வள்ளுவருக்குத் தாடி, மீசை உண்டா?

March 2, 2017 § Leave a comment


எனக்குத் தமிழ் இலக்கியத்தில் புரியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றிலொன்று, திருவள்ளுவருக்குத் தாடியும் மீசையும் இருப்பன போல் கோலம் காட்டி அவரை முனிவராக்கிவிட்டார்கள் என்பது. அவருடைய இந்த த் தோற்றம் யாருடைய கனவில் உதயமாயிற்று என்ற வரலாற்றின் மூலம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த வரை, சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பரிமேலழகர் உரையுடன் திருக்குறளைப் பதிப்பித்த போது, வள்ளுவருக்குத் தாடியும் மீசையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உடம்பு முழுவதும் திருநீற்றையும் அள்ளித் தெளித்து விட்டார்கள். அவர்களுக்கு மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான நூல் ஏதாவது இருக்க் க் கூடும்.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த து ஒழித்து விடின்’ என்று கூறியவர் தாடியும் மீசையும் வைத்திருப்பாரா அல்லது ஒரு சமணதுறவி மாதிரி முடி மழித்து இருந்திருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை.
திருவள்ளுவர் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். அறத்தில், துறவறத்தைக் காட்டிலும், இல்லறம் பற்றிய அதிகாரங்கள்தாம் அதிகம். அறத்துப்பாலைக் காட்டிலும், பொருட்பால் மிகப் பெரிது. காமத்துப் பால், காதலை மிகவும் ரசித்து எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவருக்குத் தாடி மீசை வைத்து அவரை ஏன் ஒரு முனிபுங்கவராக ஆக்கி இருக்கவேண்டும்?
அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர் நமது மரபில், தாடி மீசையுடனா காணப்படுகிறார்? ஆனால், காமத்தில் தோய்ந்து உலகப் புகழ்பெற்ற ‘காம சூத்திரம்’ எழுதிய வாத்ஸ்யாயனரை ரிஷியாக்க் காட்டும்போது, ‘காமத்துப் பால்’ எழுதிய வள்ளுவரை முனிவராக க் காட்டுவதில் என்ன தவறு இருக்கின்றது என்ற கேள்வி எழலாம்.
அறிஞர்கள் என்றால் அவருக்கு தாடி மீசை இருந்திருக்க வேண்டும் என்பது அன்று தொட்டு இன்று வரை ஒரு பரவலான அபிப்பிராயம் என்று தோன்றுகிறது. இக்காலத்தில் முனிவர்கள் மாதிரி தாடி இல்லாவிட்டாலும். (கவிஞர் விக்கிரமாதித்தயனைத் தவிர) ‘goatie வைத்துக் கொள்கிறார்கள். இராமயணம் பாடிய வால்மீகிக்கும், துளசிதாசருக்கும் தாடி மீசை இருக்கும் போது, கம்பனை வெறும் மீசையுடன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை.
நாம் இப்பொழுது காணும் ஷேக்ஸ்பியர் முகத்தோற்றம் தவறு, ஷேக்ஸ்பியர் வெட்டப்பட்ட கிராப்புடன், முகப்பொலிவுடன் கூடிய ஓர் அழகிய இளைஞனாக இருந்தார் என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வந்திருக்கிறது.
நம் கவிஞர்களின் தாடிப் பற்றியும் ஆய்வு செய்து முனைவர் பட்டம்பெற நமது தற்காலத்திய தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்பு இருக்கிறது என்று இளம் ஆய்வாளர்க்குச் சொல்ல விரும்புகின்றேன். இந்தியில், பிரேம்சந்த் எழுதியுள்ள புத்தகங்களின் மேல் அட்டைகளைப் பற்றித் தவிர, மற்ற எல்லாவற்றையும் பற்றி ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்வதுண்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading வள்ளுவருக்குத் தாடி, மீசை உண்டா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: