வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம்

March 20, 2015 § 7 Comments


வள்ளுவர் கூறும் ‘சாவா மருந்தை’ (’அமிர்தம்’) வைஷ்ணவ வியாக்கியானகாரர்கள் ‘உப்புச் சாறு’ என்பார்கள். இங்கு ஏற்றம் உப்புக்குத்தான். அவ்வளவு முக்கியமானது உப்பு. ஏழை,பணக்காரன் என்றில்லாமல் அனைவர் உணவிலும் இருந்து அமைய வேண்டிய நிலையில், ஜனநாயக அந்தஸ்து பெறும் பண்டUppu Vèli_Wrapper  ம் உப்பு.

இந்தியாவைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டி அரசியியல் ஆதிக்கம் பெற ஒரு முக்கிய பொருளாக உப்பைக் கருதியது,18.19ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆட்சிச் செலுத்திய ஆங்கிலேயக்  கிழக்கிந்திய கம்பனி. அப்பொழுதைய இந்தியாவின் சிந்த் மாநிலத்தினின்றும் ஒரிஸா மாநிலம் வரை, வடகிழக்கு இந்தியாவில் 2504 மைல் தூர அளவில், ஒரு கல், மண், உலர்ந்த செடி கொடிகள் அடர்ந்த மாபெரும் புதர் வேலி எழுப்பி, அந்த எல்லைக்குள் உப்பைப் பதுக்கி வைத்து, காவல் காத்து, விற்பனை வரி விதித்து,, கடத்தல் விவகாரங்களில், தண்டனையாகவும், லஞ்சமாகவும் ஏராளமான பணம் பெற்றும், கொள்ளை அடித்து, 157ல் லண்டனிலிருந்து, நேரடியான ஆங்கில அரசாட்சிக்கு வழி வகுத்தனர் கிழக்கிந்திய கம்பனி நிர்வாகிகள். ஆனால், இதே உப்புதான், இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியை விரட்டுவதற்கும், மகாத்மா காந்தியின் தலைமையில் அடிகோலியது என்பதுதான் நகைமுரண்.

வரலாற்று முக்கியத்வம் வாய்ந்த இந்தப் புதர் வேலியைப் பற்றிய எந்தச் செய்தியும் இந்த நூற்றாண்டுத் தொடக்கம் வரை, (குறிப்பாகச் சொல்லப் போனால், ராய் மாக்ஸம் என்ற தொழிமுறை Roy Moxham final 229சாராத வரலாற்று அறிஞர் ஒருவர்,, எதேச்சையாக,  லண்டனில், ஒரு பழையப் புத்தக க் கடையில், 1995ல், 19ம் நூற்றாண்டில் ஸ்லீமன் என்பவர் எழுதிய ஒரு நூலைப் பார்க்கும் வரை ), இல்லை. உலகம் சுற்றும் சரித்திர சாகசக்காரரான ராய் மாக்ஸம் , சீன நெடுஞ்சுவருக்கு நிகரான, ஆனால் இப்பொழுது சுவடு தெரியாமல் மறைந்து போய்விட்ட, இந்த உப்பு வேலியைத் தேடுவதே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு, அது அமைக்கப் பட்டிருந்த நெடும் பாதையை, பழைய வரைபடங்களைக் கொண்டும், இந்திய கிராம மக்களுடன் உடைந்த இந்தியில் அளவளாவியும், கண்டு பிடித்து,,’ The Great Hedge of India’ என்ற நூல்லை 2001. வெளியிட்டார். நூல் நிலையங்களைத் தாண்டி, வெளியே போகாமல் ஆராய்ச்சிச் செய்யும் பல்கலைக்கழகப் பண்டிதர்களால், இந்த அரியக் கண்டுபிடிப்பைச் செய்திருக்க முடியாது.

இந்நூல் இப்பொழுது தமிழில் சிறில் அலெக்சால் ஆக்கம் செய்யப்பட்டு,’எழுத்து’ப் பதிப்பகத்தரால் ’உப்புவேலி’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது/ ஆங்கில மூலத்தில், விரவிக் கிடக்கும், நகைமுரண்களையும், மென்மையான நகைச்சுவையையும், நுணுக்கமான வராற்றுணர்வு பார்வயையும் அப்படியே தமிழில் கொண்டு வந்திருக்கிறார் சிறில் அலெக்ஸ்.

இந்த நூலைப் பற்றி முதல் முதலில் விரிவாக எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறபடி, நமக்கே நம்மைப் பற்றிப் பல பரிமாணங்களில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி இந்நூல் நுட்பமாகச் சொல்லுகிறது. இதை நமக்குச் சொல்லுகிறவர் ஒர் ஆங்கிலேயர் என்பதும் Roy Day 1 165ஒரு முக்கியமான செய்தி.

இந்நூலைக்காட்டிலும் அதிக ஆச்சர்யமாக எனக்குப் படுவது இந்நூலாசிரியர்தாம்! தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளாமல், இவரால் ராஜஸ்தான் கிராமங்களில் மிக இயல்பாக மக்களுடன் உறவாடி, அக்கிராமங்களை மிக அற்புதமாக நம் மனக் கண் முன் கொண்டு நிறுத்துகிறார். இவரையே ஒரு கதா பாத்திரமாகக்கொண்டு ஒரு நாடகம் எழுதலாமென்று தோன்றுகிறது.

Tagged: , , , ,

§ 7 Responses to வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம்

 • Ramji says:

  கற்றது கை மண்ணளவு, கல்லாதது உப்பளவு எனலாம் போலும்..

 • Mohan says:

  Dear Saar:
  Namaskaram. Can you please tell me how to get a copy of this book locally in India? Thanks
  C.P.mohan

  Sent from my iPad

  >

  • kathiresan says:

   இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
   VPP அல்லது Professional Couriers’யில் அனுப்பி வைக்கிறோம்.
   1.உப்பு வேலி
   ராய் மாக்ஸம்
   தமிழில்.சிறில் அலெக்ஸ்
   ரூ .240
   பிரிட்டிஸ் இந்தியாவில் உப்பின் மீதான சுங்க வரியை வசூலிக்க கருங்காலி .இலந்தை முள் ,சப்பாத்திக் கள்ளி ,கிளாக்காய் ஆகிய முட்களால் ஆன புதர்வேலி அமைக்கப் பட்ட குறிப்பொன்றை படித்த இந்த நூலாசிரியர் ராய் மாக்சம் இந்தியாவுக்கு வந்து அதன் எச்சத்தைக் கண்டடைந்து உப்புவேலி என்கிற இந்த நூலைப் படைத்துள்ளார் .1500 மைலுக்கும் மேற்பட்டதாக முள்வேலி அமைக்கப் பட்டு 12000 பேர் வேலி ஓரத்தில் சுங்கப் பணியாளர்களாகப் நியமிக்கப்பட்டிருந்த வரலாற்றை எழுதியுள்ளார்.

 • […] ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசா… […]

 • ramjiyahoo says:

  உப்பு வேலி குறித்த தகவல்கள் /சோகம்/வருத்தம்/வேதனை மக்கள் மனதில் இருக்கக் கூடாது , வரும் தலைமுறைகளை மேலும் வருத்தம் அடையச் செய்யும். வரும் தலைமுறைகளின் மனதில் ஆங்கிலேயர், அரசு அதிகாரிகள், அதிகாரத்துவம் குறித்து வன்முறை எண்ணத்தை, விரோத மனப்பான்மை யை உருவாக்கும்
  என்ற அடிப்படையில் கூட நேரு +அம்பேத்கார்+காந்தி , உப்பு வேலியை அழித்து இருக்கலாம் தானே

 • […] வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம் – இந்திரா பார்த்தசாரதி […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

<span>%d</span> bloggers like this: