கம்ப ராமாயணத்துக்கு ஏன் பழைய உரை இல்லை?

November 22, 2016 § 3 Comments


தமிழ் இலக்கிய வரலாற்றில் என்னைப் பல கேள்விகள் விடை காண முடியாதவாறு அரித்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

பத்தாம் நூற்றாண்டிலோ அல்லது பனிரெண்டாம் நூற்றாண்டிலோ, கம்ப ராமாயணம் எழதப்பட்டதென்றால், 13,14,15,16 ம் நூறாண்டுகளில் வாழ்ந்த உரையாசிரியர்களில் ஒருவர் கூட கம்ப ராமாயணத்துக்கு உரையோ அல்லது அவர்கள்  எழுதிய உரைகளில், இந்நூலினின்றும் மேற்கோளோ எடுத்துக் காட்டவில்லை? பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சமண நூலாகிய சீவகசிந்தாமணிக்குச் சைவர் என்று கருதப் படுகின்ற நச்சினார்க்கினியர்  உரை எழுதியிருக்கிறார்.  சமயச் சார்ப்பற்ற திருக்குறளுக்கு வைணவராகிய பரிமேலழகர் உரை கண்டார். நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர் போன்ற பலர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியுள்ளனர். மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாருக்குப் பரிமேலழகர் எழுதிய உரை கிடைக்கிறது.  சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாவற்றுக்குப் பழைய உரைகள் கிடைக்கின்றன.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்துக்கு, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்தே இராமாநுஜர் பணித்தபடி, வியாக்கினாங்கள் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், இவற்றில் கூட , மணவாள மா முனிகளைத் தவிர மற்றவர்கள், வால்மீகி ராமாயணத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டிருக்கிறார்களே தவிர, கம்ப ராமாயணத்தைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் கம்பரோ சடகோபர் அந்தாதி என்று நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியிருந்தும், கம்பருடைய தமிழ் இலக்கியத்துக்கு மணிமகுடம் போன்ற  கம்பர் படைத்த நூலை, இந்த வைணவ வியாக்கியான ஆசிரியர்கள் ஏன் குறிப்பிடவேயில்லை என்று புரியவில்லை. ஈட்டில், நம்பிள்ளை, திருக்குறளை மேற்கோள் காட்டி, ‘என்று தமிழன் கூறியிருப்பது கண்டாயே’ என்கின்றார். ‘தமிழன்’ என்ற சொல்லாட்சியின் தொனிப் பொருள் புரியவில்லை.

அந்தக் காலத் தமிழன், கம்ப ராமாயணத்தைப் படித்ததும் புரிந்து கொள்ள முடிந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், கம்பனுக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது என்பது, அவனைப் பற்ரியும்  படைப்பைப் பற்றியும் வழங்கும் சொல்லடைகளினின்றும் புரிகின்றது.

 

 

 

Advertisements

§ 3 Responses to கம்ப ராமாயணத்துக்கு ஏன் பழைய உரை இல்லை?

  • A.Seshagiri. says:

    மணவாள மாமுனிகள் எந்த வியாக்ஞானத்தில் கம்பராமாயணத்தை எடுத்தாளுகிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

  • மணவாள மாமுனிகள் எந்த வியாக்ஞானத்தில் கம்பராமாயணத்தை எடுத்தாளுகிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

    • மேற்கோளாக எடுத்துக் காட்டவில்லை.கம்ப ராமாயண வழி ஒரு குறிப்பிட்ட நிகழ்வை எடுத்து ஆளுகிறார். எந்த இடமென்பது நினைவுக்கு வரவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கம்ப ராமாயணத்துக்கு ஏன் பழைய உரை இல்லை? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: