The Man who was Thursday’

February 3, 2017 § Leave a comment


‘The Man who was Thursday’ என்ற ஒரு நாவல் பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது. G.K. Chesterton எழுதியிருப்பதாக நினைவு. ஒரு சர்வாதிகாரியைக் கவிழ்ப்பதற்கு ஏழு தேசபக்தர்கள் சேர்ந்து அவனைக் கவிழ்க்க திட்டம் தீட்டுகிறார்கள். சில நாட்கள் கழித்து அவர்களுக்குப் புலனாகிறது, அவர்களில் ஒருவன் அரசாங்க ஒற்றன்.அவன் மற்றைய ஆறு பேர்களில் ஒருவனை வேவு பார்க்க அமர்த்தப்பட்டிடுக்கிறான்

ஏழுபேருக்கும் வாரக் கிழமைகளின் பெயர்கள். Sunday,Monday, என்கிறபடி. Sunday என்கிறவன் Mondayya யை வேவு பார்க்கிறான். பிறகுதான் அவர்களுக்குத் தெரிகிறது, ஏழு பேருமே அரசாங்கதால் ஒருவரை ஒருவர் வேவு பார்க்க அமர்த்தப் பட்ட ஒற்றர்கள் என்று.

நமது அரசியலை நினைக்கும்போது இந்தக் கதை நினைவுக்கு வருகிறது. ஓரு தேர்தலில் ஆள்வதற்கென்று ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் மக்களைச் சூறையாடுகிறார்கள். அடுத்தத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்ததைத் தேர்ந்தெடுக்கிறோம். முந்தியவர்கள் கொள்ளக்காரர்கள் என்று சொன்ன பிந்தியவர்கள் கொள்ளையடிப்பதில் முந்தியவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்று நிரூபிக்கிறார்கள்!

அடிப்படையிலேயே நாற்றமடிக்கும் ஸ்தாபனத்தின் (Establishment) ஒற்றர்கள் அரசியல் கட்சிகளைச் சா’ர்ந்த யாவரும். இவர்களுக்கிடையே  வெளியே சொல்லப்படாத ஒப்பந்தம் ஒன்று உண்டு. லஞ்சம் வாங்கினார்கள் என்று இவர்களில் ஒருவராது தண்டிக்கப்பட்டிகிறார்களா?( லாலுவைத் தவிர, அவரும் இப்பொழுது ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவர்).’ Everything is rotten in the State of Denmark’ (Hamlet)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading The Man who was Thursday’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: