மதராஸி யாராக இருந்தால் என்ன?

October 3, 2016 § Leave a comment


பதினொன்றாம்  நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத் தூறவி இராமாநுஜருக்கும் எனக்கும் தொடர்ந்து சுவாரஸ்யமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.

  1. தில்லி. காலைப் பொழுது. என் மனைவி, பேப்பர் படித்துக் கொண்டிருந்தவள், பல் விளக்கிக்கொண்டிருந்த என்னிடம் சொன்னாள்;’ என்.பி.டிக்காக, ராமானுஜரைப் பற்றீ நீங்கள்தானே புஸ்தகம் எழுதினீங்க?’

‘ஆமாம்,அதுக்கு என்ன இப்பொ?’ என்றேன் நான் வாயைக் கழுவிக் கொண்டெ.

‘ நேத்திக்கி அந்தப் புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கு. முதல் காப்பியை மினிஸ்டர் வி.கே.ஆர்.வி ராவ், அதை எழுதிய ஆசிரியருக்குக் கொடுக்கிறதா போட்டோ வந்திருக்கு,ஆனா வாங்கிறவர் நீங்க இல்லே? வேற ஒத்தர், பேர் போடலே. உங்களுக்கு இந்த ‘ஃபங்க்‌ஷனு’க்கு‘இன்விடேஷன்’ வந்துதா?’’ என்றாள் என் மனைவி.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவசர அவசரமாக அவளருகே சென்று பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட, அதன் ‘ஆசிரியராக’ க் குறிப்பிடப் பட்டிருந்தவர், என்னைவிட பத்து வயது மூத்தவராகத் தெரிந்தார்.தீர்க்கமான தென்கலை நாமம்.

‘ராமாநுஜரைப் பத்தி ரெண்டு புஸ்தகம் போடறாளோ என்னம்மோ’’ என்றாள் என் மனைவி.

‘நான்ஸென்ஸ், இது நான் எழுதிய புஸ்தகந்தான். அட்டையைப் பாத்தா தெரியறது.. இது எப்படி நடந்ததுன்னே புரியலியே?’ என்றேன் நான்/

‘கவர்மெண்ட் விவகாரம்னாலே இப்படித் தான்’ என்றாள் என் மனைவி..

அப்பொழுது தேசியப் புத்தக நிறுவனத்தின் தலைவர் பி,வி,கேஸ்கர். நான் அவருடைய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.

’எஸ்/’ என்று என்னைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினார் கேஸ்கர்.

‘தேசியப் புத்தக நிறுவனம் நேற்று வெளியிட்ட ‘இராமநுஜர்’ என்ற நூலின் ஆசிரியர், ஆர்.பார்த்தசாரதி. ‘’ என்றேன் நான்.

‘ஸோ?’

நேற்று யார் புத்தகப் பிரதியை வாங்கிக் கொண்டார்கள் என்று கூட அவர் பார்க்கவில்லை என்று தோன்றிற்று.

‘ஆனால் தாம்தான் ஆசிரியர் என்று நேற்று முதல் பிரதியை வாங்க்க் கொண்டவர் வேறூ யாரோ,. தீர்க்கமாக நாமம் போட்டுக் கொண்டிருந்தார், அவர் நானில்லை என்று எனக்கு நிச்சியமாகத் தெரியும்.’

கேஸ்கர் புன்னகை செய்வது போல் தோன்றியது.

அவர் தொலைபேசியை எடுத்து, ‘ கொஞ்சம் இங்கு வரமுடியுமா’ என்று கேட்டார்

‘ நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்றார் என்னிடம் சில விநாடிகளுக்குப் பிறகு.

‘தில்லிப் பல்கல்லைக்கழத்தில் ஆசிரியராக இருக்கிறேன்’ட்

அப்போழுது ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். கர்த்தார் சிங் டுக்கல். பஞ்சாபி நாவலாசிரியர். தேசிய புத்தக நிறுவனத்தின் இயக்குநர்.

‘ இவரைத் தெரியுமா உங்களுக்கு? ‘ என்று என்னைச் சுட்டி அவரைக் கேட்டார்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ‘ ஐ ஆம் ஸாரி.. தெரியாது’.

‘ நேற்று வெளியிட்டோமே, அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தாம்தான் என்று இவர் கூறுகிறார். நேற்று முதல் பிரதியை இவரா வாங்கினார்?’

டுக்கல் திடுக்கிட்டவர் போல் என்னைப் பார்த்தார்.

‘ஆர் யு மிஸ்டர் ஆர்.பார்த்தசாரதி?’

‘ஆமாம். சர்டிஃபிகேட்டெல்லாம் கொண்டுவரவில்லை நிரூபிக்க, உங்கள் ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் எழுதப் பணித்தார். பிறகு உங்களிடமிருந்து அதிகாரப் பூர்வமாக க் கடிதம் வந்தது எழுதினேன். வேறு எந்த த் தவறும் செய்யவில்லை’. என்றேன்.

‘என்ன நடந்தது, மிஸ்டர் டுக்கல்?’ என்று கேட்டார் கேஸ்கர்.

‘ஆஃபீஸில் குளறுபடி நடந்திருக்கிறது.’

‘எனக்கு அழைப்பிதழே வரவில்லையே?’ என்றேன்.

‘நேற்று முதல் பிரதியையும் பாராட்டிதழையும் வாங்கிக் கொண்டவர் யார்?’ என்றார் கேஸ்கர்

‘ஒரு நிமிஷம், இதோ வருகிறேன்..’ என்று வெளியே சென்றார்

ப.த்து நிமிஷங்கள் கழித்து ஒருவரை அழைத்து வந்து,’ இவர்தாம் எங்கள் ‘பப்ளிக். ரிலேஷன்ஸ் ஆஃபிஸர் இவர் விளக்குவார் எல்லாவற்றையும்’ என்றார் டுக்கல

’ஐ ஆம் ஸாரி, டாக்டர் பார்த்தசாரதி. உங்களுக்கு இச்செய்தியைச்‘ சொல்லவோ அல்லது அழைப்பிதழ் அனுப்பவோ மறந்து

விட்டோம். கடைசி நிமிஷத்தில்தான் தெரிந்தது , எங்கள் ’ஆபீஸ்..’ அக்கௌன்டன் ட்  மிஸ்டர் கிருஷ்ணமாச்சாரி உங்கள் புத்தகத்தின் முதல் பிரதியை வாங்கிக் கொண்டார். அவரிடமி மிருந்து வாங்கி உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்.’ என்றார் அகர்வால்.

‘ஒரு மதராஸிக்குப் பதிலாக இன்னொரு ரெடிமேட் மதராஸி, அப்படித்தானே?’ உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா?’ மிஸ்டர் டுக்கல், நீங்கள் ஒரு பிரஸித்திப் பெற்ற எழுத்தாளர். நானும் எழுத்தாளன்தான்,, எட்டு வருஷங்களாக எழுதுகிறேன். எழுத்தாளர் என்ற முறையில, என் உணர்வுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றேன் நான்.

‘ஐ ஆ ஸாரி, மிஸ்டர் பார்த்தசாரதி. இது இந்நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் என் தவறுதான்.’ என்றார் டுக்கல்.

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மதராஸி யாராக இருந்தால் என்ன? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: