படைப்பாளியின் மடைப்பள்ளி

December 30, 2016 § Leave a comment


உணவு விடுதிகளுக்குள் சென்றால் அவற்றின் சமையலற்களுக்குள் எட்டிப் பார்க்க க் கூடாது என்பார்கள். பார்த்தால், நமக்குச் சாப்பிடப் பிடிக்காமல் போகலாம். அது போல், எழுத்தாளனின் ‘சமையலறை’’ அவன் ஒரு படைப்பை உருவாக்குவதற்குக் குறித்து வைக்கும் குறிப்புக்கள், எழுதுவதற்கு முன் அவன் இதற்காகச் செய்யும் பிரயத்தனங்கள்.

நமக்குச் சமையலறை முக்கியமன்று. சாப்பிடப் போகும் பண்டந்தான்.முக்கியம். அதுபோல்தான் நாம் அக்கறைச் செலுத்தவேண்டியது எழுத்தாளனின் படைப்பு.

ஆனால் சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பதென்பது ஒரு சுவைமிக்க அநுபவம்.

நம்முடைய தமிழ்க் கவிஞர்கள் அந்தக் காலத்தில் எப்படி எழுதினார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒரு மாபெரும் கவிஞனாக இருந்துவிட்டால், சரஸ்வதி அவன் நாக்கில் வந்து எழுதியதினால்,, அவன் ‘மட மட’ வென்று கவி பாட ஆரம்பித்துவிட்டான் என்ற கற்பனையை வரலாற்றுக் குறிப்பாகச் சொல்லி விடுவோம்.

ஆகவே வரலாற்றுக் குறிப்புடன் இருக்கும் மேல்நாட்டு எழுத்தாளர்கள் எப்படி எழுதினார்கள் என்று பார்ப்போம்.

ஆல்பர்டோ மொராவிய ஒரு நல்ல இத்தாலியப் படைப்பாளி..அவர் கூறுகிறார்:’ நான் காலையில் 5.30 மணிக்கு எழுந்து இத்தனைப் பக்கங்கள் எழுதவேண்டுமென்று வரையறுத்துக் கொண்டு எழுதுவேன். மேசையின் முன் உட்காருவதற்கு முன்னாலோ அல்லது எழுதி முடித்த பிறகோ ,நான் எழுதும் கதையைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்’’  அதனால்தான் மொராவியாவின் விமர்சகர்கள் அவர் ஒரு நிலைக்கு மேல்  எழுத்தாளராக உயரவில்லை என்கிறார்கள்.

ஆந்தனி ட்ராலப் என்ற விக்டோரியா காலத்து எழுத்தாளர் பதினைந்து நிமிடங்களுக்கு 250 வார்த்தைகள் என்று பத்துப் பக்கங்கள் கட்டாயாமாக எழுதிவிடுவாராம். ஆண்டுக்கு 3650 பக்கங்கள். நம்முடைய தற்காலத்திய தமிழ் எழுத்தாளர்கள் சிலர் அவரை முன்னோடியாக க் கொண்டிருப்பார்கள் என்று தெரிகீரது. அவருடைய ‘பார்செஸ்டர்ஷையர் நாவல்’ பல பாகங்களையுடைய மிகப் பெரிய படைப்பு.. நான் பி.ஏ.வகுப்பு படிக்கும் போது அந்நாவலின் ஒரு பகுதியாகிய ‘தி லாஸ்ட கிரானிகல் ஆஃப் பார்ஸெஸ்ட்’ எனக்குப் பாடமாக இருந்தது. சுமார் 700 பக்கங்கள். என் வகுப்பில் அந்நாவலை முழுவதும் படித்தவர் ஒருவர்தாம். அவர் எங்கள் ஆசிரியர்.

புதுமைப்பித்தன் கற்பனையில் பல கதைகளுக்கான கரு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்குமாம். அவரே இதைப் பற்றி எழுதியிருக்கிறார். இதற்குத் தீவீராமான நினைவாற்றல் வேண்டும். பாரதியும் புதுமைப்பித்தனைப் போல் குறிப்புக்கள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அவர் பாதிக்கப்பட்ட கணத்திலேயே பாட்டு பிறந்துவிடும். வேர்ட்ஸ்வொர்த் சொல்வது போல் ‘ emotions recollected in tranquility’ என்ற விவகாரம் அவருக்குக் கிடையாது.

ஆனால் பாரதிக்குப் பிடித்த கவிஞர் ஷெல்லி ஏராளமான குறிப்புக்களையுடைய கையேடுகள் பல வைத்திருப்பாராம். ஆனால் அவர் வைத்திருந்த குறிப்புகளுக்கும் அவர் எழுதிய கவிதைகளுக்கும் சம்பந்தமேயில்ல என்கிறார்கள். ‘அற்புதமான கருத்துக்களுக்கிடையே, உருளைக்கிழங்கு, பால் உற்பத்திப் பற்றிய புள்ளி விவரக் கணக்குகளும் இருக்குமாம். அவர் ஒரு குறிப்பில் ‘ Truth is imageless, veil is evil’ எழுதியிருக்கிறார்.  ;Veil’ ‘Evil’

என்ற சொற்களை ஒன்றை இன்னொன்றாக மாற்றிவிட முடியும். இதை anagram;\’ என்பார்கள். ஷெல்லி பல கவிதைகளில் இந்த ‘veil’ யைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த ‘veil’ ’மாயை’ என்ற பொருளாக க் கொண்டு ஷெல்லிக்கு அத்வைத த் தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமென்று ஒரு வட நாட்டு ‘அறிஞர்’ ஒரு ‘மாபெரும்’ நூலை எழுதியிருக்கிறார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading படைப்பாளியின் மடைப்பள்ளி at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: