தடி எடுத்தவன் தண்டல்காரன்

October 8, 2016 § 1 Comment


ஜி.கே.செஸ்டர்டன் என்ற ஆங்கிலப் படைப்பாளியின் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்று ‘The Man who was Thursday’.

சர்வாதிகார நாடு ஒன்றில், அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏழு பேர்கள் மிக  உண்மையான பெயர் மற்றவருக்குத் தெரியாது. அவ்வளவு ரகஸ்யம். வார நாட்களின் பெயர்கள் மூலமாகத்தான் ஒருவரையொருவர் அறிவார்கள்.

ஒருவன் பெயர் திங்கள்கிழமை. இன்னொருவன் செவ்வாய். இப்படி ஏழு பேருக்கும் வார நாட்களின் பெயர்.

அவர்கள் திட்டமிடும் செய்தி அரசாங்கத்துக்குக் கசிந்து விடுகிறது என்று அவர்களுக்குத் தெரியத் தொடங்குகிறது. அப்படியானால் அவர்களில் ஒருவர் அரசாங்க உளவாளி. யார் அவர்? ‘வெள்ளிக்கிழமை’! அவர தப்பித்துப் போய்விடுகிறார்.

மறுபடியும் கசிகிறது. இன்னொருவர் அரசாங்க உளவாளி! யார் அவர்.? சனிக்கிழமை! அவரும் தப்பித்து விடுகிறார்.

இப்படியாக, ஏழு பேருமே அரசாங்க ஒற்றர்கள், ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரை வேவு பார்க்கிறார்கள், எதிரி யாரென்றுதான் தெரியவில்லை என்று கதை முடிகிறது.

சர்வாதிகாரத்தை இதைக் காட்டிலும் அழகாகப் படம் பிடித்துக் காட்ட முடியாது. சர்வாதிக்கார ஆட்சியில் நண்பன் யார்,எதிரி யார் என்று .தெரியாது.

  1. இந்திராஜியின் ‘ கருங்கோல்’ ஆட்சியின்போது எனக்கேற்பட்ட அநுபவம். நான் அப்பொழுது தில்லித் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றின் செயலாராக இருந்தேன். அப்பள்ளி மாணவன் ஒருவன் எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில், எல்லாப் பாடங்களிலும் பார பட்சமில்லாமல் ஒற்றைப் படை மதிப்பெண் காரணமாக ‘தேறவில்லை. அம்மாணவனின் அப்பா ‘தில்லியில் உள்ள ‘விஐ.பி’ ‘வி.வி.ஐ.பி களுக்கெல்லாம்.ஐஜோஸ்யம் சொல்லுபவர். அரசாங்கத்தில் பெரிய உத்தியோகஸ்தர்..அவர் முதலில் பள்ளி முதல்வரைத் தொலைப்பேசியில் கூப்பிட்டு மிரட்டினார். அவர் மசியவில்லை. பிறகு என்னைத் தொலைப்பேசியில் கூப்பிட்டு, அவர் பையனுக்கு ‘ பாஸ் ‘ போடும்படி பள்ளி முதல்வருக்கு உத்தரவு இடும்படிச் சொன்னார். ‘ பள்ளி நிர்வாகி என்பதினால்,, பள்ளி ’அகெடமிக்’  விவகாரங்களில் நான் குறுக்கிட மாட்டேன்’’ என்று நான் பதில் கூறிவிட்டேன்..

அந்தப் பெரும் புள்ளி,, தில்லி மாநில லெஃப்டின்ண்ட் கவர்னருக்கு’ ஆஸ்தான ஜோஸ்யர்.’.. அந்தச் செல்வாக்கினால், பள்ளி முதல்வர்  தில்லி அரசாங்க உத்தரவினால் ‘சஸ்பென்’ட்’ செய்யப்பட்டார்..

அவருடைய அடுத்த நடவடிக்கை மூலம்,, தில்லிக்கு வந்த அந்த வார ‘ கல்கி’ இதழ்கள் விநியோக்கிக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டன. காரணம், நான் அப்பொழுது ‘கல்கி’ யில் ’தீவுகள்’ என்ற நாவல் தொடர் வந்தது… ‘ நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்து ‘கல்கி’’ பத்த்ரிகையில்  எழுதுவதால் உங்க மீது அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்க்க் கூடாது என்பதற்குப் பதினான்கு நாட்களில் விளக்கம் கூறுங்கள்’’. எனபதுதான் அக்கடிதம்.

அவ்வாரக் ‘கல்கி’ இதழில் நான் எழுதிருந்த ஓர் உரையாடலைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

என் கதையில், சிகப்பு ‘சிக்னலை’த் தாண்டியதற்காக ஒரு தொழிலதிபரைக் காவல்காரர் பிடிக்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுத்து விட்டுத் தப்பிக்கும் தொழிலதிபர் நண்பரிடம் கூறுகிறார்:’ நான் இவருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் என் பணம் யாருக்குப் போகிறது என்று எனக்குத் தெரியும். அரசாங்கத்துக்குத் தண்டனையாகக் கொடுத்தால் பணம் எங்கே யாருக்குப் போகிறதென்று எனக்குத் தெரியாது. காரணம், இது சுறா மீன்களின் அரசாங்கம்.‘

அப்பொழுது ;இடைக்கால நெருக்கடி நிலைமை’ப் பற்றிய பிரச்னைகளைக் அரசாங்கப் பொறுப்பில் கவனித்துக் கொண்டிருந்தவ ஜாய்ண்ட் செகரட்ரி ஒரு தமிழர்.. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் படித்த போது எனக்குக் கணித ஆசிரியராக இருந்தவர். அவரிடம் சென்று நான் எல்லாவற்றையும். விளக்கிச் சொன்னேன். அவர் கூறினார் :’உன் ’இலக்கியப் பணியை ’ க் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வை. சர்வாதிகாரத்தில் தடி எடுத்தவன் தண்டல்காரன். நான் ஒரு கமிட்டி போட்டு ‘இது அரசாங்கத்துக்கு எதிரானதல்ல’ என்று அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லிச் சமாளிக்கிறேன். . தமிழ்ப் பள்ளி முதல்வரை அமைச்சர் ஓம் மேத்தாவைப் பார்க்கச் சொல். நானும் அவருக்கு விஷயத்தை விளக்கிச் சொல்லுகிறேன். அவருக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை கிடையாது.’

 

 

Advertisements

§ One Response to தடி எடுத்தவன் தண்டல்காரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading தடி எடுத்தவன் தண்டல்காரன் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: