தொல்காப்பிய அகத்திணையியல் நாடக இலக்கணம்.

January 1, 2017 § Leave a comment


‘சங்கப் பாடல்களில் நாடகக் கூறுகள்’ என்பதைக் காட்டிலும், ‘சங்க அகத்திணை ஓரங்க நாடகங்கள்’ என்று கூறுவது இன்னும் பொருந்துமெனத் தோன்றுகிறது.

தொல்காப்பியம், ஏற்கனவே இருந்திருக்க்க் கூடிய பெரும்பான்மையான சங்க நூல்களை அடிப்படையாக வைத்துக்  கொண்டு எழுதப்பட்ட இலக்கணம் என்றால், தொல்காப்பியத்திலுள்ள ‘அகத்திணையியல், களவியல், கற்பியல்’ ஆகிய அதிகாரச் சூத்திரங்கள் அரங்கியலுக்காகவே எழுதப்பட்டவை என்று கருத வேண்டியிருக்கிறது.

ஒரு நாடகத்துக்குக் கதா பாத்திரங்கள் வேண்டும். அவர்கள் எந்தெந்தச் சூழ்நிலையில் என்னென்ன  பேச வேண்டும் அவர்கள் இருக்கும் இடம் எது, அவர்கள் இருக்குமிட்த்தின் பூகோளப் பின்னணி என்ன, எந்தெந்த நேரத்தில் அவர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள் போன்ற செய்திகளும் நாடக இலக்கணமாகின்றன..

தொல்காப்பியம் இவை அனைத்தையும் சூத்திரங்களாக விளக்குகிறது . சங்கப் பாடல்களை மனத்தில் கொண்டுதான் தொல்காபியர் இச்சூத்திரங்களை யாத்திருப்பார் என்று உறுதியாகக் கூறலாம். தலைவிக் கூற்று, தோழிக் கூற்று, செவிலித்தாய்க் கூற்று, நற்றாய்க் கூற்று, காமகிழத்தியர் கூற்று என்று இக்கூற்றுக்கள் நிகழும் இடத்தை வகைப்படுத்தியிருப்பது,, ஒவ்வொரு அகத்திணையியல் சங்க பாடலாகிய ஓரங்க நாடகத்தை மனத்தில் கொண்டுதான்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்திணைகளுக்குக் குரிய ஒழுக்கங்களும் நாடகம் சார்ந்தே வருகின்றன.

’நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிருபாவினும்

உரியதாகும் என்மனார் புலவர்., ’

என்கிறார் தொல்காப்பியர்.

நாடக வழக்கு என்றால் என்ன?

இளம்பூரணர் கூறுகிறார்: ‘ சுவைபட வருவனெல்லம் ஓரித்து வந்தனவாகத் தொகுத்து கூறல். அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிட த்து மின்றி எனவும், அவ்வுழிக் கொடுப்போருமின்றி அடுப்போரு வேட்கை மிகுதியால் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நட த்தி இலக்கண வகையால் வரைந்தெய்தினார் எனவும் பிறவும் இந்திகரானவைகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாக் கூறல்’

யதார்த்த வாழ்க்கையில் நடப்பன போல் அல்லாமல், கற்பனையாக க் கதைத் தொடர்ச்சியுடன், சற்று மிகைபட(Stylized) கூறுதல் என்பது இதன் பொருள். ஆகவே யதார்த்த வாழ்க்கையில் அந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று கூறுவது .பாரதி கூறுவது போல், காவியத்தே நாடகத்தே காதலை வரவேற்கின்றார்கள், சமூக நடப்பில் காதல் என்றால் பாடைக் கட்டி விடுகின்றார்கள் என்பது உண்மைதான்.

‘கதைத் தழுவி வருவது கூத்து’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார். கதை என்பது புனைந்து கூறுவது என்கிறார் அடியார்க்குநல்லார்.

’உலகியல் வழக்கை’  விளக்கும்போது, ‘ உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருதல்’ என்று இளம்பூரணர் கூறியிருப்பதால், உலகத்தார் வாழ்க்கை, ஒருங்குசேர, சுவைபட, அமைவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறாரா என்று எண்ண வேண்டியிருக்கிறது.

ஆகவே, நாடகத்தில் கற்பனை மெருகு ஊட்டி, நாடக மரபுக்கு\

ஏற்ப ப் பாடல்கள் அமைய வேண்டும். அவை தன் கூற்றாகவோ, உரையாடல்களாகவோ (கலிதொகை) அமையலாம்.,

புறத்திணைப் பாடல்கள் உலகியல் வழக்கைச் சொல்கின்றனவா என்ற கேள்வி எழக்கூடும். இளம்பூரணர், ‘ புறப் பொருள் உலகியல்பாலன்றி வாராமையின் அது நாடக வழக்கு அன்றாயிற்று’ ‘ என்று கூறியிருப்பதனால், புறப்பொருள் உலகியல் வழக்காக க் கூறப் பட்டிருக்கலாமென்று தோன்றுகிறது.

‘பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல்’ அனத்தும், ‘ பாடல் சான்ற புலனெறி வழக்காக க் கருதப் பட்டிருக்கலாம்.

தொல்காப்பியர் நாடகத்துக்கு ஏற்றதாக க் கலிப்பாவையும் பரிப்பாட்டையும் குறிப்பிடுகிறார் சங்க நுலாகிய ‘பரிபாடலில்’. ஆக்கியோன், இசை அமைத்தவன், பண் (ராகம்) அனைத்துத் தகவல்களும் தரப்படுகின்றன. ஆகவே இந்தியாவில், காலத்தால் மிகவும் மூத்த இசை தமிழிசைதான் என்று தெரிகின்றது. தமிழிசைதான் கி’பி’ 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு கர்நாடக இசை என்று வழங்கலாயிற்று. சிலப்பதிகார இசை, நாடகச் சொற்கள் பல பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சம்ஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்க்க க் கூடும் என்கிறார் டாக்டர் உ,வே.சா.

தொன்று தொட்டுத் தமிழில் இந்த நாடக, இசை மரபு இருந்து வந்த காரணத்தினால்தான், கம்ப ராமாயணத்தில், உணர்ச்சிச் செறிந்த இடங்களில் அது நாடக க்காப்பியமாகிவிடுகிறது. வால்மீகி ராமாயணம், கவித்வ வருணனைகள் மிகுந்திருந்தாலும், எந்த இடத்திலும் நாடகப் பாங்கு புலனாகவில்லை.. வழக்காற்றில் ‘கம்ப நாடகம்’ என்று கூறப்படுவதையும் கவனிக்க வேண்டும்..கம்,ப ராமாயணதில் தோய்ந்த அருணாச்சலக் கவிராயர், தாமியற்றிய நூலுக்கு ‘இராமநாடகக் கீர்த்தனை’ என்று தமிழின் நாடக, இசை மரபுக்கேற்ப்ப் பெயரிட்டார்.

தமிழ் நாடகங்களுக்கு முன்னோடி சங்காகப் பாடல்கள், நாடக இலக்கணம் தொல்காப்பியம்.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading தொல்காப்பிய அகத்திணையியல் நாடக இலக்கணம். at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: