சமர்ப்பணம்

May 6, 2017 § Leave a comment


உங்கள் உடல் உங்களுடையதில்லை, அதன் உரிமையாளர் யார் தெரியுமா?.
அரசாங்கம்.
பக்தர்கள் கண்ணீர் மல்க, ‘என் உடல், ஆவி அனைத்தும் உனதே’ என்று இறைவனிடம் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இப்பொழுது பாரதத் திருநாட்டின் குடிமக்கள், தம் சரீரங்கள் இறைவனுக்குச் சொந்தம் என்று சொல்லுகிறார்களோ இல்லையோ, அவை அரசாங்கத்துக்குச் சொந்தம் என்பதை உணர வேண்டும்.
இது பாரத அரசாங்கத்து வழகுரைஞரின் திருவாக்கு. உச்ச நீதி மன்றத்தில் இப்படி ஒரு வாதத்தை அவர் சமர்ப்பித்திருக்கிறார். இதனால், தன் உடைமையான குடி மகளுடைய/ மகனுடைய உடலை, ஆதார் அடையாளச் சீட்டு சம்பந்தமாக எந்த விதமான பரிசோதனைக்கும் உட்படுத்த அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது என்கிறார் அவர். இதே உரிமைதான் ஒருத்தி/ஒருவன் தற்கொலை செய்துகொள்ள முயன்றால் அவளை/அவனை த் தண்டிக்கவும் செய்கிறது என்பது அவர் வாதம்.
ஆள்கின்றவனை இறைவனாக க் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்னு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராம்மணம் கூறியிருக்கிறது. இதை, ‘பூவை நிலை’ என்கிறார் தொல்காப்பியர். ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்கிறார் நம்மாழ்வார். மத்திய நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலும், அரசனை இறைவனோடு சம்பந்தப்படுத்தி, அரசனுக்குரிய தெய்வீக உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
ஆகவே, நமக்குத் தற்கொலை செய்து கொள்ள உரிமை கிடையாது. ஆனால் அரசாஙகம் என்ற இறைவன்/போலீஸ் எத்தனை ‘என்கௌண்டர் கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading சமர்ப்பணம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: