தரகு

September 25, 2016 § 1 Comment


நான் தில்லிக்குப் போன புதிதில் கன்னாட் ப்ளேஸிலிருக்கும் ‘மெட்ராஸ் ஹோட்டலில்’ இருந்தேன். நாலு பேர் ஓர் விசாலமான ;ஹாலி’ல். அஹற்குப் பக்கத்திலிருந்த ‘ஹாலி’ல் ஒட்டலில் வேலை செய்கிறவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் பத்துப் பேர். இரவு முழுவதும் சீட்டாடிக்கொண்டிருப்பார்கள்.. எபடி காலையில் ஏழு மணிக்கு நெற்றியை குங்குமப் பொட்டோ,, சந்தனமோ , அல்லது விபூதியோ அலங்கரிக்க,, டைனிங் ஹாலு’க்கு புன்சிரிப்புடன் வந்து விடுகிறார்கள் என்பது எனக்கு பெரிய ஆச்சர்யம்.

நான் இருந்த அறையில், நாங்கு நாடா கட்டில்கள். நான் குளிர்ப் பருவத்தில் போனதினால், கட்டிலில், ஒரு பழைய மெத்தை, ரஜாய். மெத்தையின் மேல், ஒரு வெள்ளை வெளெரென்ற பெட்ஷீட். மெத்தையின் அழுக்குத் தெரியாது. தமிழ் நாட்டிலிருந்து சென்ற எனக்கு ரஜாய் ஒரு புதிய அநுபவம் அழுக்கான ரஜாயா, அல்லது அதன் இயற்கையான நிறமே அதுதானா என்று எனக்குத் தெரியவில்லை.

காலை ஒரு காப்பி, இரண்டு வேளை சாப்பாடு, ஒரு கட்டில் இதற்கு மாதம் 75 ரூபாய். இது 1955 ல்.

கரோல்பாகில் காலை காப்பி, இரண்டு வேளை சாப்பாடு, மெஸ்ஸில் 35 ருபாய் என்றார்கள் என் நண்பர்கள்.. தங்குமிடம், ஒரு வீட்டின் மூன்றாம் மாடி பர்ஸாத்தியில் (  கோடைக் காலத்தில் வெட்ட வெளியில் படுத்துக் கொண்டால், மழை வரும்போது, தங்குவதற்கென்று கட்டப்பட்ட ஒரு சிறு அறை. வீட்டுக்கார்ர்கள் அதையும் வாடகைக்குக் கொடுத்து விடுவார்கள் )  வாடகை ருபாய் 15.. ஆகவே ஒருவன் 50 ரூபாயில் சௌகயமாக இருக்கலாம், நான் 15 ருபாய் அதிகம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள் என் நண்பார்கள்.

நான் 15 ருபாய் அதிகம் கொடுக்கிறேன் என்று பொறுக்கமுடியாமலோ என்னவோ ஹோட்டல்கார்ர் சுப்பராவ் திடீரென்று இறந்துவிட்டார். அவருடைய மகன், இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தானோ என்னவோ ஹோட்டலில் இனி யாரும் மாத வாடகை கொடுத்துத் தங்க முடியாது  என்று சொல்லிவிட்டான்.

தினசரி வாடகைதான் தினசரி 15 ரூபாய் ( மறுபடியும் சொல்லுகிறேன், இது 1955ல்) என்று அறிவித்துவிட்டான்.. நாங்கு பேர் தங்கும் அறைக்கு மாதம் 450 ரூபாய் எதற்காக்க் கொடுக்கவேண்டுமென்று நான் லோதி ரோடில் தனி அறை தேட ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில், நான் வேலை செய்த அலுவலகம் லோதி ரோடுக்கு மாறுவதாக இருந்தது.

என் நண்பன் என்னை ஒரு வீட்டுத் தரகரிடம் அழைத்துச் சென்றான். பஞ்சாபி. வாயில் அவருக்கு 32 பற்களுக்குப் பதிலாக 64 இருக்கும் போலிருந்த்து. அவர் பஞ்சாபி பேசுகிறாரா ஆங்கிலம் பேசுகிறாரா என்று ஒன்றும் புரியவேயில்லை.

லோதி காலனி முழுவதும் அர்சாங்கக் குடியிருப்புக்கள். இரண்டு அறைகள், சமையலறை,, டாய்லெட். ஒரு அறையை வாடகைக்கு விட்டு விடுவார்கள். அரசாங்கம் அவர்களுக்குக் கொடுத்திருந்த குடியிருப்பு  வீடு முழுவதற்கும் அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்த வாடகை 16 ரூபாய். ஆனால் ஒரு அறை வாடகைக்கு விட்டு வசூலித்த்து மாதம் 40 ரூபாய்.  அறையை ஏற்பாடு செய்தற்குத் தரகருக்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும் அவர் வீட்டுக்கார்ரிடமிருந்து ர்20 ரூபாய் வாங்கி விடுவார்.

எனக்கு அறை ஏற்பாடு செய்வதாக வாக்களித்த தரகர் அரசாங்க அலுவலகர். ஏதோ ஒரு துறையில் ‘அஸிஸ்டெண்டா’’க இருந்தார்..ஐம்பது வயதிருக்கும். பாகிஸ்தானிலிருந்து வந்தவர். பெயர் கோஹ்லி/

எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா என்று அக்கறையுடன் விசாரிதார். ‘இல்லை’ என்றதும் அவர் முகம் மலர்ந்தது. .’கல்யாணத் தரகும் உண்டா/’ என்று கேட்டேன்..’ நைஜி, நைஜி, கல்யாணம் ஆகாத மதராஸிகளுக்கு இங்குச் சுலபமாக இடம் கிடைத்து விடும்’ என்றார்.

“ஏன் மதராஸிகள்/?’

“ தகராறு செய்யாமல் வாடகையை ஒழுங்காக்க் கொடுத்து விடுவார்கள். நல்லவர்கள். தர்மத்துக்குக் கட்டுப் பட்டவர்கள்  என்றார் கோஹ்லி‘

‘அதாவது, பயந்த சுபாவம் உடையவர்கள், அப்படிதானே?’

’கரெட்.. வீட்டைப் பாக்கலாமா?’

அவர் சென்ற வேகத்துக்கு, அவர் வயதில் பாதி இருந்தாலும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.

பத்து வீடுகள் சேர்ந்தாற்போல் கட்டப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு மாடி, பர்ஸாத்தி.. மாடி வீடு அரசாங்க அலுவலகர் வேறு ஒருவருக்கு. . அவருக்குச் சொந்தமானது பர்ஸாத்தி. அவர் கோடைக் காலங்களில் மொட்டை மாடியில் படுத்துக் கொள்ளலாம். அவர் பர்ஸாத்தியை வாடகைக்கு விட்டு விடுவார். வாடகை, லோதி காலனியில் 10 ரூபாய். கீழே குடியிருப்பவர் வீட்டெதிரே இருக்கும் ‘லான்ஸி’ ல்  குடும்பத்துடன் படுத்துக் கொள்ளலாம். (தீவிரவாதிகள் நடமாடும் இக்காலத்தில் அப்படிக் குடும்பம் குடும்பமாகப் புல் வெளியில் படுத்துக் கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது )

கோஹ்லி அழைத்துக் கொண்டு போன வீட்டு வாசலில் நாலைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

‘வீட்டுக்கார ர் குழதைகளா?

எனக்குச் சற்று பயமாக இருந்தது.

வீட்டுக்கார்ர் அனுமதி கேட்காமல், அந்த அறைக் கதவைப் பையிலிருந்து ஒரு சாவி எடுத்து  கோஹ்லி திறந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து. வீட்டுக்கார்ருக்கு அவரிடம் அவ்வளவு நம்பிக்கை!

அறையில் ஒரு மரக்கட்டில். ஆறுதலாக இருந்த்து. நாற்காலி.

‘மெத்தை, தலையணை, , ரஜாய் இவையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த கடைக்குப் பிறகு அழைத்துச் செல்லுகிறேன்’ என்றார் கோஹ்லி.

‘டாய்லெட்?’

\வெராந்தாவில் இருக்கிறது. பொது ‘’டாய்லெட்’. நீங்கள் காலையில் ஆறு மணிக்கு முன்னால் குளிக்கலாம் இல்லாவிட்டால், ஒன்பது மணிக்குப் பிறகு குளிக்கலாம்’’.

’ குழந்தைகள் இருக்கின்றனாவா?’

‘வாசலில் பார்த்தீர்களே, நான்கு.’

எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி.

’நான்கா?’

‘ஆமாம். சாதுவன குழந்தைகள். மதராஸிகள் மாதிரி.

‘ வீட்டுக்கார்ரைப் பார்க்கலாமா?’

‘நான்தான் வீட்டுக்காரன்’ ‘

“இது உங்கள் வீடுதானா?’

‘’இப்பொழுது தரகனாய் வீட்டை உங்களுக்குக் காண்பித்தேன். வீடு பிடித்திருந்த்தால், மூன்ரூ மாத வாடகை 120 ரூபாயுடன் நீங்கள் தரகனுக்குக் கொடுக்க வேண்டிய  20 ரூபாய் சேர்த்து, 140 ரூபாய் வீட்டுக்காரனாகிய என்னிடம் கொடுக்க வேண்டும்.’ புரிகிறதா?\

என் தலை சுற்றியது..

ஆனால் ஓர் ஆறுதல். வீட்டுக்காரரிடமிருந்து அவர் 20 ரூபாய் வசூலிக்க முடியாது!

 

\

 

 

 

 

 

 

 

 

Advertisements

§ One Response to தரகு

  • ramjirc says:

    சுயமற்ற சுயசரிதத்திலிரூந்து இதழ்களைக் கிள்ளிப் போடுகிறார் ஆசிரியர். நகைச்சுவை, கருத்தாழம் கலந்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading தரகு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: