சாதனையும் வேதனையும்

December 29, 2016 § Leave a comment


டாக்டர் உ.வே. சாமிநாத ஐயருக்குப் பிறகு அவருக்கு இணையாக ஒரு தமிழ் பதிப்பாசிரியரும் தோன்றவில்லையே என்பதுதான் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் கவலையாக இருக்க வேண்டும்.  இன்று எத்தனையோ தொழில் நுட்ப வசதிகள் இருந்தும், தமிழ்ப் பல்கலைகழகங்கள் வெளியிடும் பழைய இலக்கிய நூல்கள் ஐயர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பதிப்பித்த நூல்களின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க, கொஞ்சம் கூட தகுதி இல்லாதவையாகவே இருக்கின்றன. 1892ல் அவர் வெளியிட்ட சிலப்பதிகாரத்தின் முதல் பதிப்பு கூட , மற்றவர்கள் இக்காலத்தில் பதிப்பிக்கும் தமிழ் இலக்கிய நூல்களைவிட மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஐயரின் சிலப்பதிகார முதல் பதிப்பு (1892) பைப் பார்க்கும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. கையெழுத்துப் பிரதிகளின் விவரம்,சிலப்பதிகாரத்தாலும் அதன் உரைகளாலும் தெரிந்த அரசர்கள் பெயர்கள், குறிப்பிடப்படும் நாடுகள், ஊர்கள், மண்டிலம், மலைகள்,ஆறுகள்,பொய்கைகள், கோயில் கொண்ட தெய்வங்கள், புலவர்கள், மற்றைய உரையாசிரியர்கள், உரைகளில் கண்ட நூல்கள் என்று அருமையாகப் பட்டியலிட்டுத் தருகிறார்..

தொல்காப்பியம் புறத்திணை இயலில் ‘குடை நிழல் மரபு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார் என்ற நினைவு. சூத்திரத்தின் எண்  மறந்து விட்டது  அண்மைகாலத்தில் பதிப்பிக்கப் பட்ட தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரை நூலில் தேடினேன்.  புத்தகம் முழுவதும் தேடிப் பார்க்கும் வயதில்லை. உ.வே.சா சிலப்பதிகாரப் பதிப்பை எடுத்துப் பார்த்தேன்.  தொட்ட வுடனேயே கிடைத்துவிட்டது. சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்குநல்லார் தொல்காப்பிய  த்துக்கு நச்சினார்க்கினியர் உரை என்று மேற்கோள் காட்டுகிறார்.உ.வேசா புறத்திணையியல் 36 என்று சூத்திரத்தின் எண்ணை எடுத்துக் காட்டியிருந்தார். பிறகு நச்சினார்க்கினியர் சிலப்பதிகாரத்தை எங்கெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தேன். ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஐயரின் பதிப்பு ஒரு கருவூலம். Google கூடத் தேவையில்லை!

அந்தக் காலக் கட்டத்தில், ஆங்கில அறிவு ஏதுமில்லாமல், மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இலக்கிய நூல்களின் பதிப்புகளுக்கு இணையான ஒரு சாதனையை  ஐயர் அவர்களால் எப்படி செய்ய முடிந்தது? அதுதான் என் பிரமிப்பு. அதே சமயத்தில் இப்பொழுது நம் பல்கலைக்கழகங்கள் வெளியிடும் பதிப்புக்களைப் பார்க்கும்போது வேதனைதான் மேலிடுகின்றது!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading சாதனையும் வேதனையும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: