டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

July 23, 2016 § 1 Comment


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான்கு வாயில்கள். எந்த வழியாகச் சென்றாலும் அம்மனைத்  தரிசிக்கலாம். ‘நான் தேர்ந்தெடுக்கும் வழிதான் சரியான வழி’ என்று யாரும் வாதாட முடியாது. அது போல் இலக்கியம் படைப்பதற்கும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரைமுறைகள் எதுவுமில்லை. இப்பொழுது தன் அநுபவத்தை, சிந்தனை ஓட்டத்தை, எடுப்பு, தொடுப்பு, என்று எதுவுமில்லாமல், உரைநடையாக வாசிக்கின்றவர்களை அவர்களுடைய அநுபவத்துக்கேற்ப ஈர்க்கும் கட்டுரையும் படைப்பு இலக்கியந்தான் என்று மேல்நாட்டு விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

உதாரணத்துக்கு, சார்ல்ஸ் லாம்ப் எழுதிய ‘கனவுக் குழந்தைகளையும்’ (Dream Children) யையும், ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய ‘City Night Piece”யையும் குறிப்பிடுவார்கள். அவை ‘Prose poems’ என்று அழைக்கப் படுகின்றன.

கணேஷ் வெங்கட்ராமன் எழுதியுள்ள ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்தவுடன் இவைதான் என் மனத்தில் எழுந்த எண்ணங்கள். 23 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு.

இக்கதைகள் அனைத்தையும் படித்து முடித்தவுடன், இவை எல்லாவற்றிலும் காணப்படும் ஒற்றுமையைக் கவனிக்கும்போது, இவை இந்த ஆசிரியரால்தான் எழுதப் பட்டிருக்க முடியும் என்ற தனி அடையாளம் புலப்படுகிறது. இதுவே படைப்பாளியின் இலக்கிய வெற்றி.

தொழில் நிமித்தம், உலகம் முழுவதும் சுற்றிப் பல்வேறு வகை உலக மாந்தர்களுடன் பழகிய அநுபவத்தின் பதிவே இக்கதைகள். தலைப்புக் கதையில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கும் இடத்தின் சூழ்நிலையின் சித்திரிப்பு ஓர் அழகிய சித்திரக் காட்சியாய் நம் கண் முன் நின்று நமக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வணிக நிமித்தம் போன ஒருவர் கவிஞனாய் திரும்புவதுதான் கதையின் அடிநாதம்.

இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடித்தளம் இக்காலத்திய தொழில் நிறுவனங்கள், வியாபார முறைகள்,வெவ்வேறு வகைப் பட்ட கதை மாந்தர்கள், அவர்களுக்கிடையே நிலவும் மௌன மோதல்கள் ஆகியவைதாம். இத்தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் நண்பர் பி.ஏ.கிருஷ்ணன் கூறியிருக்கிறபடி, நாம் ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசக்’ கதை சூழ்நிலையினின்றும் வெகு தூரம் கடந்து வந்திருக்கிறோம். ஆகவே பாலின சம்பந்தப்பட்ட உறவு முறைகள் எந்தவிதமான தீர்ப்பு நெறிகளை பின்பற்றி இக்கதைகள் எழுதப்படவில்லை.மிக இயல்பாகக் கால நிர்ப்பந்தங்களை மனத்தில் கொண்டு எழுதப் பட்டுள்ளன.

கணேஷ் நிறைய எழுத வேண்டும். அவர் அநுபவங்களை இலக்கிய நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Advertisements

§ One Response to டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: