‘அஹம் பிரும்மாஸ்மி’

July 25, 2011 § 13 Comments


போன நூற்றாண்டு அறுபதுகளில் ஒரு தன்னாப்பிரிக்கக்  கம்யூனிஸ்ட் எழுத்தாளர் (வெள்ளையர்)  இந்தியாவைப் பற்றி எழுதிய நூல் பார்லிமெண்டை ஒரு கலக்கு கலக்கியது. இரண்டு மூன்ற் பேர்களைத் தவிர ம்ற்றைய யாவரும் அந்த நூலைப் படிக்கவில்லை என்பது வேறு விஷ்யம். சல்மான் ருஷ்தியின்  ‘Satanic Verses” யைப் படிக்காமலேயே ரகளை செய்ய வில்லையா? அந்தத் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலைத் தடை செய்தார்கள்.

அவர் அப்படி என்ன எழுதிவிட்டார்?

நூல் தடை செய்வதற்கு முன்பே நான் அதை வாங்கிப் படித்திருந்தேன்.

இந்திய மக்களுக்கு அவரவர் வீடுதான் அவர்களுடைய தேசம். வீட்டுக்கு வாசல் வெளிநாடு. அவர்களுடைய குடும்பந்தான் அவர் தேசத்துப் பிரஜைகள். பக்கத்து வீட்டுக்கரன் அந்நிய தேசத்தவன். தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களேதவிர, வீட்டுக்கு வெளியேயிருக்கும் அந்நிய தேசமாகிய சுற்றுப் புறம் எவ்வளவு அசிங்கமாகக் குப்பையும் கூளமுமாக இருந்தாலும் கவலைப் பட மாட்டார்கள்.

இதற்கு அவர் தமிழ் நாட்டுக் கிராமமொன்றில்  கண்ட  காட்சியை உதாரணமாகக் காட்டியிருந்தார்.

ஒரு வீட்டில் சாப்பிட்டு விட்டு எச்சில் இலைகளை எதிர்த்த வீட்டு வாசலில் போட்டார்கள். அந்த எதிர்த்த் வீட்டுக்காரர்கள் அவர்களுடைய எச்சில் இலைகளை இவர்கள்  வீட்டு வாசலில் போட்டார்கள். Account settled. ஷெகலுக்கு என்ன ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு வீட்டுக் காரர்களுக்கும் இது தப்பாகவே படவில்லை!

இதற்குக் காரணம்,  பாரம்பரியமாக வரும் இந்தியர்களுடைய  சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதீயிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை.

பௌத்தம், சநாதன மதத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து, சமூகத்தைப் பேணியது பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடவில்லை. பக்தி இயக்கமும் இந்தத் தனிப்பட்டவர் சொர்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பஜ்’ என்றால், ‘கூடு’ என்ற பொருள். ‘பஜனி’. ‘பக்தி’ என்பதின் வேர்ச்சொல் ‘பஜ்’. சமூக வழிப்பாட்டுக்காகத்தான், பக்தி இயக்கத்தின் காரணமாக, மாபெரும் கோயில்கள் உருவாயின.

ஆனால், இவை ஒரு சராசரி இந்தியனின் பாரம்பரிய அடிமனத்தை தொடாமல் போய்விட்டதோ என்ற சந்தேகமும் நியாயமானதுதான்.இல்லா விட்டால், ரொனால்ட் ஷெகல் கூறுவது போல், சுற்றுபுற சுகாதாரத்தைப் பற்றி அவன் ஏன் கவலைப் படுவதேயில்லை?

தில்லியில் இப்பொழுதும் பஞ்சாபி மத்தியத்தர குடும்பங்கள் வசிக்கும் இடங்களில், ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடைய சௌகர்ய அசௌகர்யங்களைப் பற்றிக் கவலையே பட மாட்டார்கள். ஓலி பெருக்கிகள் அலறிக் கொண்டிருக்கும். எணெனில் உலகம் அவர்களுக்கு மட்டுந்தான்.

வாரிசு அரசியலும் இக் கொள்கையின் நீட்சிதான்.

Advertisements

§ 13 Responses to ‘அஹம் பிரும்மாஸ்மி’

 • “அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும்…”

  இதெல்லாம் நுனிப்புல் மேய்தல்.

  இங்கிலாந்திலும் `இங்க்லிஷ் நபரின் வீடு அவர் கோட்டை` என கருதப்பட்டது, கருதப்படுகிறது. அது `இங்க்லிஷ் காமன் லா` புத்தகத்திலேயும் (சட்டம்) எழுதப்பட்டது. ஆனால் அது தனிமனிதனுக்கு பிரதிகூலமாக செயல்படும் அரச / அரசு ஆதிக்கத்தை கட்டுப்பட்டுவதற்க்கு எழுதப்பட்டது.

  This was established as common law by the lawyer and politician Sir Edward Coke (pronounced Cook), in The Institutes of the Laws of England, 1628:

  “For a man’s house is his castle, et domus sua cuique est tutissimum refugium [and each man’s home is his safest refuge].”

  What was meant by ‘castle’ was defined in 1763 by the British Prime Minister ……known as Pitt the Elder:

  “The poorest man may in his cottage bid defiance to all the forces of the crown. It may be frail – its roof may shake – the wind may blow through it – the storm may enter – the rain may enter – but the King of England cannot enter.”

  ஆனால் இங்கிலாந்து / மேற்கு ஐரொப்பாவைப் போல் இந்தியாவில் குடியுணர்வு (civic consciousness) உண்டாகவில்லை . அதனால் ஒரு பொதுவெளி அறம் (public virtues) என்பதும் வளரவில்லை.

  விஜயராகவன்

  • Civic Consciousness ஏன் ஏற்படவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. தர்ம சஸ்திரத்திலும் நமக்கு இது சரி இது தப்பு என்பதெல்லாம், அதன் பரிபூரண அர்த்தத்தில் செயல்படுவதில்லை. செய்யும் ஒரே வகையான குற்றத்துக்கு, ஜாதிக்குத் தகுந்தமாதிரியான் தண்டனை வழங்கவேண்டுமென்று மனு தர்மமும் அர்த்ட சாஸ்திரமும் கூறுகின்றன. இச்சூழ்நிலையில் Civic consciousness என்று கூறப்படுகிற பொது நிலை அறம் எப்படி உருவாகும்?
   True, ‘aham brahamsmi’ was such an intellectual concept that in reality it was not comprehended by an ordinary man. This only led to individual salvation seekers like Sankara’s concept of “maya’ was totally misunderstood by the majority. The Ramanuja episode at Thirkoshtipuram only illustrates that the great saint was determined to put what was good for all in the public domain.

 • நாம் சாஸ்திரங்கள், சங்கரர், ராமானுஜர், பழைய உலகத்தை ஆதர்சமாக எடுத்து அதன் மேல் நம்பிக்கை வைப்பதாலோ, அதானால் மனச்சோர்வு அடைவதாலோ பிரயோஜனம் இல்லை.

  புதிய உலகிற்க்கு வேண்டிய புதிய அறத்தை வளர்க்க வேண்டும். அதற்கு சட்டம், சட்டத்தை அமல் படுத்துபவர்கள், நிர்வாகங்கள், போன்றவர்கள் தளராது உழைக்க வேண்டும், அறிவு ஜீவிகள் மேலே சொன்னவர்கள் தளராது இருக்கின்றனரா என விழிப்புடன் செயல்பட வேண்டும்.

  விஜயராகவன்

 • virutcham says:

  அஹம் ப்ரம்ஹாச்மி க்கு இப்படி எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க முடியுமா?

  முதலில் ஒரு சாதாரண மனிதனுக்கு அதற்கான அர்த்தம் கூட தெரிந்திருக்காது. அதன் அவசியங்கள் ஒரு சராசரி வாழ்வில் தேவைப்படுவதும் இல்லை. முதலில் தான் என்ற சுற்றுக்குள் தான் எல்லோரும் எல்லா உலகிலும் வாழ்கிறார்கள். அதில் இந்தியன் கொஞ்சம் தேவலை. தன் குடும்பம் என்ற ஒரு வட்டம் அதைத் தாண்டி தன் உறவு என்ற ஒரு வட்டத்துக்குள் வருகிறான். சுற்றுப்புற சுகாதாரம் என்பது இந்தியாவில் ஒரு பிரச்சனையாக இருப்பதற்கு முதல் காரணம் ஜனத்தொகை. அடுத்த காரணம் இந்தியனின் சராசரி வாழ்வில் விழாக்கள், சம்பிரதாயங்கள் அதிகமாக இருக்கிறது. சுகாதாரம் என்ற அளவில் இந்தியன் நிறைய முன்னேற வேண்டும் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவனவன் வீட்டுக்குள் மற்றும் தனிப்பட்ட முறையில் தேவைப்படும் அடிப்படை சுகாதாரம், சுத்தம் மற்றும் உணவுப் பழக்கங்கள் என்று பார்க்கும் போது இந்தியன் மற்றவர்களை விட தேவலை.

  frozen மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டு தேவைகள் என்பதற்கான அன்றாட அளவுகோலில் வாழும் ஒரு மேற்கத்திய வாழ்கை வாழ்பவர்கள் இந்தியர்களின் புறவய வாழ்வு முறையை விமர்சிக்கும் தகுதிக்குள்ளே வருவதில்லை. இன்றைய இந்தியாவின் பிரச்னை இந்தியனும் மேற்கின் வட்டத்துக்குள் கலந்து கொண்டு இருக்கிறான்.

  அதாவது அஹம் இல் இருந்து புறத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறான். அஹம் குப்பையாகிக் கொண்டு இருக்கிறது.

 • இபா அவர்களுக்கு வணக்கம்

  சும்மா இந்தப்பக்கம் வந்தேன் ))

  சிவிக் சென்ஸ் என்ற ஜனநாயகம் சார்ந்த சொல்லை இன்னும் ஜனநாயகமே உருவாகாத இந்தியச்சூழலில் போடமுடியாது.

  ஜனநாயகம் வருவதற்கு முன்னால் இங்கே இருந்தது கிராமப்பண்பாடு, அங்கிருந்தது குல ஆசாரம், அதன் நெறிகள். அந்த நெறிகளில் கூட்டான வாழ்க்கைக்கு தேவையான கட்டுப்பாடுகள் இருந்தனவா என்பதே கேள்வி.

  அதற்கு ஆசாரக்கோவை போன்றநூல்களை பார்க்கவேண்டும். அல்லது அபிதானசிந்தாமணியை

  அந்த கிராமியசமூகத்தில் எந்த தனிமனிதனும் இஷ்டப்படி இருந்துவிட முடியாதென்பதே உண்மை. ஆசாரங்களும் கட்டுப்பாடுகளும் மிகமிக கடுமையானவை

  நீரை எப்படி பேணவேண்டும் என்பதற்கு 62 நிபந்தனைகள் உள்ளன. உதாரணமாக சுருட்டிய முடியை நீரில் [எந்த நீரிலும்] விட்டாலும் ஒருநாள் உணவு நீர் தவிர்க்கவேண்டும்.

  அந்த குல-சாதி ஆசாரங்கள் பேணப்படும் சில ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. மூடுண்ட ஊர்கள். பழைமை கோலோச்சும் ஊர்கள். ஆனால் மிகமிக சுத்தமானவை. நான் ராசிபுரம் மலைமேல் ஒரு கிராமத்தில் ஒருநாள் தங்கி அங்கிருந்த சுத்தம் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். அவர்கள் வாழ்வது 18 ஆம் நூற்ராண்டில். அந்த சமகாலத்தில் இங்கிலாந்தில் எல்லா மலத்தையும் தேம்ஸில் போட்டுக்கொண்டிருந்தார்கள்

  உண்மையில் நாம் குல ஆசாரங்களை விட்டுவிட்டோம்- அது ஒரு வரலாற்றுத்தேவை. குடிமையுணர்வை கற்றுக்கொள்ளவில்லி

  என் சின்ன வயதிலேயே பந்தியிலே சாப்பிட 62 ஆசர விதிகள் இருந்தன [பேசக்கூடாது, கையூன்றி எழக்கூடாது இன்னபிற] இன்று நாம் விருந்துகளில் முட்டிமோத்தி சத்தம்போட்டு ஆட்டுமந்தைகள் போல சாப்பிடுகிரோம்– அதற்கு மரபு காரணமல்ல. மரபின்மையே காரணம்

  சாப்பிடும்போது பேசக்கூடாது. கைய்டைகையை பொஇடும்

  • ஜெயமோகன் ,நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் ஜனநாயகம் என்ற கருத்து எப்பொழுது ஐரோப்பாவில் உருவாகியது? கிரேக்கவேர்ச்சொல்லை ‘democracy’ கொண்டிருந்தாலும், கிரேக்க city States அனைத்தும் ஜனநாயக நாடுகள் என்று ஏற்ற்க் க்ள்ளமுடியுமா? தொழிற்புரட்சி, பிரஞ்சுப் புரட்ச்சிக்குப் பிறகுதான் ஐரோபபாவிலேயே மக்களுக்குத் தம் உரிமைகளைப் பற்றிய அக்கறை ஏற்பட்டது. மாக்னா கார்டா, பார்லிமெண்ட் என்பவையெல்லாம் பிரபுக்களுடைய தன்னலம்பற்றிய உரிமைப் போராட்டாங்கள்தாம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவில் உருவான civic sense,நாம் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்தும், இது எந்தவிதமான பாதிப்பையும் ஏன் ஏற்படுத்தவில்லை?
   ஜாதிச் சண்டையும், சமப்போரும், அரசனுக்காக( இப்பொழுது அரசியல் அல்லது சினிமா) தலைவனுக்காகப் பிராணத் தியாகம்) போன்றவை தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றனவே தவிர, பொது நலனுக்காகக் கூக்குரல் ஒலித்ததாக சுதந்திரப் போராட்டத்துக்கு முன்புவரை வரலாறே இல்லை.ச

   • Kangal-Irandaal says:

    இபா Sir, நீங்கள் சொல்லும் புரட்சிகள் அரசனுக்காகவே நடத்தப்பட்டது ஒரு காலத்தில் என்ற கருத்து பாதி தான் உண்மையோ என்று தோன்றுகிறது. அரசர் காலத்தில் இருந்த வாழ்கை முறையே வேறு. இப்பொழுது இருக்கும் வாழ்கை முறையே வேறு. அப்பொழுதெல்லாம் அரசன் என்றாலே நாடு என்பது தான் நிதர்சனம். A king was not just a brand ambassador. He was more than that. A person who had to become a king was made to learn lot of things. One of the things that was taught to them that king was the personification of the kingdom itself. ஒரு நாட்டின் வளமையும், பாதுகாப்பும், மக்களின் தரமும், மக்களின் எண்ண ஓட்டங்களும் பிற அனைத்தும் ஒரு அரசனை ஒட்டியே இருந்தது. அதனால் தான் “யதா ராஜ ததா பிரஜா” என்று சொன்னார்கள்.

    Infact i feel, that sort of rule was good for the country. Can anybody refute the leadership qualities exhibited by likes of Raja raja chola?

    நமக்கு தான் மேல்நாட்டு வழியே மகேசன் வழி என்று ஆகி விட்டதே. (மஞ்சளும், வேம்பும் கூட அவர்கள் வந்து சொன்ன பிறகு தான் நமக்கு உரைக்கிறது). நம் முன்னோர்கள் சொன்ன ஆச்சாரங்களுக்கு பார்ப்பனீய சாயத்தை பூசி, கேலி செய்தாகி விட்டோம். நீங்கள் சொல்லும் இந்த “civic sense” என்பது, “nothing but our old way of life prescribed in our own literatures” as ஆச்சாரங்கள்.

    நம்முடைய ரூட்ஸ் நாம் மறந்து விட்டோம்.

    பக்கத்துக்கு வீட்டையும் சேர்த்து பந்தல் போடுதல் என்ற பழக்கம் நம் தென்மாநிலங்களிலும் உண்டு. அதற்க்கு முக்கிய காரணம், அந்த காலத்தில், ஒரு குடும்பத்தவரே அருகருகில் இருப்பார்கள். அத்துணை வேலையையும் பகிர்ந்து கொள்வார்கள். இன்று போல் “contract” இல் விடுவதோ, “marriage services” கம்பனிகளோ அன்று கிடையாது. இன்று நாம் வாழும் வாழ்கை அப்படியா இருக்கிறது?

    So, what we as indians need to know is how to change ourselves with respect to change in life style. Indians lifestyle had been changing over centuries/decades. Whereas Europeans, it seems to be maintained constantly.

 • இந்தக்குற்றச்சாட்டு எப்போதுமே மெலைநாட்டினரால் இந்தியாமேல் வைக்கப்படுகிறது. மிக விரிவான பதில் இது
  அத்வைதம் குற்றவாளியா?
  http://www.tamilpaper.net/?p=863

 • களிமிகு கணபதி says:

  //…இதற்குக் காரணம், பாரம்பரியமாக வரும் இந்தியர்களுடைய சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதீயிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை…//

  இந்து தர்மம் முழுக்க முழுக்க தனிமனித விடுதலையைப் பற்றிப் பேசவில்லை. தனிமனித ஆன்மீகமானது சமூகத்தில் அறம் எனும் வடிவில் செயல்படும்படி வைத்திருக்கிறது.

  individualism vs socialism என்பதெல்லாம் ஐரோப்பியர்களின் வயிற்றுக் கடுப்பால் வெளியானவை. அவற்றை இந்தியாவிற்கு பொருத்துவது தவறு.

  இந்தியாவில் civic sense என்பது இல்லாமல் போனதற்கு முதற் காரணம் இஸ்லாமிய கலாச்சாரம். அரபிகள் அல்லாத மற்ற இஸ்லாமியர்களின் நாடுகளைப் பாருங்கள். இரண்டாவது காரணம் ஆங்கிலேயர் உள்ளிட்ட யூரோப்பிய கலாச்சாரம். இந்தியாவில் சேரி என்ற ஒன்றை உருவாக்கியவர்களே ஆங்கிலேயர்கள்தான்.

 • ​திரு. ​ஜெய​மோகன் அவர்கள் குறிப்பிடும் தமிழ் ​பேப்பர் கட்டு​ரைகள் எதுவும் அத்​வைதத்​தை பாதுகாக்கும் வலுவான வாதங்க​ளை முன்​வைக்கவில்​லை. ஒரு விஞ்ஞான ஆய்​வை எடுத்துக் ​கொண்டு அத்​வைதத்​தை நியாயப்படுத்த மு​னையும் ஒரு மு​றை எந்த தர்க்க​பொறுத்தமும் இல்லாததாக உள்ளது.

  ​மேலும் ​ஜெய​மோகன் எந்த ​நோக்கில் தன்னு​டைய இ​ணைய தளத்தில் உங்கள் கட்டு​ரை​யையும் ​நே​ரெதிரான அரவிந்தன் நீலகண்டனின் கட்டு​ரை​யையும் ஏ​தோ ஒரு ​தொடர்ச்சி ​போன்ற பாவ​னை ஏற்படும் விதம் ​தொடர்புபடுத்தி அறிமுகம் ​செய்கிறார் என்றும் புரியவில்​லை.

 • விக்கி says:

  சார் இந்து மதத்துக்கு ஆதரவா எழுத நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே!!நல்லா இருங்க சார்!!உங்கள் பனி தொடரட்டும்!

 • every one has right to say and act as aham premashmi. while such situation came, there is no need of jalacy and quaralamong us. because premamm measn no liking or disliking.in other words the person having fulfilled life.Athvitham never disappears as it deeply says change is the only thing without changing in our life & our universe. it may be so called maya ! thanks to all -G.R.Srinivasan, Chennai-53.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘அஹம் பிரும்மாஸ்மி’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: