வரலாறு ஓர் ஆபத்தான விஷயம்

January 20, 2017 § Leave a comment


ஆங்கிலத்தில் ஒரு சொல்லடை உண்டு. ‘பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்’’ பழிக்குப் பழி என்பதைச் சித்திரிப்பதற்காக ஏற்பட்ட சொல்லடை இது. 1947ல் நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு தில்லியில் ஒலித்த கோஷம் இது. அப்பொழுது காந்தி அடிகள் சொன்னார் ‘கண்ணுக்குக் கண் என்றால் நாடு முழுவதும் குருடாகிவிடும்’

இப்பொழுது நாடு முழுவதையும் குருடாக்கிவிடும் முயற்சிகள்தாம் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நிகழ்ந்து வருகின்றன.

’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்’

என்கிறது குறள்.

(‘நமக்கு ஒருவன் துன்பம் இழைத்தால், அவன் வெட்கப்படும்படியாக, அவனுக்க நாம் நல்லது செய்வதுதான் அவனைத் தண்டித்தலாகும்’.)

இந்தக் காலத்துக்கு இந்தக் குறள் கூறுவது பொருந்துமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். நமக்குத் துன்பம் செய்தவனுக்கு, தண்டனையாக நாம் நன்மை செய்தால், இக்காலத்தில், இக்காலத்தில் நிலவிவரும் மதிப்பீடுகளுக்

கேற்ப, நாம் அவனுக்கு அஞ்சி நல்லது செய்து அவனிடம் சரணடைகிறோம் என்றுதான் அவன் நினைப்பான். நாம் அவனுக்குத் தண்டனையாக நல்லது செய்கிறோம் என்று அவன் நிச்சியமாக வெட்கப்படமாட்டான். வள்ளுவர் காலத்தில் வாழ்ந்திருக்க க் கூடிய கண்ணியமானவர்கள் மிக்க சமூகத்தில்தான் த் துன்பத்துக்குத் தண்டனையாக நன்மை செய்தல் துன்பம் செய்கின்றவர்களுக்கு வெட்கத்தைத் தந்திருக்கிறது. ஆகவே இக்குறள் மூலம் வள்ளுவர் காலத்தில் எந்த அளவுக்கு நாகரிகம் மிக்க சமூகம் இருந்திருக்கின்றது என்பதைப் புலப்படுத்துகின்றது.

இதற்கு உரை கண்ட பரிமேலழகர் வள்ளுவர் உள்ளத்தை உய்த்துணர்ந்தவர். அவர் கூறுகிறார்:’ துன்பம் செய்தவன் செய்த துன்பத்தை மறந்து அவனுக்கு நன்மயைச் செய்வதோடு மட்டுமல்லாமல், நாம் அவனுக்குத் ‘தண்டனையாக’ச் செய்த நன்மையையும் நாம் மறந்து விட வேண்டும்.’

ஏன்?

‘அவன் எனக்குத் துன்பம் செய்தான், நான் அவனுக்கு நன்மையைச் செய்தேன்’ என்ற இறுமாப்பு வந்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே குறளில் வரும் ‘விடல்’ என்ற சொல், ஒருவன் செய்த தீமையை மறத்தல், அதற்குத் தண்டனையாக,அவனுக்கு நாம் செய்த நன்மையை மறத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கின்றது என்கிறார் பரிமேலழகர்.

மத்தியப் பிரதேசத்தில் தார் என்ற இடத்தில் தார் என்று ஓர் இடம் இருக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தில்லி சுல்தானேட் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு மசூதியில் நூற்றாண்டுக் காலமாக அங்கு முஸ்லீம்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் அங்குள்ள ஒரு தூணில் ‘போஜ்’ என்று பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அந்த இடம் போஜ ராஜா காலத்தில் கல்விசாலையாக இருந்திருக்க வேண்டுமென்று ,வரலாற்றில் அரைகுறை அறிவு கொண்ட ஓர் ஆங்கிலேய ஆட்சியாளர் கூறினார். அதற்கு ‘போஜ்சாலா’ என்ற ஒரு புதிய நாமகராணமும் சூட்டப் பட்டு விட்டது..

விளைவு. இப்பொழுது ஒரு புதிய அயோக்தி பிரச்னை.

வரலாற்றில் நடந்ததாக க் கருதும் தீமைகளுக்குத் தீர்வு, பழிக்குப் பழி வாங்குதல். மசூதியை இடித்து, போஜ கலாசாலை உருவாக்க வேண்டுமென்ற கிளர்ச்சி! ஆரம்பித்திருக்கிறது.

வரலாறு இவ்வளவு ஆபத்தான விஷயம் என்று யாரேனும் முன்பு எதிர்பார்த்திருப்பார்களா?

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading வரலாறு ஓர் ஆபத்தான விஷயம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: