குறுகிய வட்டம்

October 18, 2016 § 2 Comments


முதலில், என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் நுகர் பொருள் கலாசாரத்தை அடியோடு வெறுப்பவன். அதனால்தான், பத்தாண்டுகள் நான் வைத்திருந்த பச்சை அட்டை உரிமையை அமெரிக்க அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்னையில் வசித்துவருகிறேன். ஆனால், வெவ்வேறு காரணங்களுக்காக, ஓர் எழுத்தாளர் பொது ஜன அபிமானத்துக்கும், மேட்டிமையார் பாராட்டுக்கும் உரியவராக இருந்தால், அவர் எழுத்தை நுகர்பொருள் கலாசாரத்தைச் சார்ந்தது என்று புறக்கணித்து விட முடியாது. ஷேக்ஸ்பியர்  நாடகங்கள் அவர் காலத்திலேயே அதிகம் படித்திராத சாதாரண மக்களின் அபரிதமான கைத்தட்டலையும், பென் ஜான்ஸன் போன்ற படித்த படைப்பாளிகளின்  பாராட்டையும் பெற்றிருக்கின்றன. காரணங்கள் வெவ்வேறாக இருக்கக் கூடுமென்பதை ஜெயமோகன் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

அவர் குறிப்பிடும் Mylored Pavic, எண்பதுகளிலேயே ஐரோப்பா முழுவதும் அவர் முதல் நாவல் ‘The Dictionary of the Khazars’ என்பதாலும், கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். ஐரோப்பிய மொழிகள் பெரும்பாலும் அனைத்திலும் மொழி ஆக்கம் செய்யப்பட்டவர். அவர் முதல் நாவல் மிகவும் வித்தியாசமான தத்துவார்த்தமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நோபல் கமிட்டி ஐரோப்பா, அமெரிக்காவுக்கு வேளியே தங்கள் பார்வையைச் செலுத்துவதில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாவிக், அப்பரிசைப் பெறும் தகுதி இருந்தும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்குக் கொடுக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆகவே, பாப் டிலன், தம் வித்திதியாசமான குரலாலும், அவர் தேர்ந்தெடுத்த இசை மரபுகளினாலும், இசைக்கருவிகளாலும் , பிரபலமாவதற்குக் காரணம் என்றாலும், அவர் பாடிய பாடல்களின் கருப் பொருள் நேர்மைதான் அக்காலக் கட்டத்தில் முப்பதுகளில் இருந்த என் போன்றவரை ஈர்த்தது. போன் நூற்றாண்டு அறுபதுகளில் இளைஞர்களாக இருந்திருந்தால்தான், சுதந்திரத்துக்கு முன் கனவுகள் கண்டு, அரசியல் உலக ஏமாற்றங்களினால், சோகத்தின் நீடசியாக மனத்தை உலுக்கிய அற்புத இசையின் செவ்வியல் ஏற்றத்தை உணர்ந்திருக்க இயலும். இதை உணரச் செய்வதற்காக, அவர் பாப் உருவாகிய ambience  பெரும் பணி ஆற்றியது.

ஆழ்வார் பாடல்களின் சொல்லாட்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். திருவாய்மொழி மொழியி 10-9 ல் வரும் பத்துப் பாடல்களை நான் பல் முறைகள் படித்திருக்கிறேன், 1967க்கு முன்னால். 1967ல் என்  தந்தை இறந்த போது, அவர் உடலை தனம் செய்ய வாசலுக்கு எடுத்துப் போகும்போது, வைதிகர்கள், ஒருமித்த குரலில், திருவாய்மொழி 10-9 ல் வரும் பாடல்களைப் பாடத் தொடங்கியதும் என் மெய்சிலிர்த்தது. காரணம், எந்தச் சுழ்நிலையில், எந்தச் சந்தர்ப்பத்தில் அவைப் பாடப்பட வேண்டும், பாடினால் தாக்கம் ஏற்படும் என்று அவர்களுக்குக் கர்ண பரம்பரையாகத் தெரிந்திருக்கிறது.

‘சூழ் விசும்பு அணிம் உகில் தூரியம் முழக்கின

ஆழ் கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின

ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே’

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு வைகுண்டத்தில் கிடைக்கும் வரவேற்பைக் குறிப்பிடுகிறது பாடல்.  இயலாகப் படித்த போது கிடைத்த இலக்கிய இன்பத்தைக் காட்டிலும் ,குறிப்பிட்டச் சுழ்நிலையில் இசையாக க் கேட்டபோது, அவ்வின்பம்  சோகத்தை அதிகமாக்கியதியது. பாப் டிலனும் இதைத்தான் சொல்லுகிறார் ‘ Behind every joy there is pain’.  இதை அநுபவமாக உணரும்போதுதான் தெரியும். ‘The sweetest songs are those that tell us the saddest of thoughts’ என்றான் ஷெல்லி.

பிரபல இலக்கியம், குறுகிய வட்ட இலக்கியம் என்ற பாகுபாடுகள் எல்லாம்,  ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின், சமூக ஏற்றத் தாழ்வுகள், கேள்விக்கு உள்ளான போது, மேட்டிமை வர்க்கம், தம் பிரத்யேக உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் செய்த பாகுபாடுகள். ஷேக்ஸ்பியர் நாடகங்களை எலிஸபத் காலத்திய கல்வி அறிவு இல்லாத மக்கள்  குதூகலத்துடன் வரவேற்பதற்கு என்ன காரணம்? நல்ல இலக்கியம் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு ரஸனை எல்லைகளை யுடைய மக்களால் அநுபவிக்கப்படலாம். இதற்குப்  பொது இலக்கிய அளவுகோல் என்று எதுவும் கிடையாது.

நல்ல இலக்கிய நூல் அநுபவத்தை அந்தக் காலத்திலேயே  கடுமையான  விமர்சனக் கோட்பாட்டுச் சிறையில் அடைத்திருந்தார்களானால், இன்று இராமயணமோ, மஹாபாரதமோ, இலியத்தோ இருந்திருக்க மாட்டா.

 

 

 

§ 2 Responses to குறுகிய வட்டம்

  • Bala Kumar says:

    Super ji…..

  • Ramji Ramachandran says:

    I can never subscribe to any pre-defined concept of what literature is or should be. On the other hand, I strongly feel everything is transient,not only changing from one person to another but changing over time. Take the example of poetry. There was a time poetry was in the hands of an old boys club kind of people who would not allow any deviation ( நெற்றிக் கண் திறந்தாலும்) lest it should dilute their elitism and control. But, ultimately, pure poetry won and today one can see poetry in practically everything.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading குறுகிய வட்டம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: