இலக்கியச் சிந்தனைகள் (5)

March 26, 2014 § 3 Comments


.

சங்கப் பாடல்கள் செய்யுள் அடி எல்லையின் அடிப்படையிலும் பொருள் அமைதியின் காரணமாகவும, சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ‘அகநானூறு, புறநானூறு’, ‘குறுந்தொகை’ என்ற வகையில் த்தலைப்புக் கொடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றவை. பாடிய புலவர்களின் பெயர்கள் அவர்களுடைய இயற்பெயர்களா என்று அறிய முடியவில்லை.
உறுப்பாற் பெற்றவர்கள் ( ஐயூர் முடவனார், நரைமுடி நெட்டையார், நெடுங்கழுத்துப் பரணர் போன்றவர்கள்0) ஊராற் பெயர் பெற்றவர்கள் ( ஆலத்தூர்கிழார், கருவூர்க்கிழார், காப்பியாற்றுக் காப்பியனார், கோவூர்க்கிழார் பொன்றவர்கள் ) சமயத்தாற் பெயர் பெற்றவர்கள் (இளம்போதியார், உலோச்சனார், நிகண்டன் கலைக்கோட்டுத தண்டனார் போன்றவர்கள்0 , செய்யுளில் ஆண்ட தொடராற் பெயர் பெற்றவர்கள் ( ’, ‘ஊட்டியார்’, ‘குப்பைக் கோழியார்,அணிலாடு முன்றிலார்’ , ’விட்ட குதிரையார்’ ‘மீனெறித் தூண்டிலார்” போன்றவர்கள்’ ) என்று பயின்று வரும் புலவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் காணும் பெஉம்பான்மையான கவிஞர்களின், தொகுத்தவர்கள் கொடுத்த பெயர்களாக இருக்கலாம் என்று கருதவதற்கு இடமுண்டு.

குறுந்தொகையில் வரும் இரண்டாம் பாட்டு மிகப் பிரபலமானது. பாடியவர் ‘இறையனார்’ என்று குறிக்கப்பட்டிருக்கிறது. யார் இந்த ‘இறையனார்?’. இந்தப் பாட்டை ஒட்டிப் பிற்காலத்தில் உருவாக்கப் பட்ட கதையின்படி, பாட்டை இயற்றியவர் சிவ பெருமான், no less. ஓர் ஏழை அந்தணன் அரசனிடம் பொருள் பெறுவதற்காக எழுதிக் கொடுத்த பாட்டு. நக்கீரன் பாட்டிலுள்ள பொருள் குற்றத்தை எடுத்துக் காட்டுகிறான். சிவ பிரானே நேரில் வந்து நக்கீரனைத் தண்டிக்கிறார். அவன் ‘திருமுருகாற்றுப்படை’ பாடி, அவனைப் பற்றிய பிணியினின்றும் விடுதலைப் பெறுகிறான்.இக்கதையின் பயன், சிவபெருமானிடம், ‘நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சொன்ன நக்கீரன் பிற்காலத்தில் வந்த எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஒரு துணிச்சலான முன் மாதிரி (iconic figure) ஆனதுதான்.

இவ்வாறு உருப் பெறும் கதைகள் சுவாரஸ்யமானவை. அவற்றை ஆராய்ச்சி அளவுகோலுடன் அணுகக் கூடாது.

சிவபிரானோ, அல்லது பெயர் தெரியாத கவிஞனோ யாராக இருந்தாலும், அவன் இயற்றிய கவிதை அருமையானது.

பாட்டு:
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

தலைவனும் தலைவியும் கூடுகின்றனர். புணர்ச்சி நிகழ்ந்தபின் தலைவன் அவளுடைய மெய்ந்நலம் பாராட்டுகிறான். கூந்தலை விரித்துப் பாய்லாகக்கிடத்தியிருக்கிறாள் தலைவி. அதன்பால் தானும் கிடக்கிறான் தலைவன். கூந்தல் மீது பல மலர்கள் அருகிலிருந்த மரத்தினின்றும் சொரிந்திருக்கின்றன மலரிலுள்ள தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற தும்பி (வண்டு) மலரைவிட்டுத் தலைவியின் கூந்தலில் மயங்கிக் கிடக்கிறது போல் தோன்றுகிறது. வண்டுகளை ஈர்ப்பது மலரின் மணம்.ஆனால் இங்குக் கூந்தலில் மயங்கிக் கிடக்கும் தும்பியைப் பார்த்துப் புன்னகை செய்து கேட்கிறான் தலைவன்: ‘நீ பல மலர்களின் மணத்தை அறிவாய். ஆனால் இக்கூந்தலில் நீயும் என்னைபோல் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, எனக்குக் கேட்கத் தோன்றுகிறது’ இந்தக் கூந்தலின் இயற்கை மணத்தைப் போல் எந்த மலருக்காவது உண்டா சொல்’.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பதுதான் சிவபெருமானுக்கும் நக்கீரனுக்கும் நடந்த விவாதம். ‘கிடையாது’ என்கிறான் நக்கீரன். அதை ஒப்புக்கொள்வது போல், சிவபெருமான் அடுத்துக் கேட்க்கும் கேள்விதான் நக்கீரனுக்கு எரிச்சல் ஊட்டியிருக்க வேண்டும். ‘ நீ வணங்கும் உமையின் கூந்தலுக்கு?’ என்கிறான் சிவன். ‘ இல்லை’ என்கிறான் நக்கீரன். அப்பொழுது சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்த போதும் தான் சொல்வது தவறு என்று நக்கீரன் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை.இது தமிழ் நாவலர் சரிதையில் வரும் பிற்காலக் கதை.

வாத்ஸாயாயனர் கருத்தின்படி, ஆணின் வியர்வை மணமும், பெண்ணின் கூந்தலின் இயற்கை மணமும் காமக் கிளர்ச்சியைத் தூண்ட வல்லவை. சிவ பெருமான் வாத்ஸாயாயனர் படித்ததில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இக்குறுந்தொகை பாட்டின் ஆசிரியராகக் கூறப்படும் ‘இறையனார்’ படித்திருக்கிறார்!

Advertisements

§ 3 Responses to இலக்கியச் சிந்தனைகள் (5)

  • S. Krishnamoorthy says:

    வாத்ஸாயாயனர் கருத்தின்படி, ஆணின் வியர்வை மணமும், பெண்ணின் கூந்தலின் இயற்கை மணமும் காமக் கிளர்ச்சியைத் தூண்ட வல்லவை. சிவ பெருமான் வாத்ஸாயாயனர் படித்ததில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இக்குறுந்தொகை பாட்டின் ஆசிரியராகக் கூறப்படும் ‘இறையனார்’ படித்திருக்கிறார்!
    எத்தகைய இயல்பான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் மீண்டும் படித்தேன். இன்புற்றேன். நன்றி சார்!

    • நன்றி. கடைசி வரி ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது. திருத்தி விட்டேன்.படியுங்கள்

  • Ram says:

    சிவ பெருமான் வாத்ஸாயாயனர் படித்ததில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இக்குறுந்தொகை பாட்டின் ஆசிரியராகக் கூறப்படும் ‘இறையனார்’ படித்திருக்கிறார்! Ayya idhil satire (angadham) ullada illai thonmam ullada?? Satru vilakungalen..nanri..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading இலக்கியச் சிந்தனைகள் (5) at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: