வேடிக்கை மனிதர்கள்

October 11, 2016 § 2 Comments


ஒரு கிரேக்க ஞானி வீதி வழியே செல்லும்போது, குடித்துவிட்டு, ஆனந்தமாக தெருவோரத்தில் ஒருவன் பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் அவனருகே சென்று, ‘ பிழைப்புக்கு நீ என்ன செய்ஜிறாய்?’ என்று கேட்டார்.

‘பிச்சை.’ என்றான் அவன்.

‘ நீ ஏன் கல்வி கற்க வில்லை?’ என்றார் அவர்.

‘ கல்வி கற்றால் என்ன ஆகும்?’

’சிந்திக்கத் தோன்றும். ‘

‘சிந்தித்தால்?’

‘ உலகில் காணும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்’

‘விடை கிடைத்தாள்/’

‘ புதிய கேள்விகள் தோன்றும். ‘

‘புதிய கேள்விகள் தோன்றினால்?’

‘ மேலும் சிந்திப்பாய். புகழ் உண்டாகும்’

‘புகழ் உண்டானால்?’

‘நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய். ‘

‘நான் இப்பொழுதே மகிச்சியுடந்தான் இருக்கிறேன். வீணாக எதற்கு இத்தனைச் சுற்று வழிகள்?’ என்றான் அந்தப் பிச்சைக்காரன்.

வள்ளுவர் இந்த மாதிரியான பிச்சைக்கரனைப் பார்த்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

‘நன்றறி  வாறிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவல மிலர்’

‘ கயவர்’ என்ற சொல் இப்பொழுது, ‘அயோக்கியர்கள்’ என்ற பொருளில் மட்டுமே வழங்கினாலும், வள்ளுவர் காலத்தில் ,பாரதி சொல்லும் ‘வேடிக்கை மனிதர்” ( philistines) என்ற பொருளிலும் புழங்கியிருக்கக் கூடுமென்று தோன்றுகிறது.

கயவர்கள் கொடுத்துவைத்தவர்கள். மேலும் மேலும் சிந்தித்துக் கேள்விகளைப் பெருக்கி, விடைகளில் காலத்துக்கேற்றபடி முரண்பாடுகளைக் கூட்டித் தங்களைத் துன்புறுத்திக் கொள்ள மாட்டார்கள்.. சிந்திக்கவே மாட்டார்கள். அதுவே அவர்களுக்குப் பேரின்பம்.

ஒளியின் வேகத்தைப் போல் வளர்ந்து வரும் விஞ்ஞானம்,, இப்பொழுதும் இந்நிலையிலும், நம் அறியாமையின் எல்லையை உணர்த்திக் கொண்டே வருகிறது. வள்ளுவரும் இதை அப்பொழுதே உணர்ந்திருக்கிறார். ‘ அறியுந் தொறும் அறியாமைக் கண்டற்றால்’ என்கிறார்.

முப்பத்தைந்து வயதில் நான் உறுதியாக நம்பிய பல தத்துவார்த்தக் கோட்பாடுகள் புதியனவாய் எழுந்த பல கேள்விகளின் காரணமாக அவற்றைக் கேள்விக்குரியன்வாக ஆக்கிவிட்டன. சிந்திக்கும் எவருக்கும் ஏற்படுகின்ற பிரச்னை இது. எப்பொழுதும் ஒரே கொள்கையை விடாப் பிடியாகப் பற்றிக் கொண்டு இருக்க இயலாது. ‘  A foolish consistency is the hobglobin of little minds, small statesmen, philosophers and divines’ என்றார் எமர்ஸன்.

அரசியலைச் சார்ந் தவர்களோ அல்லது ஒரு கோட்பாட்டைத் தத்துவார்த்த ரீதியில் தொழிலாக க் கொண்டவர்களோ ஒரு குறிப்பிட் ட காலக் கட்டத்தில் ஒரு கொள்கையினால் கவரப்பட் டு அதை வாழ்க்கை நெறியாக க் கொண்டு விட்டால், எந்த ஸ்தாபனத்தையும் சாராத ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் சிந்தனை சுதந்திரம் அவர்களுக்கு இருக்க இயலாது என்பதும் சிந்திக்க வேண்டியதுதான்.

 

 

 

 

Advertisements

§ 2 Responses to வேடிக்கை மனிதர்கள்

  • kdsurati says:

    Sir, the quote should read thus: A foolish consistency is the hobgoblin of little minds, adored by little statesmen and philosophers and divines” Also I thought of the types of consistencies, Emerson makes a plea that it is useless to have a foolish consistency. Meaning therefore that a foolproof consistency is not as bad a virtue to hold. I think so.

  • சிந்தனை சுதந்திரம் உள்ளதா எனற தங்கள் கேள்வி (கடவுளை) நம்புவோர் நம்பாதோர் இருவருக்கும் ஒரே அளவில் பொருந்துகிறது.

    சிந்தனையையும் நிர்ச்சிந்தனையையும் ஒரு சேரக் கிளறி இருக்கிறீர்கள். உண்மையான ஆசிரியர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading வேடிக்கை மனிதர்கள் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: