’யாருக்கு மாலை?’

February 10, 2017 § Leave a comment


இறந்துபோனவர்களின் ஆன்மா  இருந்துகொண்டிருப்போர்களுடன் சகஜமாக உரையாடும் தமிழ் நாட்டில், தமிழ்நாட்டு ஆளுநர் கனவில் ‘அம்மாவின்’ ஆவி  தூங்கிக்கொண்டிருந்தவரைத் தட்டி எழுப்பியது.

அவர் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார்.

அம்மா அவரைக் கண்டு புன்னகைத்தார்.

‘நான்தான் இடைக்கால முதல்வரை ராஜிநாமா கடிதத்தை வாபஸ் பெறும்படிச் சொன்னேன். அரசியல் சட்டத்தின் படி அதற்கு இடமில்லை என்றால் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு வழி இருக்கிறது’ என்றார் ‘அம்மா’.

‘என்ன வழி?’ என்றார் ஆளுநர்.

‘பாரதப் பண்பாட்டு வழி. ஆர்.எஸ்.எஸ் ஒப்புதலும் கிடைக்கும்’

‘சொல்லுங்கள்’

‘ஒரு யானையிடம் மாலையைக் கொடுத்து, தமிழ்நாட்டுச் சட்டசபை அங்கத்தினர்களையும், சசிகலாவையும் நிறுத்தி வைத்து, யார் கழுத்தில் அந்த மாலையைப் போடுகின்றதோ அவர்தான் முதல்வர். நாளைக்கே அறிவியுங்கள்.’என்றார் ‘அம்மா’.

ஆளுநர் யோசித்தார். ‘ஒரு பிரச்னை.’

‘என்ன பிரச்னை’

‘தமிழ்நாட்டு யானையாக இருந்தால் அதற்கென்று விருப்பு, வெறுப்புக்கள் இருக்கலாம்’ கர்நாடாகா யானையாக இருந்தால் காவிரிப் பிரச்னை. கேரளா யானை ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’, இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிடக் கூடும்’  என்றார் ஆளுநர் தலையைச் சொறிந்துகொண்டே.

‘அஸ்ஸாம் யானையைக் கொண்டு வாருங்கள்’ என்றார் ‘அம்மா’. சொன்ன சூட்டோடுடன் மறைந்தும் விட்டார்.

ஆளுநர் தில்லிக்கு இது பற்றித் தகவல் தெரிவித்தார்.

இரண்டு நாட்களில் அஸ்ஸாம் யானை வந்தது.

எல்லா சட்டசபை அங்கத்தினர்களும், சசிகலாவும் மெரினாவில், அம்மாவின் கல்லறை அருகே  நிறுத்தி வைக்கப்பட்டனர்.

ஏராளமான கூட்டம்.

ஆளுநர் மேற்பார்வையிட்டுக் கொண்டு நின்றார்.

அஸ்ஸாம் யானை வந்தது, துதிக்கையில் மூவர்ண மாலையுடன்.

மூன்று முறை சுற்றிச் சுற்றி வந்தது.

சிறிது நேரம் நின்று யோசித்தது.

பிறகு ஒரு தீர்மானத்துடன், ஆளுநர் கழுத்தில் மாலையைப் போட்டது.

அவர் திடுக்கிட்டார்!  ‘ஐயோ! நான் இந்த மாநிலத்துக்கு முதல் மந்திரி ஆக மாட்டேன். எனக்கு பயமாக இருக்கிறது’ என்று கதறினார்.

‘ முதல் மந்திரி இல்லை. ராஷ்டிரபதி ஆட்சி என்று சொல்லுகிறது யானை’ என்றார் அரசாங்கத்தின் முதல் செயலர்!

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading ’யாருக்கு மாலை?’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: