நம் நம்பிக்கைதான் நம் வரலாறு-2

January 8, 2017 § 1 Comment


என் பதிவை எத்தனைப் பேர் படிக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாது. நம் பிக்கையே நம் வரலாறு’ என்பதைப் படித்துவிட்டு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது.

‘நம் பழம்பெரும் இலக்கியங்களை ஆக்கியவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள வரலாறெல்லாம் கற்பனை என்கிறீர்களா?’ என்று சற்றுக் கோபமாகக் கேட்டார்.

‘பழம்பெரும் தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் மட்டுமில்லை, வால்மீகி, வியாசர், காளிதாசன், பவபூதி,பரதர் (நாட்டிய சாஸ்திரம்)ஆகிய எல்லாரையும் பற்றி நமக்கிருப்பது நம்பிக்கைதான். வரலாற்று ஆவணம் எதுவும் கிடையாது’ என்றேன்.

‘ நேரில் வந்து பேசலாமா?’ என்று அவர் கேட்டது சற்று அச்சுறுத்துவது போலிருந்தது.

’ஏன் ஃபோனிலேயே பேசலாமே?’ என்றேன் நான்.

‘ஷேக்ஸ்பியர் பெயரில் வழங்கும் நாடகங்களை அவர் எழுதவில்லை.  வேறொருவர் எழுதியிருக்கிறார் என்கிறார்களே, அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? ‘

‘ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இருந்தார், அவர் அப்பா பெயர் ஜான், அம்மா பெயர் மேரி ஆர்டன், ஷேக்ஸ்பியர் பிறந்த ஆண்டு,இறந்த ஆண்டு, அவர் அப்பா குப்பையைக் கொட்டியதற்காகக் ஊர் ஒன்றியத்தினால் தண்டிக்கப்பட்டு அவர் தண்டனை கொடுத்த செய்தி, ஷேக்ஸ்பியர் மகன் ஹாம்னெட் பதினொன்றாம் வயதில் இறந்த குறிப்பு  ஆகிய எல்லாவாற்றுக்கும் ஆவணங்கள் இருக்கின்றன. ஷேக்ஸ்பியர் நாடகக்காரர் என்பதற்கும் சான்றுகள் உண்டு. நாடகங்கள் அவர் எழுதியவைதானா என்பதைப் பற்றித்தான் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் நமக்கு, வால்மீகி இருந்தார், வியாசர் இருந்தார், தொல்காப்பியர் இருந்தார், திருவள்ளுவர் இருந்தார் என்பதற்குச் சரித்திரப் பூர்வமாக என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? தமழ் நூல்களைப் பொறுத்த வரையில், இலக்கிய, இலக்கண நூல்களினின்றும் மேற்கோள்கள் பின்னால் வந்த உரையாசிரியர்களால்  எடுத்துக் காட்டப்படுவதைத் தவிர, அந்நூலாசிரியர்களைப் பற்றி என்ன குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன ? பெரும்பாலான உரையாசிரியர்கள் நூல்களின் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை.

‘இறையனார் அகப்பொருள் உரை’யிலிருந்து, ‘விநோத ரசமஞ்சரி’ வரை காணும் கட்டுக்கதைகளைத்தாமே நம் வரலாற்றுக் குறிப்புக்களாக பாவித்து வந்திருக்கின்றோம்?  கல்வெட்டுக்களில் கூட நம் மா பெரும் இலக்கிய ஆசிரியர்களைப் பற்றிக் குறித்து வரலாற்றுச் செய்திகள் இல்லை என்பது வியப்பைத் தருகிறது. அரசர்கள்,ஆச்சார்யர்கள் பற்றிய நூல்கள் கூட, அதாவது, ‘மூவர் உலா’,  ’கலிங்கத்துப் பரணி’ ‘இராமாநுசநூற்றந்தாதி’ ‘குருபரம்பரைப் பிரபாவம்’ போன்றவை கூட’ hagiography’  செய்திகளாக இருக்கின்றனவே தவிர, அவற்றில் சரித்திரம் எங்கே இருக்கிறது?’

இப்படி ஒரு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்திய பிறகுதான் எனக்கு உறைத்தது, தொலைபேசி எதிர்ப்புறத்தின் அதிர்ச்சிதரும் அமைதி. அவர் எப்பொழுதோ தொலைபேசியைக் கீழே வைத்திருக்க வேண்டும்!

 

 

Advertisements

§ One Response to நம் நம்பிக்கைதான் நம் வரலாறு-2

  • வழக்கம் போல் சிந்தனையைக் கிளறுகிறது. தற்காலமே நமது நம்பிக்கை (அல்லது) பயம்தானோ என்று தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading நம் நம்பிக்கைதான் நம் வரலாறு-2 at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: