல்லினின்றும் வந்திருக்கலாம் என்பது பெரும்பான்மையான அரசியல் சார்ந்த வடநாட்டு ஹிந்தி அறிஞர்களின் கருத்து. ‘பரத்’ என்பது, துஷ்யந்தன், சகுந்தலை தம்பதியரின் வீர மகன். அப்படியானால், ‘பாரத்’ என்பது ஆண்பாலாக அல்லவா இருக்க வேண்டும்? எப்படி ‘பாரத் மாதா’ என்று சொல்லுவது பொருந்தும் என்பது நியாயமான கேள்வி.
‘பாரத் பிதாகி ஜே’ என்று கோஷம் எழுப்புவதுதான் சரியா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading எது சரி? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: