’ஒன்றும் ஒன்றும் ஒன்றே வாம்’

November 2, 2016 § Leave a comment


அண்மையில் ஓர் அமெரிக்கப் பத்திரிக்கையில் அமெரிக்காவில்தான் உலகிலேயே மிக அதிகமான மனோவியல் மருத்துவர்கள் இருப்பதாகச் செய்தி வந்தது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் அமெரிக்காவில்தான் ஸ்கீட்சோஃப்ரெனியா (Schizophrenia) என்ற மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்ற புள்ளிவிவரமும் பிரசுரமாகியிருhந்தது.

இது சரியான தகவலா என்று என்னால் சொல்லமுடியாது. காரணம், சீனாவிம் மக்கள்தொகையை வைத்துக் கொண்டு, சீனாவில்தான் மகப்பேறு மருத்துவர்கள் அதிகம் என்று ஒருவர் வழக்காடலாம். அமெரிக்காவிதான், இயல்பான மனிதன் ( normal man) என்று யாருமில்லை என்ற கருத்து நிலவுகிறது. ‘ ஓர் இயல்பான் மனிதனைக் காட்டுங்கள், அவனை நான் குணப்படுத்துகிறேன்’ ( Show me a normal man, I will cure him’ ) என்று கூறினாராம் அமெரிக்க மனோதத்துவ நிபுணர் யூங்.(Jung) .

ஸ்கீட்சோஃப்ரெனியா என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரட்டை மனநிலை இருப்பதுதான் அவர்கள் பிரச்னை. ஒரு மன நிலையில் இயல்பாக இருப்பார்கள். இன்னொரு மன நிலையில் அவர்கள் தாமாகவே கற்பித்துக் கொண்ட உலகில் இருப்பார்கள். நடைமுறை உலகம் பற்றிய பிரக்ஞையே இருக்காது.

இவ்வாறு பிளவுப்பட்ட மனநிலைக்கு என்ன காரணம்?

இது ஈடன் தோட்டத்திலிருந்து தொடங்கியது என்கிறார் ஒரு

மனோதத்துவ அறிஞர். ஈடன் தோட்டத்தில் ஆதமும் ஏவாளும் சைத்தான் வரும் வரை தாங்கள் இரண்டு பேர் என்று அறிந்திருக்கவே யில்லை. ஈடன் தோட்டத்தில் இருந்த பொருள்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் தொடர்ச்சியாகவே இருந்த்தேயன்றி ஒவ்வொன்றுக்கும் ஓர் தனி அடையாளம் உண்டு என்பதை உணரவே யில்லை. ஆப்பிள் தன்னினின்றும் வேறானது, அதை நுகர முடியும் என்ற அறிவைச் சுயநலக் காரணங்களுக்காக ஏவாளுக்கு அறிவுறுத்தியவன் சைத்தான். அங்குதான் நுகர்பொருள் கலாசாரம் துவங்கியது. முதல் விற்பனையாளன் சைத்தான்.

அனைத்தும் ஒரு பொருளின் தொடர்ச்சி என்று நினைத்து வந்த ஏவாளுக்கும் ஆதமுக்கும் முதல் அதிர்ச்சி அவர்கள் இருவரும் வேறானவர்கள் என்பதுதான்.  ஒன்றும் ஒன்றும் இரண்டு.,ஒன்றில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் பிரிவினையை  உணர்ந்த உடல் ரீதியான அதிர்ச்சிதான் ( biological shock)  இந்த மன வியாதியின் ஆரம்பம் என்று  ஒரு மனோவியல் அறிஞர் கூறுகிறார்.

நம்முடைய தத்துவப்  பாரம்பரியத்திலே ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான். ’ஏகம் சத் பகு வதந்தி’ உண்மை (பரம்பொருள்0 ஒன்றுதான். பலவாக, மாயையின் காரணமாக தோற்ற மயக்கங்களாகின்றன என்கிறது அத்வைதம். பரம்பொருளே ஆணுமாக இருக்கிறது, பெண்ணுமாக இருக்கிறது.(அர்த்தநாரீஸ்வரர்).

அப்படியானால், நம் நாட்டில் மன நோய்க்கு உட்பட்டவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லி விடமுடியுமா? நாம் மன நோய் பற்றித் தீவீரமாக அக்கறைக்  கொள்ளுவதில்லை என்றே தோன்றுகிறது.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேராசிரியர் மன நோய்க்கு உள்ளானவ்ரென்று பத்து ஆண்டுகளுக்குப் பின்புதான் கண்டுபிடிக்கப்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நன்கு குணமானபின், அவ்ருக்கு மன நோய் என்று பல்கலைக்கழகம் அவரை வேலையினின்றும் நீக்கிவிட்டது. காரணம், அவர் ஒழுங்காக வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுத்ததால்தான் என்று சொல்வார்கள்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading ’ஒன்றும் ஒன்றும் ஒன்றே வாம்’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: