அடிமன ஆக்ரோஷங்கள்

February 18, 2017 § Leave a comment


நான் எந்தக் கட்சியும் சார்ந்தவன் அல்லேன். நேற்று, தமிழ்நாட்டுச் சட்டசபை நிகழ்வுகளில், மனிதர்களின் அடிமனத்து அசிங்க உண்ர்வுகள் எப்படிக் கட்டவிழ்ந்து தலைவிரித்து ஆடின என்பதைப் புரிந்து கொள்ளவே முயல்கின்றேன்.
எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் ‘டூப்’பாக இருக்க சம்மதித்ததே அவருடைய தொகுதி மக்களுக்குச் செய்த துரோகம். ஆனால், பன்னீர்செல்வம், தமக்குப் பதவி இல்லை என்றவுடன், அநியாம் இழைக்கப்பட்ட ஒரு தர்மவான் தோற்றம் பூண்டது சரி என்று நான் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் அதர்மத்துக்குத் துணை போனபிறகு, அவர் தலையில் மகுடம் ஏறியவுடன், அதை உறுதிப் படுத்திக்கோளவதற்காகத் தரித்த புதிய வேடத்தை யாரும் நம்பமாட்டார்கள். இது எந்த விதத்தில், ‘தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நிகழும் போர்’ என்று சித்திரிக்க முடியும்?
இரண்டு கொள்ளைக் கும்பல்களுக்கிடையே, அடித்தக் கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுவதிலே ஏற்பட்ட யுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தி.மு.க நம்பிக்கைத் தீர்மானத்தில் பங்கெடுக்கப்போவதில்லை என்று சொன்னது அதன் தகுதியை க் கண்ணியமானவர்கள் மதிப்பில் உயர்த்திக் காட்டியது. ஆனால் நேற்றையச் சம்பவங்கள் கட்சியின் தலைமைக்கு ஒரு மாபெரும் களங்கம். ஸ்டாலின் தமது கட்சி அங்கத்தினர்களை அடக்கி ஆண்டிருக்க வேண்டும். அவைத்தலைவரைத் தாக்கியவர்களின் அடிமனத்தில், அவைத்தலைவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்ற நினைவு, விசுவரூபம் எடுத்த நிலையில்தான் அவரை அப்படி அவமானத்துக்கு உள்ளாக்கினார்கள் என்பது போல் தோன்றியது. இது நம் இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்தமான அடிமனச் சாபக்கேடு!
ஊழல்சாம்ராஜ்யத்தின் ’முதல் குற்றவாளி’யின் ‘கனவுகளை நிறைவேற்றுவோம்’ என்று அதிமுகாவின் இரண்டு பிரிவுகளும் கோஷமிடுவதுதான் நகைமுரண்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading அடிமன ஆக்ரோஷங்கள் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: