இலக்கியச் சிந்தனைகள்(2)

March 20, 2014 § 1 Commentசங்க இலக்கியங்கள் தமிழுக்’கே’ உரித்தான தனிவகை இலக்கியக் கருவூலம் என்பதில் ஐயமில்லை, ‘ ஏ’காரத்தில் அழுத்தம் இல்லாவிட்டால். ஏனெனில், கிட்ட்டதட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே( பொது யுகம் 150க்கு முன்) மஹராஷ்ட்ரியில் அதாவது, தக்கிண பிராக்கிருதத்தில் ‘கா(GA)ஹா சத்தசய்’ (சமஸ்கிருதத்தில்’ ஸப்தஸதி) என்ற பிற்காலத்தில் தொகுக்கப்பெற்ற நூலில், சங்க அகத்துறைப் பாடல்கள் போல் அகதுறைப் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ஒரு சான்று.

அன்னைமீர்!
அவன் காதல்
கண்ணிமைப் பொழுதில்
காணாமல் போய்விடுகிறது!
கவின் பெரு சிறு அணி
கண்ணெதிரே தோன்றி அசைய
பற்றும்போது பார்வையினின்றும்
மறைவதனைய…

சிந்துநதிப் பெருவெளி நாகரிகம் மறைந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவான நிலையில் தெற்கு நோக்கி வந்த இனம் தெற்கு மஹராஷ்ட்ரிரத்திலும் தென்னிந்தியாவிலும் பரவியிருக்கக்கூடும். அப்பொழுது ஏற்பட்ட இனக் கலப்பினால், பல் வேறு மொழிகள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கக் கூடும். இலக்கியம் உருவாவதற்கு முக்கியக் காரணம் இனவழி நினைவாற்றல்(racial memory)தக்கிண மராஷ்ட்ரியும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் நிச்சியமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் மராதி மொழிக்கும் தமிழுக்கும் உறவு முறை பொதுவான சொற்கள் பல் உள்ளன. அதனால்தான் என் நண்பர் பேராசிரியர் நிமாடே மராத்தியும் திராவிட இனன மொழியாகக் குறிப்பிடப் பட வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.

செவ்வியல் சமஸ்கிருத( Classical Sanskrit) நாடகங்களில் மஹராஷ்ட்ரி பேசுபவர்கள் கீழ்ச்சாதி மக்கள்.( நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாடகங்கள்) .நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாட
கங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவை அனைத்தும் ஒரே காலத்தவை. பொது யுகத்துக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டு. இக்காலக் கட்டத்தில் வர்ணாஸ்ரமத்தின் விளைவாக சாதி வேறுபாடுகள் பல்கிப் பெருகி விட்டன

‘பிராக்ருதம்’ என்றால் ‘ இயல்பான’, ‘உலகியல்’ என்று அர்த்தம் அதாவது பேச்சு மொழிகள்.. ஆகவே ஏட்டு மொழியான சம்ஸ்கிருதம் ‘இயல்பான’தன்று. உலகியல் வழக்கில்லை. தொல்காப்பியமும், மொழியை, ‘உலகியல் வழக்கு’, நாடக வழக்கு’, ‘புலனெறி வழக்கு’ (இலக்கிய வழக்கு) என்று பாகுபடுத்திக் காண்கின்றது. இலக்கணத்திலேயே இவ்வாறு மொழியைப் பாகுபடுத்திச் சமூக நடைமுறையில் அனத்துக்கும் இடம் வகுத்த காரணத்தினால்தான், தமிழ், செவ்வியல் மொழியாகவும் உலகியல் பேச்சு மொழியாகவும் இருந்து வருகிறது என்று சொல்லலாம். சம்ஸ்கிருதம் போல்வெறும் ஏட்டு மொழியாக வழக்கிறந்து போகவில்லை.

இந்த கஹா சத்தசய் பாடல்களை எழுதியவர் ஹாலா என்பவர் என்று கூறப்படுகிறது. ‘ஹாலம்’ என்றால் ‘விஷம்’ அதாவது முதல் முதலில் இப்பாடல்களைத் தொகுத்தவர் விஷத்தை விழுங்கிய சிவ பெருமான் என்று வைத்துக் கொள்ளலாம். தமிழ் ‘முதல் சங்க’ த் தலைவர் சிவ்பெருமான். ஆதி சிவன் பெற்றெடுத்த மொழிகள் இரண்டு. சமஸ்கிருதம் ,தமிழ். இரண்டு மொழிகளையும் அவன் அகஸ்தியனுக்குக் கற்றுத் தருகிறான். ‘வடமொழி கடந்து தென் மொழிக்கு எல்லை நேர்ந்தவன் அகத்தியன்’

இந்தத் தொன்மங்கள்தாம், (புராணங்கள்) நம் சரித்திரம் இவற்றை ஆய்ந்தறிந்து பொருள் தேர்வது நம் கடமை.

Advertisements

§ One Response to இலக்கியச் சிந்தனைகள்(2)

  • தொல்காப்பியமும் சிலப்பதிகாரம் இரண்டும்சம காலத்தவை என எழுதியுள்ளீர்கள். இது போன்ற கருத்துக்கள் கூறும் போது இத்தகு பேருண்மையை எந்த நூலில் படித்தீர்தள் எனச் சேர்த்து எழுதவும். கதை எழுதுபவர் ஆதலால் இந்தக் கருத்து கற்பனை யாரையும் குறிப்பிடுவன அலால எனச் சொல்லி விட்டு எழுதவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading இலக்கியச் சிந்தனைகள்(2) at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: