தில்லி சலோ

October 1, 2016 § 1 Comment


நான் தில்லிக்குச் சென்றது 1955ல். ஜனவரி 18ம்தேதி. நல்ல குளிர்ப்பருவம். அப்பொழுது தில்லிக்குப் போக ஒரே வண்டிதான். கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரெஸ். சென்னையில் மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டால், அடுத்தநாளைக்கு மறு நாள் தில்லியில் காலை ஆறுமணிக்குப் போய்ச் சேரலாம்.37 மணிப் பயணம். ரிஸர்வேஷன்’ என்று எதுவும் கிடையாது. டார்வின் தியரிதான். வலிமையுடையது எஞ்சும்.

ஆனால், செண்ட்ரல் ஸ்டேஷனில் பணம் கொடுக்கின்றவர்களுக்கு ‘ரிஸர்வ்’ செய்வதற்கெண்று ரெயில்வே நிர்வாகத்தார் ஆசியுடனும், போலிஸார் மௌனம் துணையாக, ஆட்கள் காத்திருப்பார்கள். நாலணா கொடுத்தால் போதும். வண்டி ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கு முன்பே ,ரெயில் பெட்டிகளில், ‘டவல்’ போடப்பட்டிருக்கும். இதுதான் ரிஸர்வேஷன். இதில் வேடிக்கை என்னவென்றால், இது சட்டப்படி எப்படிச் செல்லும் என்று யாரும் கேட்பதில்லை. பிரிட்டிஷ் அரசியல் சட்டம் போல், எழுதப்படா நடைமுறை விதி. வண்டி வந்ததும், யார் யார் டவல் விரித்திருக்கிறார்களோ அவர்கள் , தங்களுக்கு முன்னமே பணம் கொடுத்திருக்கும் பயணிகளை வண்டிக்குள் ஏற்றி அமர்த்திவிடுவார்கள்!

கும்பகோணத்திலிருந்து சென்னை வந்திருந்த எனக்கு இந்த எழுதப்படாச் சட்டம் பற்றி எதுவும் தெரியாது. முண்டி அடித்துக்கொண்ட்டு ஒரு கம்பார்ட்மெண்டில்,  தகரப் பெட்டி ஒன்றும் (அந்தக் காலத்தில் ‘ஸூட்கேஸ்’ கிடையாது) ‘ஹோல்ட் ஆல்’ ஒன்றும் ( இது வேண்டிய அனைத்துப் பொருள்களையும் படுக்கையையும் அடைத்துக் கொள்ள உதவும் கெட்டித் துணியால் ஆன சங்கப்பலகை) தூக்கிக் கொண்டு ஏறினேன். நாக்பூர்  போன பிறகுதான் எனக்கு உட்கார இடம் கிடைத்தது.

அப்பொழுதெல்லாம் ‘டைனிங் கார்’ கிடையாது. சாப்பிட வேண்டிய சமயத்தில் ஒரு குறிப்பிட்ட  சந்திப்பில் வண்டியைச் சாப்பிடுவதற்கென்று நிறுத்துவார்கள். ரையில்வே காடெரிங் சர்விஸ் தான்.  கொடுப்பதைக் குற்றம் சொல்லாமல் சாப்பிடவேண்டும். கைக்குழந்தைகளுக்குப் புட்டிப் பால் கரைக்க,வண்டி எத்தனை நிமிடம் அந்த ஸ்டேஷனில் நிற்கும் என்று கேட்டுக்கொண்டே, கையில் ஃப்ளாஸ்குடன் இஞ்சினை நோக்கி ஓடும் பரிதாபகரமான மத்திய வர்க்க, இளம் வயது தகப்பன்மார்கள் சகஜக் காட்சி அக்கால கட்டத்தில்.

நான் புது தில்லி ஸ்டேஷனில் இறங்கிய பிறகுதான் தில்லிக் குளிர் என்றால் என்னவென்று புரிந்தது. திருச்சியில் ஹபீப் கடையில் வாங்கிய ‘ஸ்வெட்டர்’ போதவில்லை.

என்னை அழைத்துப் போக வந்த என் அப்பாவின் நண்பருக்கு நண்பர் என் ‘ஸ்வெட்டரின்’ பலகீனத்தைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அடுத்த நாள், நான் வேலையில் சேர இருந்த ‘ரீடிங் ரோட்’ பள்ளிக் கூடத்துக்கு, ஹபீ கடையில் தைத்த ‘ட்வீட் ஸூட்’ டில் போனேன்.

முதல்வர் அலுவலக வாசலில் கருத்த மீசையுடன் உட்கார்ந்திருந்த பணியாளர் என்னைப் பார்த்ததும் ‘ட்க்’ கென்று எழுந்து ‘ஸல்யூட்’ செய்தார்.  அதற்குக் காரணம் ‘டை’ (ஹபீப்) சகிதமான ‘ஸூட்’ காரணமாக இருக்கலாமென்று எனக்குப் பட்டது.(உள்ளே போனபிறகுதான் அது காரணமில்லை என்று தெரிந்தது)

பணியாளர் என் வருகையை முதல்வருக்குத் தெரிவித்து விட்டு, என்னை பவ்யமாக உள்ளே அழைத்துச் சென்றார்.

முதல்வர் தம் இருக்கையிலிருந்து எழுந்து, முகம் மலர, என்னருகே வந்து ‘நமஸ்தே’ என்று சொல்லிவிட்டு, ‘ நீங்கள்  இளைஞராக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு மரியாதை கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘ காலேஜ்  வேலையை விட்டு விட்டு, எங்கேயோ கண்காணாத தேசத்துக்குப் பள்ளிக்கூட வேலைக்குப் போற முட்டாள் நீ ஒத்தன் தான்’ என்று சொன்ன அப்பாவின்  ஞாபகம் வந்தது. இங்கு என்ன மரியாதை! என்ன மரியாதை!

‘நான் தான்” என்று என் பெயரைச் சொன்னேன்.

முதல்வர் முகம் திடீரென்று மாற்றம் கண்டது.

“Are you not the Deputy Inspector of schools, Mr.Vaidya?’

‘ இல்லே சார், நான்  தமிழாசிரியர் வேலைக்குச் சேர வந்திருக்கேன்’ என்றேன் நான்.

‘ முட்டாள் வரதா, உள்ளே வா’ என்று கத்தினார் முதல்வர்.

’ இவர் பள்ளிக்கூடத்திலே வேலையிலே சேர வந்திருக்கிற வாத்தியார்னாடா? இவரை குண்டு மணி, அதாண்டா, ப்ரைமரரி வாத்தியார், ஜூனியர் தமிழ் பண்டிட், அவர்கிட்டே  அழைச்சிண்டு போய், இவர் ‘டைம்-டேபிளை’ க் கொடுக்கச் சொன்னேன்னு சொல்லு. ஐ ஆம் ஸாரி.  நான் டைரக்ட்ரேட்லேந்து ஒத்தரை எதிர்பாத்திண்டு இருக்கேன். நீங்க இவனோட போங்க. வெல்கம்  டு அவர் ஸ்கூல்’.

மறுபடியும் என் அப்பா  சொன்னது என் நினைவுக்கு வந்தது.

 

 

Advertisements

§ One Response to தில்லி சலோ

 • Mohan says:

  Dear Saar
  My parents brought us from Coimbatore in the same year that you immigrated to Delhi. We were studying in Coimbatore and living with our grandparents. There were five other grandchildren also under the same roof. Their parents were also in Delhi. All of us were shivering in the same cold weather on arrival at Old Delhi station. The breakfast switch from Raagi kanji to idli and sambar was divine!!!

  As far as Surya Narayana Iyer’s actions , he was simply plugging in one more cog into the hole.In his scheme of things your joining the school was just one more event of the day. I am sure as time went by he realized, what a great addition to his staff you were.

  Very enjoyable post. We love every one of your postings. Please keep them coming.
  C. P. Mohan

  Sent from my iPad

  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading தில்லி சலோ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: