ராணுவ ஆட்சியில் மனித முகங்கள்

August 27, 2016 § 1 Comment


நான் போலந்து வார்ஸாவில் இருந்த போது(1981-1986) எனக்கேற்பட்ட மறக்க முடியாத அநுபவங்களில் இதுவுமொன்று. ஒரு கிராமத்துக்குச் சென்ற அநுபவம்

வார்ஸாவிலிருந்து ஆறு மணி பேருந்துப் பயணத்தில், கோனின் என்ற ஒரு கிராமம். அது வார்த நதிக்கருகே இருந்தது. அந்தக் கிராமத்தின் சிறப்பு என்ன வென்றால்,, மத்திய நூற்றாண்டுகளில், ஒரு போலந்து கிராமம் எப்படி இருந்திருக்குமோ, அதை எடுத்துக் காட்டும் ஒரு தொல் பொருள் அருங்காட்சியகமாக, அரசாங்கம் அதை வைத்திருந்ததுதான்.

அந்தக் கிராமத்தை நானும் என் மனைவியும் பார்க்க வ்ண்டுமென்று. என் மாணவிகள் யோஜனை சொன்னார்கள். நான்கு மாணவிகள் கூட வருவதாகச் சொன்னார்கள்.

அந்தக் கிராமத்தை ஒட்டியிருந்த ஒரு சிறிய நகரத்தில் இறங்கினோம். நவீனக் காலத்து வாடை அடிக்கக் கூடாதென்பதற்காக, அந்தக் கிராமத்துள் காரோ, பஸ்ஸோ எதுவும் வரக் கூடாதென்ற தடை இருந்தது.

இரண்டு கிலோ மீட்டர் தூரம். நடந்து செல்வதென்ற ஏற்பாடு.

அந்தச் சிற்றூருக்குப் போய்இறங்கியதும், எங்களுக்கு ஏற்பாடாயிருந்த,  ஒரு சிறியவிடுதியில், சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அந்தக் கிராமத்துக்குப் புறப்பட்டோம்..

அது குளிர் காலம். வானத்திலிருந்து பனிமலர்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

கிராம ‘மியூஸியத்தைப் பார்க்க வந்தவர்கள் என் மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந் தது எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. காரணம் அவள் உடை.  காஞ்சிவரம் புடைவை, அதற்குமேல்  ஓவர்கோட்.  நான் எவ்வளவு சொல்லியும் ‘பாண்ட்’ அணிய மறுத்துவிட்டாள்.

கிராமத்தைச் சென்றடைந்ததும், திடீரென்று பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் போய் விட்டாற் போல ஓருணர்வு. அந்தக் கிராமத்து வீடுகளில் இருந்தவர்கள், பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பிய உடைகளில் இருந்தார்கள். குதிரைகளில் சிலர் சவாரி செய்து கொண்டிருந்தனர்..

கண்காட்சிக்காக வைக்கப் பட்டிருந்தன. மண்பாண்டங்கள், பெரிய பெரிய ஜாடிகள், அவற்றை நிர்வகிக் க அமர்த்தப்பட்டிருந்த இளைஞர்களும் மத்திய நூற்றாண்டுக் காலத்திய போலிஷ் மொழி பேசியதாக என் மாணவிகள் சொன்னார்கள்.

நாங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு சிற்றுருக்குத் திரும்பி வந்த போது இளம் வெய்யில். வீதியிலிருந்த பனி மலர்கள் வெய்யிலில் இறுகிக் கண்ணாடி தோற்றத்துடன் இருந்தன. மிக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.இல்லாவிட்டால் வழுக்கி விடும்.

என் மனைவி வழுக்கிக் கீழே விழுந்து விட்டாள்..நல்ல வேளை,நாங்கள் தங்கியிருந்த விடுதி அருகே.. இருந்தது.

அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று உள்ளே கட்டிலில் படுக்க வைத்தோம். பொறுக்க முடியாத வலியினால் கஷ்டப்பட்டாள்.

ஒரு டாக்ஸியில் உள்ளூர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். நல்ல கூட்டம். அங்கிருந்த அந்த நகரத்து மக்கள் முதல் தடவையாகச் சேலை கட்டிய ஒரு பெண்ணை பார்த்திருக்க வேண்டுமென்றுமென்று தோன்றியது.  ’ஜிப்ஸி’’ யா என்று என் மாணவிகளிடம் கேட்டார்கள். ‘இந்துஸ்கா’’ (இந்தியப் பெண்மணி) என்று அவர்கள் பதில் சொன்னார்கள். ந

’இன்று நான் வி.ஐ.பி பொறாமைப் படாதீர்கள்’ என்றாள் என் மனைவி.

பரிசோதனையில் iஇடக் காலில் எலும்பு முறிவு என்று தெரிந்தது. ‘இப்பொழுது தாற்காலிகமாக்  கட்டுப் போடுகிறோம். வர்ஷாவா போய் cast போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார் அங்கிருந்த மருத்துவரள்.

‘உட்காரக் கூடாது படுக்கவைத்தே அழைத்துப் போங்கள்’ என்றார் அந்த அழகிய பெண் டாக்டர்.

விடுதிக்கு த் திரும்பி வந்த போது இருட்டிவிட்டது  வார்ஸ்வாவுக்கு விடியற்காலைதான் ‘ட்ரெய்ன்’. பஸ்ஸில் என் மனைவியால் போக முடியாது. டாக்ஸியிலும் அதே பிரச்னைதான்.

என் மாணவி ஒருத்தி புகைவண்டிக்குப் பயணச் சீட்டுகள் வாங்கிக்கொண்டு வந்தாள்.

விடியற்காலை நாலு மணிக்கு வண்டி. ஸ்டேஷன் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. விடியற்காலை 2.33 மணிக்கு டாக்ஸி அழைத்து வர இரண்டு மாணவிகள் சென்றார்கள்.

அரை மணியாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை.

எங்களுக்கு ஒரே கவலையாக இருந்தது.

பத்து நிமிஷங்கள் கழித்து, வாசற்கதவு பலமாகத் தட்டப் படும் சப்தம் கேட்ட்து/

ஒரு மாணவி போய் திறந்தாள்.

டாக்ஸி கொண்டு வரப் போன இரண்டு பெண்களும் இரண்டு போலீஸ்கார்ர்களுடன்  திரும்பி வந்திருந்தார்கள்.

’என்ன பிரச்னை?’ என்று கேட்டேன்.

‘ இப்பொழுது  ராணுவ ஆட்சி அல்லவா? இரவு முழுவதும் ஊரடங்குச் சட்டம். யாரும் நடமாட முடியாது. எங்களை சாலிடாரிட்டி இயக்கத்தைச் சேர்ந்தவர்களென்ற சந்தேகம் இவர்களுக்கு,ப்ரொஃபஸ்ர் மனைவிக்கு ஃப்ராக்ட்ஷன், உடனே வார்ஸா போக வேண்டும். ஸ்டேஷனுக்குப் போக டாக்ஸி தேடி வந்தோம் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். பானி இந்திராவை ( ’பேஷண்டைப்’  பார்க்க வேண்.டுமென்றார்கள். அழைத்து வந்திருக்கிறோம்’ என்றாள் ஒரு மாணவி.

அவர்களை உள்ளே நான் அழைத்த்துச் சென்றேன்.

கட்டிலில், பெரிய கட்டு போடப்பட்ட நிலையில் படுத்திருந்தாள் என் மனைவி.

அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்கள் அந்த போலிஸ் இளைஞர்கள்

பிறகு என் மாணவிகளிடம் போலிஷில் வேகமாக எதோ சொன்னர்கள். எனக்குப் புரியவில்லை

நடாலியா (மாணவிகளில் ஒருத்தி) சொன்னாள்: ‘ வாசலில் போலீஸ் வான் இருக்கிறது. ஸ்ட்ரெச்சர் இருக்கிறது. வண்டியில் இன்னும் இரண்டு போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.  ஸ்டேஷனுக்கு உடன் வந்து,, ட்ரெய்னில், ஏற்றிவிடுவதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால்..‘ ’

என் மனைவி அவர்களைப் பார்த்துப் புன்னகையுடன் ‘ஜென்குயியா(ங்) என்றாள். ‘ஜென்குயாங்’ என்றாள் போலிஷில் ‘நன்றி’ என்று அர்த்தம்.

இதை எதிர்பார்க்காத அந்தப் போலீசஸ்காரர்:களின்முகங்கள் மலர்ந்தன. இருவருக்கும் வயது, இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்.

உடனே அவர்கள் செயல்பட்த் தொடங்கினார்கள். ’ஸ்டெர்ச்சரை’ எடுத்துக் கொண்டு வந்தா ஒருவன். இன்னொருவன், ‘ப்ளாஸ்கி’ல் தேநீர் கொண்டுவந்தான்.

’ட்ரெயினில்’ ஏறியதும் என் மனைவி சொன்னாள்’ “ கிராம மியூஸியத்தைப் பார்த்தத்தைக் காட்டிலும் இதுதான் நல்ல அனுபவம்.இப்பொ எனக்கு வலியே தெரியலே’

 

 

..

Advertisements

§ One Response to ராணுவ ஆட்சியில் மனித முகங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading ராணுவ ஆட்சியில் மனித முகங்கள் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: