வலம்,இடம்

June 22, 2017 § 1 Comment


‘வலம்’ என்றால் ‘வலிமையானது’, ”மிகவும் இயக்கத்தையுடையது’ என்ற பொருள்.”இடம்’ என்றால் ஓரிடத்தில் அதிக இயக்கம் இல்லாமல் நிலைபெற்றிருப்பது’ என்பது பொருள்.
‘வலக்கை’ ‘இடக்கை’ என்ற சொல்லாட்சியும் இதன் அடிப்படையில்தான் வந்திருக்க வேண்டும். ஏனெனில் உலகில் பெரும்பான்மையோர் வலக்கை செயலாற்றுவோராக இருக்கின்றார்கள். இடக்கை அவ்வளவாகப் பயன்படுவதில்லை. இருக்கும் இடத்திலேயே இருக்கிறது.
ஆனால் கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கும்போது,மரபு வழிச் சார்ந்தவர்களை, ‘Status quo’ வை விரும்புகின்றவர்களை, ‘வலது வழிச் சார்ந்தவர்கள் (Rightists) என்றும், முற்போக்குச் சிந்தனையுடன் செயல் துடிப்பு உள்ளவர்களை ‘இடதுவழிச் (Leftists) சார்ந்தவர்களென்றும் கூறுகிறோம
இந்த் முரண்பாட்டுக்கு என்ன காரணம்? தமிழில், வேர்ச் ச்சொல் ஆய்வு வழீப் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் உலகில் பெரும்பான்மையோர் வலக் கை ஆற்றல் உடையவர்களாக இருப்பது போல், சிந்தனையிலும் சனாதனிகள்தாம் அதிகம் என்பதால், அவர்காளை ;Rightists’ என்றும், முற்போக்குச் சிந்தனையாளார்கள் சிறுபான்மையினர் என்பதால் அவர்களைக் குறிக்க ‘Leftists’ என்ற சொல்லாட்சி வந்திருக்கிறது.
வேர்ச்சொல் ஆய்வு வழி, இந்தச் சொல்லாட்சி தமிழுக்குப் பொருந்தவில்லை.

Advertisements

§ One Response to வலம்,இடம்

  • சார், இதுவே மூளைக்கு வரும்போது வேறு முறையில் வழங்கப் படுகிறது. தங்கள் கருத்து?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading வலம்,இடம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: