விதிக்கு விதி உண்டா?

September 23, 2016 § 1 Comment


வானவியல் அறிஞர்களால், ஒன்று, வாழ்க்கையைப் பக்குவமாகப் புரிந்து கொள்ள முடியும் அல்லது விரக்தி அடையச்செய்யுமென்று ஸ்டீபன் ஹாகிங் ஒரு சமயம் கூறினார். ஏனெனில், விரிந்துகொண்டே போகும் பிரபஞ்ச வெளியில் மனித வாழ்வின் பெருமையும், சிறுமையும் புரிந்து கொள்ள முடியும், பெருமை, பிரபஞ்ச வெளி யின் எல்லையிமைய அறிந்து சொல்லுகிறவன் மனிதன், அதனால், பெருமை.ஆனால் அவன் வாழ்க்கைக்கு எல்லையுண்டு, அதுதான் சிறுமை.

‘சாதலும் புதுவதன்றே’ என்றார் ஒரு புலவர்.

அவரும் ஒரு வானவியல் அறிஞர்தாம். கணியன். அந்தக் காலத்தில் அரசனுக்கு கிரக நிலைப் பார்த்து அறிவுறுத்தும் சோதிடர். அடிப்படையாகச் சொல்லப் போனால், வானவியல் அறிஞர்.

பர்ஸியாவில் ஒரு கணிணி இருந்தான். அரசனுடைய தோழன், ஆலோசகன். கணித  விற்பன்னன். எந்தக் கோணத்திலிருந்து( கணிதம்) எதிரியின் கோட்டையை எப்பொழுது தாக்கினால (கிரக நிலை) வெற்றிப் பெறலாம் என்று யோசனை சொல்லி அவனை வெற்றிப் பெறச் செய்தவன்.

அவன், நம் தமிழ்க் கணியனைப் போல் ஒரு கவிஞன். அவரைப் போலவே தத்துவக் கவிஞன்

முதல்வர் பூங்குன்றனார். அடுத்தவன் உமர்கையாம்.

இருவரையுமே அவர்களைப் படிக்கின்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிஆர்கள்.‘

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்பதை ஓர் அரசியல் கோஷமாக நினைத்து, ‘அன்றே தமிழன் உலகம் முழுவதும் எனக்குச் சொந்தம், மனிதர்கள் யாவரும் சகோதரர்கள்’ என்று சொல்லி, சாதி, நிறம், குலம்,கோத்திரம் எல்லாவற்றையும் கடந்து உலகக் குடிமகனாகிவிட்டான்’

என்று விளக்கம் கூறுவார்கள். ‘கையில் மதுக்கோப்பை, பக்கத்தில் ஓர் அழகிய பெண். இதுவே சொர்க்கம்’ என்பதுதான் உமர்கையாமின் போதனை என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மயாக இக்கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள்/

ஈழதமிழர்கள் புலம் பெயர்ந்த போது எந்த நாட்டில், எந்த ஊருக்குப் போனார்களோ அந்த ஊரைப் பற்றியும், அவர்களைச் சுற்றியுள்ள அந்நாட்டு மக்களையும் பற்றி இவ்வாறு சொன்னால், எந்த மன நிலையில் அவர்களால் இப்படிச் சொல்லியிருக்க முடியும்? விரக்தி என்பதை மறந்து விட முடியுமா?

’ டோரொண்டோவோ, யாழ்ப்பாணமோ, எதுவாக இருந்தால் என்ன, எல்லா ஊரும் எனக்குச் சொந்தம் என்றில்லாமல், டோரோண்டோவை, நிர்ப்பந்தம் ஏற்பட்டால், யாழ்ப்பாண்மாகக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது’ என்கிறார் கவிஞர். அப்பொழுதுதான் டோரோண்டாவில் இருப்பவர்களை என் உறவினர்களாக அவரால் பார்க்க முடியும்/

இந்த மனப் பக்குவ நிலையிலிருந்து மற்றைய வரிகளைப் படியுங்கள். ;எனக்கு நன்மையோ தீமையோ துன்பமோ இன்பமோ பிறர் தர வருவதில்லை. என் விதியை நிர்ணையிக்கின்றவன் நான்தான். நான்தான் என் விதி இந்நிலையில் சாவைப் பற்றி ஏன் நான் கவலைப் பட வேண்டும்? அவன் பெரியவன் , இவன் சிறியவன் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’’

இதற்கு நேர் மாறாக, விரக்தியின் உச்ச நிலையிலிருந்து உமர்கய்யாம் பாடுகிறார். ‘நதியின் நீர் எங்கே போகிறது என்று நதிக்குத் தெரியுமா? விதியின் கை எழுதுகிறது. எழுதி எழுதி மேற் செல்லும். வாழ்க்கை என்பதோர் சூதாட்டம், இரவும் பகலும் மாறாட்டம். வல்லான் விதியே ஆடுமகன்.’

விரக்தியின் உச்ச நில்லையில் இருப்பவரைக் காமுகனாகச் சித்திரிப்பது எப்பேர்ப்பட்ட தவறு?

வானவியல் அறிவு ஒருவரைப் பக்குவ நோக்குடன் வாழ்க்கையைப் பார்க்க உதவுகிறது. மற்றவரை மதுக் கோப்பையில் சரணடையச் செய்கிறது.

இராமயணத்தில், சீற்றமடைந்த இளவளத் தேற்ற இராமன் கூறுகிறான்:

‘நதியின் பிழையன்று, நறும்புனலின்மை’ விதியின் பிழை’

இலக்குவன் பதில் கூறுகிறான்:

‘விதிக்கு விதியாகும் என் விற்கை ஆற்றல்’

 

 

 

Advertisements

§ One Response to விதிக்கு விதி உண்டா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading விதிக்கு விதி உண்டா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: