‘நாய’ கர்

September 16, 2016 § Leave a comment

பெங்களூரிலிருந்து. கணவன் இறந்த பிறகு, ஒரு ‘ஸ்பானியல்’ நாயுடன், கும்பகோணத்தில், எங்களுடன் இருக்க வந்த என் அத்தையும், என் அப்பாவும் பழக்க வழக்கங்களில் வேறுபட்டிருந்தார்கள் என்பது எனக்கு  அப்பொழுது அந்த ஒன்பது வயதில் புரியவில்லை.

அப்பா அத்தையிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்;’ ஒரு மாசத்துக்குள்ளே நீ அந்த நாயை வேறு யார் கிட்டேயாவது ஒப்படைச்சாகணும்.. நானும் அந்த நாயும் சேர்ந்து இந்த வீட்டிலே இருக்க முடியாது’/

‘சிம்னா (அதுதான் அந்த நாயின் பெயர். அதன் வேர்ச்சொல் என்னவாக இருக்குமென்று இப்பொழுதும் யோஜித்துக் கொண்டிருக்கிறேன்) எங்கே போவான்? அவர் போகிறபோது கண்டிப்பாகச் சொல்லிட்டுப் போயிருக்கார்., \சிம்னாவை, நான் போனப்புறம், யார்கிட்டேயாவது கொடுத்துட்லாம்னு நினைச்சியானா, இப்பொவே டாக்டர்கிட்டே சொல்லி  ஐ வில் புட் ஹிம் டு ஸ்லீப், அவன் எங்க குழந்தை, யார்கிட்டேயும் கொடுக்கமாட்டேன்..வேணும்னா வேற வீடு பாத்துண்டு போறே$ன். கர்ணக்கொல்லை அக்கிராஹாரத்திலே ஒரு வீடு விலைக்கு வந்திருக்காம். பாத்து முடிச்சுத் தா. போயிடறேன்.’

‘அக்கிராஹாரத்திலே யாரு உன்னை நாய் வச்சுக்க

சம்மதிப்பா?’ இது பெங்களுரில்லே.கும்பகோணம்’’

‘பேர்தான் அக்கிரஹாரம்.. அங்கே எல்லாரும் இருக்காளாம். முதல் வீட்டிலேயே ஒரு ராஜபாளயம் இருக்காம். சிங்கப்பூர் நாயுடு வீடுன்னு சொல்றா.’

அப்பா அதற்கு மேல் பேசவில்லை. ‘

இரண்டு மாதங்களில் அத்தை அந்த வீட்டை வாங்கி ‘சிம்னா’ வுடன் போய்விட்டார்.

அந்த வீட்டில் ஏற்கனவே மூன்று குடிகள் இருந்தன. வீட்டை விற்றவரிடம் அவர்கள் ‘காலி பண்ண வேண்டிய அவசியமில்லை என்று அத்தை சொல்லி விட்டார்.

பெரிய வீடு. கூடத்தில்  ஓர் அறையில்( அதுதான் சமையலறை, வரபேற்பு அறை எல்லாம்) ஒரு குடி. கணவன், மனைவி, இரண்டு பையன்கள், மனைவியின் கல்யாணமாகாத சகோதரி ஆக மொத்தம் ஐந்து பேர். பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வாசலிலிருந்த பெரிய திணையில் படுக்கை. பின் கட்டு இரண்டிலும் இரண்டு குடிகள். வீட்டில் மொத்தம் மூன்று குடிகள், 14 நபர்கள்.

அத்தை, இத்தனைப் பேர்  அந்த வீட்டிலிருக்கச் சம்மதித் தற்கு அப்பாவுக்குத் துளிக் கூட விருப்பமில்லை. ‘இத்தனைப் பேர் இருக்கா, நான் பயமில்லாம இருக்கலாமில்லையா?’ என்றார் அத்தை சிரித்துக் கொண்டே.

‘அவர்கள் வீட்டைக் காலி பண்ணனும்னுதான், நான்

வீட்டையே விக்கறேன்’ . பின் கட்டிலே இருக்கிறவரைத் தவிர மத்தவா வாடகைக் கொடுக்கறது முன்னே பின்னேதான்’ என்றார் வீட்டை விற்றவர், வீட்டை விற்ற பிறகு.

‘எனக்கு வாடகை முக்கியமில்லே, எல்லாரும் நல்லவாதானே’ என்றார் அத்தை.

‘சரீரத்தாலே என்ன உபகாரம் வேணும்னாலும் பண்ணுவா, அதைப் பத்தி சந்தேகம் கிடையாது. கூடத்திலே இருக்காரே, நாப்பது வயசாறது, என்ன உத்தியோகம் பண்றார்னு அவா வந்ததிலிருந்தே எனக்குச் சத்தியமா தெரியாது, குடும்பம் மட்டும் ஜோரா நடக்கறது, எல்லாம் அவர் ஆம்படையாளுடைய நாக்கு ஜாலம்.. படிச்சிருந்தாள்னா பெரிய வக்கீலா இருந்திருப்பா, வாயைத் திறந்தா பொய்! ; என்றார் வீட்டை விற்றவர்.

‘நீங்க வக்கீல்னு சொன்னாளே?’ என்றார் அப்பா.

‘அதனால்தான் சொல்றேன்’ என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

அத்தை அந்த வீட்டுக்குப் போனது எனக்கு ஓரளவு நஷ்டம். சிம்னாவை காலையிலும் மாலையிலும்  12 காசு) கொடுப்பார் அத்தை,. அந்த வரும்படி போயிற்று.

வேலை வெட்டி இல்லாமல் கூடத்தில் குடியிருந்த அந்த நாற்பது வயதுக்காரரிடம்,, சிம்னாவை வெளியில் அழைத்துக் கொண்டு போகும் பணியை ஒப்படைத்தார்

அத்தை. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தப் பணியை ஏற்றார். காரணம், ‘ முன்னே’ ‘பின்னே’ வந்துகொண் டிருந்த வாடகையும் அடியோடு நின்று போயிற்று!

முதல் வீட்டிலிருந்த சிங்கப்பூர் நாயுடுகாரருடைய ‘ராஜபாளய’த்துக்கு தேசபக்தி மிகவும் அதிகம் என்று கூடத்தில் குடியிருந்தவர் உணரும் வாய்ப்பு ஒரு நாள் ஏற்பட்டது.

அவர் ஒரு நாள் சிம்னாவை வெளியே அழைத்துக் கொண்டு போனார். நாயுடு வீட்டருகே சென்றதும், ‘யார் இந்த அந்நியன்’ என்பது போல ராஜபாளையம் ‘ஸ்பானிய;ல்’ மீது பாய்ந்தது. கூட்த்துக்காரர் கதி கலங்கி விட்டார். ‘ஸ்பானியலை’ அப்படியே விட்டு விட்டு அலறிக் கொண்டே ஓடிவிட்டார். இதை எதேச்சையாகப் பார்த்து விட்ட நாயுடுவின் பேத்தி ‘துர்கா’ என்று ஒரு அதட்டலுடன் ஓடிவந்து அத்தையின் நாயைக் காப்பாற்றினாள்.

‘மாமி, உங்க வாடகையை ஒழுங்கா கொடுத்துடறோம். அந்த ஜட த்தை மட்டும் உங்க நாயை வெளியிலே அழைச்சிண்டு போகச் சொல்லாதீங்க..’ என்றாராம் கூடத்துக்காரருடைய மனைவி. அவர் ‘ஜடம்’ என்று உடிகுறிப்பிட் டது அவர் கணவரை.

பெங்களூரிலிருந்தபோது ‘பொச பொச’வென்று அதன் சரீரத்தை அலங்கரித்த  சிம்னாவின் முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கியது. காரணம்,கும்பகோனம்

வெய்யில். வெள்ளை வெளேரென்றிருந்த நாய் முடியெல்லாம் கொட்டிப் போய், சிகப்புத் தோலுடன்,,  கொசுக் கடியும், பூச்சிக் கடியுமாகப் பார்ப்பதற்கு அசிங்கமாகத் தெரிந்தது. .

அப்பா சொன்னார்: ;உன் ஆத்துக்கார்ர் சொன்ன மாதிரி, ‘புட் ஹிம் டு ஸ்லீப்’.’

‘அவர் சாகடிக்கச் சொல்லலே. காப்பாத்த்த்தான் சொன்னார்’ என்று சீறினார் அத்தை.

‘ செத்துப் போறது அதுக்கு ‘ரிலீஃப்’ ,பாத்தா உனக்குத் தெரியலே?’ என்றார் அப்பா.

‘ மனுஷாளுக்கு முடி கொட்டிப் போச்சுனா கொன்னுடறாளா?’ என்றார் அத்தை.

அடுத்த நாள் சிம்னா இறந்து விட்டது.

இது ஒரு பெரிய விவாதத்துக்குக் காரணமாயிற்று.

வீட்டுக் கொல்லையில்தான் அதைப் புதைக்க வேண்டுமென்றார் அத்தை.

வீட்டில் குடியிருந்த அனைவரும் ஒரு மூச்சாக அதை எதிர்த்தார்கள்.

அத்தை எத்தனைப் பணம் கொடுத்தாரோ தெரியவில்லை, சிம்னாவின் ஈமக்கடன் செய்ய ஒரு சாஸ்திரிகள் வந்து நின்றார்.

அப்பாவுக்கு இந்தப் பிரச்னை வரும் என்று தெரியும்.

முனிஸிபாலிட்டிக்கு அவர் தகவல் சொல்லி, வாசலில் சிம்னாவின் பிரேதத்தை எடுத்துச் செல்ல ஒரு வண்டி வந்து நின்றது.

வண்டியைப் பார்த்த்தும், அத்தை அதை ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டே நின்றார். பிறகு, ஒன்றும் கூறாமல், மௌன்மாகத் தன்னறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார்.

அப்பாதான் எல்லாக் காரியங்களையும் கவனிக்கும்படியாக ஆகி விட்டது.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘நாய’ கர் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: