நம்பிக்கை

August 10, 2016 § Leave a comment


நம் இந்திய  இலக்கியப்  பரம்பரையில்  நாம் இன்று அறியும்  பண்டைய நூல்களின் ஆசிரியர்கள்  மரபுவழிச் செய்திகளாய் இருக்கின்றனவே தவிர,  திட்ட வட்டமான வரலாற்றுச் செய்திகள் இல்லை.

வால்மீகி, வியாசர், திருவள்ளுவர்,தொல்காப்பியர் ,பரதர்,  (நாட்டிய சாஸ்திரம்) ஆகியவர்கள்தாம், அவர்கள் எழுதியதாகக் கூறப்படும் நூல்களின் ஆசிரியர்களாக நாம் நம்புகின்றேமே தவிர, அவர்கள்தாம் ஆசிரியர்கள் என்று வரையறுத்துக் கூற வரலாற்று ஆவணங்கள் ஏதுமில்லை.

இராமயணமும், மகாபாரதமும், செவிவழிச் செய்திகளாய் பல் வேறு காலங்களில், பல்வேறு பிராந்தியங்களில்  வழங்கிய கதைகளின் தொகுப்பு. வியாசர் என்றாலே தொகுப்பாசிரியர் என்று அர்த்தம். ‘தொகாப்பியர்’ ’திருவள்ளுவரைப் பாற்றி நமக்கு உறுதியான வரலாற்றுச் செய்தியாக எதுவும் கிடைக்கவில்லை.

‘இலக்கியப் படைப்பு’ தான் நம் இந்திய கலாசார மரபில் முக்கியமாகப் பட்டிருக்கிறதே தவிர, படைப்பாளியைப் பற்றி நாம் அவ்வளவாகக் அக்கறைக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்ன ஆசிரியர்தாம், இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது, கடவுள் நம்பிக்கையைப் போல. இந்த நம்பிக்கை இல்லாவிட்டால்,  நம் இலக்கியப் பண்பாட்டு அஸ்திவாரமே ஆட்டம் கொள்ளும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading நம்பிக்கை at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: