பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?

October 15, 2016 § 4 Comments


‘இலக்கியம் பேச்சு வழக்கில் தொடங்கியிருக்க வேண்டும்’ என்றார் ஸ்டெயின்பெக். என்னைப் பொறுத்தவரையில், இலக்கியம் பாட்டு வழக்கில் ஆரம்பித்தியிருக்க வேண்டும். பிரபஞ்சமே ஒரு லய ஒழுங்கில் இருக்கும்போது, அது மனிதனை பாதிக்காமல் இருந்திருக்காது. சந்தம் அவன் மரபு அணுவில் கலந்திருக்கிறது.

சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. சந்தம் இயல்பாக அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் அவை அமைந்திருப்பதற்கு ஏற்ப, யாப்பிலக்கணம் உருவாகியிருக்கிறது.

இவ்வெண்ணங்கள் என் மனத்தை ஆட்கொண்டதற்குக் காரணம், இவ்வாண்டு நோபல் பரிசு பாப் டிலன் கவிஞர்-பாடகருக்குக் கொடுக்கப் பட்டிருப்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைதான்.

போன நூற்றாண்டு அறுபதுகளில், சிந்திக்கத் தெரிந்த ஆங்கில மொழி பரிச்சயமான இளைஞர்களையும் நடுவயதினரையும் தன் வயப் படுத்திய ஒரு மாபெரும் ரஸாநுபவம் பாப் டிலனின் பாடல்கள், அவர் அவற்றைப் பாடின விதம். அமெரிக்க நாட்டார் இசை, பூர்வ குடியினர் இசை, கறுப்பர்கள் Blues, jazz, இசை, அக்காலக்கட்டத்தில் உலகை உலுக்கிய ராக், எல்லாம் கலந்த ஒரு மா பெரும் இசை இயக்கத்தைத் தொடங்கியவர் பாப் டிலன். நிற வெறி, உலக நாட்டாண்மை  மக்கள் உரிமை மறுப்பு  இவற்றையெல்லாம் எதிர்க்கும் ஸ்தாபன விரோதமாக அவர் இசை இயக்கம் உலகெங்கும் பரவியது.

‘Blowin’ in the wind’, ‘ Like a rolling stone’,  ‘The Times they are a changin’, ‘ Mr.Tamburine Man’,  ‘Don’t think twice, it is All Right’ போன்ற பாடல்கள் அறுபதுகளில், எந்த அளவுக்கு, Truman Capote, Norman Mailer, ஆகியோர் இலக்கிய நூல்கள் என்னைப் பாதித்தனவோ அந்த அளவுக்கு எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தின என் முப்பதுகளில்.

இருபதாம் நூற்றாண்டு அறுபதுகள்  மேற்கத்திய உலகில் ஒரு கலாசார

புரட்சி யுகம்.  அச்சூழ்நிலையின் பின்ணணியில்தான், பாப் டிலன் இசையையும், அவர் பாடல்களையும் பார்க்க வேண்டும்

சங்க காலக் கவிஞர்களாகிய பாணர்களும், விறலியரும், கூத்தர்களும், ஊர் ஊராகச் சென்று மக்கள் முன்னிலையிலோ, அல்லது அவர்களை ஆதரிக்கத் தெரிந்த புரவலர்கள் முன்னிலையிலோ இன்று இலக்கியங்களாக க் கருதப்படும் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். அனைத்தும் வாய்மொழி இசை.  சில நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தொகுக்க ப் பட்டிருக்கின்றன. ’இறையனார் களவியல் உரை’ கற்பிதமாயினும் வரலாற்று உண்மை இல்லாமலில்லை.

பாப் டிலன் பாடல்கள் இலக்கியமாகுமா என்ற விவாதம் இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அர்த்தமற்றது.  மக்கள் சமுதாயத்தில் ஒரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் எந்தக் கலைத் துறை வடிவமும் இலக்கிய மரபைச் சேர்ந்ததுதான். சர்ச்சிலின் போர்க்காலச் சொற்பொழிவுகளுக்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்த நோபல் கமிட்டி, பாப் டிலனின் நேர்மையான உணர்ச்சி மிக்கப் பாடல்களை இலக்கியம் என்று சொல்வதில் என்ன தவறு? சர்ச்சிலின் சொற்பொழிவுகள், பிரிட்டானிய மக்களுக்கு அந்தக் காலக் கட்டத்தில் ஓர் அசாத்திய தன்னம்பிக்கையை அளித்தது என்பதில் சந்தேகமில்லை.

போரும் காதலும் மிகுந்த சங்கப் படல்களுக்கிடையே, ‘ யாதும் ஊரே, யாவரும்’ கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் ஒரு மாற்றுச் சிந்தனை. அதே சமயத்தில், சங்க காலப் பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு காலக் கட்டங்களில்,(வெவ்வேறு நூற்றாண்டுகளில்?) பாடப் பட்டிருக்க வேண்டுமென்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். இது இன்னும் விரிவாக ஆராயப் படவில்லை.

எனக்கு மேற்கத்திய பாட்டு மரபில் மிகவும் பிடித்தது ஷோப்பைன். அந்த அளவுக்கு எனக்கு பாப் டிலனும் பிடிக்கும். நாட்டார் இசைப் பின்புலம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

 

 

Advertisements

§ 4 Responses to பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பாப் டிலன் இசை இலக்கியமாகுமா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: