ஹிட்லர் பிராமணனா?

July 11, 2011 § 18 Comments


‘திராவிடம்’ என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்லா, மொழியை உணர்த்தும் சொல்லா? ‘திராமிடோயுபனிஷத்’ என்று ‘திருவாய்மொழியை’ வைஷ்ணவ ச்சார்யர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டபோது, அதற்குத் ‘தமிழ் உபநிஷதம்’ என்றுதானே பொருள்? இதில் இனம் எங்கிருந்து வந்தது?

பிரித்தாளும் சூழ்ச்சியிலே வல்லவர்களான மேல் நாட்டினர் இந்திய மக்களை ஆரிய இனம் என்றும் திராவிட இனம் என்று பிரித்ததே அவர்களுடைய அரசியல் சாணக்கியம். அப்பொழுதே மாக்ஸ்முல்லர் இந்த பாகுபாட்டை வன்மையாக மறுத்தார். ‘திராவிடம்’ என்பது மொழி பற்றியதே தவிர, இனம் பற்றியதன்று என்று திட்ட வட்டமாக வரையறுத்தார்.

ஆர்ய’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில்’ தலவன்’ என்று தான் பொருள். இராமன், அநுமனை ‘ஆர்ய’ என்று அழைக்கும்போது, தற்காலத்தில், செல்லமாக, ‘my dear boss’ என்று குறிப்பிடுவது போல்தான். ‘ஆர்ய’ என்ற சொல்லுக்கும் ‘ஐ’ என்ற தமிழ் சொல்லுக்கும் தொடர்பு இருக்கிறது. ‘ஐ’ என்றால் ‘தலைவன்’ என்ற பொருள். ‘என்னை முன் நின்று கனன்றவர்’ என்பது குறள்.’என் தலைவன் முன் நின்று போரிட்டு நடுகல்லானவர்கள்’ என்று அர்த்தம்.

‘ஆர்ய’ அல்லது, மேல்நாட்டினர் உச்சரிப்பது போல் ‘ஏர்ய’ என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இனத்தைக் குறிக்கும் சொல்லாக Joseph Arthur Gobineau’ என்பவரால் ஆளப்பட்டது. நார்டிக்  இனமாகியாகிய இது தூய்மானதெண்ரும், உலகை ஆளப் பிறந்ததென்றும் கூறினார். எப்பொழ்தோ இருந்ததாகக் கருதப் படும் ‘அட்லாண் டிஸ்’  நிலபிரிவினர் ‘ஏரியர்கள்’ என்றும் அவர்கள்தாம் பிற்காலத்தில் ஈரான் வழியாகச் சென்று இந்திய-ஐரோப்பிய வேத காலத்து நாகரிகத்தை உருவாக்கினார்கள் என்றும் எந்த விதமான விஞ்ஞானப் பூர்வமான ஆதாரமுமின்றி ஒரு புதுக் கருத்து ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவத் தொடங்கியது. இங்கிலாந்தில் வசித்த Houston Stewart Chamberlain போன்ற ஜெர்மானியர்கள் இந்தக் கொள்கைக்கு வலு சேர்த்தார்கள். இந்த’ஏரிய” (‘ஆர்ய’) இன மேலாண்மை ஹிட்லரை மிகவும் கவர்ந்து, அவன் ஆரிய இனமாகிய  ஜெர்மானியர்கள்தாம் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று கூறி  நாஸிஸக் கட்சியைத் துவங்கினான்.

வின்ஸன் ஸ்மித் போன்ற ஆங்கில வரலாறராசிரியர்கள், இந்த இன வாதத்தை, அரசியல் சௌகர்யங்களுக்காக, இந்தியாவில் ‘ஆரிய’ ‘திராவிட’ இன வேறுபாட்டை உருவாக்கினார்கள். வட இந்தியாவை ஹிந்து-முஸ்லீம் என்று பிரித்து மக்களுக்குள் மனக் கசப்பை வளர்த்தது போல், தென்னிந்தியாவில், ஹிந்து முஸ் லீம் வேறுபாட்டை உருவாக்க முடியவில்லை என்ற நிலையில், தென்னாட்டுப் பிராம்மணர்கள் ஆரியர்களென்றும், பிராமணர் அல்லாதார் திராவிடர்கள் என்றும் ஒரு புது வரலாற்றை தோற்ற்வித்தனர்  காலனிய ஆட்சி யைச் சார்ந்த வரலாற்ராசிர்யர்கள். ஹாரோவிலும் கேம்ரிட்ஜிலும் படித்துவிட்டு இந்தியா திரும்பிய  ஜவஹர்லால் நேரு இந்தியா பற்றிய தம் அரைவேக்காட்டு வரலாற்றறிவில் இக்கொள்கையை ஆதரித்து, இராமயாணம் ‘indicates the Aryanizathion of the South’ என்று கூறியதுதான் வருந்தத்தக்கது. இன்றும் கருணாநிதி  நேரு கூறியதைத்தான் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பெரியார், பிராம்மணர்களை ஆரியர்கள் என்று சொல்லி வந்ததால்,இது சபந்தமான நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் கூற வேண்டும். என் பள்ளி வகுப்பாசிரியர் பிராம்மணர், வைணவர். அவர் ஹிட்லர் ஜெயிக்க வேண்டுமென்று பூஜை செயது வந்தார். என்ன காரணம் என்று கேட்ட போது, அவர் சொன்னார்: ‘நாய்க்கர் சொல்றார் நாமெல்லாம் ஆரியர்கள்னு, ஹிட்லரும் ஆரியன்தானே, அவன் ஜெயிக்க வேணாமா?’ ஜெயிச்சா பிராம்மணாளுக்கு நல்லதுதானே?’

Advertisements

§ 18 Responses to ஹிட்லர் பிராமணனா?

 • “பிரித்தாளும் சூழ்ச்சியிலே வல்லவர்களான மேல் நாட்டினர் இந்திய மக்களை ஆரிய இனம் என்றும் திராவிட இனம் என்று பிரித்ததே அவர்களுடைய அரசியல் சாணக்கியம். “…… “வின்ஸன் ஸ்மித் போன்ற ஆங்கில வரலாறராசிரியர்கள், இந்த இன வாதத்தை, அரசியல் சௌகர்யங்களுக்காக, இந்தியாவில் ‘ஆரிய’ ‘திராவிட’ இன வேறுபாட்டை உருவாக்கினார்கள்.”

  நீங்கள் இப்படி எழுதுவதைப் பார்த்தால் , எதோ பிரித்தானிய காலனீய அதிகாரிகள், அகாடமிக்குகள் போன்றவர்கள் ரூம் போட்டு எப்படி இந்தியர்களை பிரிக்கலாம் என யோசிச்சு சூழ்ச்சி செய்தவர்கள் போல் சித்தரிக்கின்றீர்கள்.

  உண்மையில் இப்படிப்பட்ட இனவாதம் 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவுஜீவு ஆதார கோட்பாடுகள். இனவாதம் மெதுவாக ஐரோப்பிய சிந்தனையில் 19ம் நூற்றாண்டில் ஊறியது. அது எப்படி ஊறியது என்பது பெரிய கதை. அது ஒரு சிலரின் “சூழ்ச்சியால்”ஏற்ப்பட்டதல்ல. அப்படிப்பட்ட இனவாதம் ஐரொப்பியர்களையே 20ம் நூற்றாண்டில் சீறழித்தது.

  20 நூற்றாண்டு முதல் பகுதிலியிலேயே மொழியியல் அளவில் பெரிய மாற்ற்ங்கள் ஏற்ப்பட்டு, இனவாதத்தின் அடிப்படை தகர்ந்தது. ஆனால் வேடிக்கை என்ன என்றால் , இந்திய அரசியல் இயக்கங்கள் 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய குளறுபடிகள் மேல் தோன்றின.

  ஆங்கில காலனீயர்கள், சரித்திராசிரியர்கள் மீது அறிவுக் குழப்பம் என குற்றம் சாட்டலாம், ரூம் போட்டு சூழ்ச்சி என்பது சரியில்லை.

  திராவிட இயக்கம், பாவாணர் மொழிக்கருத்துகள் போன்றவை அந்த 19ம் நூற்றாண்டு கழிசடைகள் மீது கட்டப்பட்டவை.

  வன்பாக்கம் விஜயராகவன்

 • “திராவிடம்’ என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்லா..?” என கேட்கிறீர்கள். விடை ஆமாம்.

  இந்திய சமூக மரபுகள்படி, இந்திய பிராமணர்கள் பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என இரு பிரிவுகளாக உள்ளனர். பஞ்ச திராவிடர் என்பது தென்னிந்திய பிராமணர்கள், மஹாராஷ்ட்ர, குஜராத்தி பிராமணர்களையும் கொள்ளும். பல பஞ்ச திராவிட பிராமணர்கள் திராவிட என்றும் பெயர் கொண்டுள்ளனர் ( உதாரனம் திராவிட சாஸ்திரி, ராஹுல் த்ராவிட்) .

  இப்பிரிவு பொதுவாக பிரதேசத்தை சார்ந்து இருந்தாலும், அதன் அடிப்படை பிரதேசம் அல்ல, வைதீக முறைகளை சாரும். 19 ம் நூற்றாண்டின் முதல் பாகம் வரை இந்த பிரிவு இந்தியர்களிடையேயும், ஐரோபீய பார்வயாளர்களிடையும் வலுவாக உணரப் பட்டிருந்தது. 19 ம் நூற்றாண்டின் முதலில் கூட வட இந்திய மொழிகளை கௌட மொழிகள் என்றுதான் ஐரோப்பியர் பார்த்திருந்தனர். அப்போது திராவிட என்பதன் எதிர்ப்பதம் கௌட.

  பிறகு ஐரோப்பிய மொழியியலாலர் தென்னிந்திய மொழிகளை ‘திராவிட’மொழிகள் என அழைத்தனர். அது எப்படி உருக் கொண்டது என்பது நமக்கு தெரியும்.

  விஜயராகவன்

  • பஞ்சம திராவிடர், பஞ்சம கௌடர் என்பவை அனுஷ்டங்கள் அடிப்படையாக வந்த பிரிவுகள். இனம் பற்றியவை அல்ல என்று நினைக்கின்றேன். இனம் என்பது புறத்தோற்றத்தை அடிப்படையாகக்க் க்ண்ட பிரிவுகள். ஆரியர்கள் வெண்மை நிறத்தவராகவும், நீண்ட நாசியை உடையர்களாகவும், உயரமானவர்களும் சித்த்டிரிக்கப்பட்டுள்ளனர்.திராவிடர்கள் கறுப்பு நிறத்தினராகவும், சப்பை மூக்கை உடையவர்களாகவும், குள்ளமானவர்களாகவும் வரூணிக்கப் பட்கின்றார்கள். இதுதான் காலனிய ஆட்சி வரலாற்றுச் சித்திரங்கள். ஆல்ஃப்ரெட் ரோஸன்பர்க் என்ற நாஸி கோட்பாளன், மெடிட்டரேனியன், ஸ்லாவ் மக்களைக் கூட அவன் சிந்த்தாந்தத்தின்படிஆரியர்களாக ஏற்றுக் கொள்ளவில்லைகொள்ளவில்லை.ஹிட்லரின் கொள்கையும் அதுதான். நம் வேதங்களிலோ அல்லது புராணங்களில அல்லது பண்டைய தமிழ் நூல்களிளோ
   ஆரியம், திராவிடம் என்ற பாகுபாடு இனம் பற்றி வந்தது என்பதற்கு ஒரு சான்று கூட கிடையாது. தேவர்கள் ஆரியர்களென்றும், தஸ்யூக்கள் திராவிடர்கள் என்றும் பின்னால் உருவாகிய சரித்திர விஷமங்கள்.

   • நீங்கள் இனம் என்பதை “இனம் என்பது புறத்தோற்றத்தை அடிப்படையாகக்க் க்ண்ட பிரிவுகள்” என வரையறுப்பது ஒரு வகையான டெஃபனிஷன். நான் அந்த அளவுகோலில் எழுதவில்லை.

    நான் பொதுவாக இனம் என்பதை எதோ ஒரு அடைப்படையில் தன்னை ஒன்றாக கருதும் – தன்னை தானே கருதும் – மனிதக் கூட்டம் எனத்தான் பர்க்கிறேன்

    இனம் is a self-defined human subset.

    Even “Race”is defined in the dictionary as
    –noun
    1. a group of persons related by common descent or heredity.
    2. a population so related.

    It is matter of semnatics

    விஜயராகவன்

   • Gokulprasad says:

    It is pathetic to see people still believing in arya and dravidian concepts popularised by E.V.Ramasamy desperately. Those thoughts have been sown deeply into the young minds who seek pleasure in criticising the so-called another race.
    This hatred feeling prevail even in my Engineering college. While arguing with those students, I obviously found that they deliver what they heard. They are least bothered about the fact.

 • ஹிட்லரின் கொள்கையில் இன்னொரு சிக்கல்.

  ஹிட்லர் நாஃஜி கட்சியின் சின்னமாக “வளைந்த சிலுவை” (Hakenkreuz) என்ற சின்னத்தை தேர்ந்தெடுத்தார். அதை மொழி பெயர்த்தவர் “ஸ்வஸ்திகா”என பெயர் கொடுத்தனர், அதிலிருந்து ஜர்னலிஸ்டுகளும், சரித்திராசிரியர்களும், ஹிட்லர் ஆரிய சின்னமான ஸ்வஸ்திகாவை தேர்ந்தெடுத்தார் என சொல்ல ஆரம்பித்தன.

  இப்போது மேலை நாடுகளில் ஸ்வஸ்திகா என்றாலே, நாஃஜி சம்பந்தமாக பார்க்கப் படுகின்றது. ஆனால் அதன் முதல் நாஃஜி பெயர் Hakenkruez

  விஜயராகவன்

 • “‘திராவிடம்'” என்ற சொல் பண்டைய தமிழ் “ஆரியம்” என்பதின் எதிரொலி – வார்த்தை அமைப்பில். ஆனால் அம் விகுதி குழப்பத்தை கொடுக்கின்றதே தவிர, தெளிவை அல்ல.

  மொழியியலில் – திராவிட மொழிகள், திராவிட மொழிக் குடும்பம்
  திராவிட – தமிழ் வைணவ பரிபாஷையில் தமிழுக்கு இன்னொரு பெயர்
  திராவிடன்/திராவிடர் – திராவிட இனம் என்பதை சார்ந்தவன் ( அப்படி இனம் இருக்கா இல்லையா என்பது வேறு விஷயம்)
  திராவிட நாடு – அப்படி ஒரு நாடு இருந்தால்

  ‘திராவிட’ பொதுவாக நாடு, இனம், மொழிக்குடும்பம் இவற்றிற்க்கு குணச்சொல்லாக வருவது .

  இந்திய தேசிய கீதத்தில் ‘திராவிட’ என்பது ஒரு பிராந்தியத்தின் பெயர்ச்சொல்.

  திராவிடம் ??? அமைப்பு சரியாக இல்லை. அது நிச்சயமாக ஒரு இனத்தின் பெயர்ச்சொல் இல்லை.
  அம் விகுதி போட்டு தமிழில் மார்க்கங்களையும் கருத்தாக்கங்களை (religions and ideologies) குறிக்கலாம் – சைவம், வைணவம், கிருஸ்துவம், சாக்தம், வள்ளுவம்.
  அந்த வகையில் திராவிடம் என்பது ஒரு அரசியல் கருத்தாக்கத்தை (political ideology) குறிக்கிறது, இனத்தையோ, மொழியையோ அல்ல.

  விஜயராகவன்

 • சீனப் போராளி says:

  ஆரிய திராவிட இன வாதத்தை திகவினரைவிட பிராமணர்களே அதிகம் நம்புகிறார்கள். பிறப்பால் உயர்ந்தவன் என்று சொன்னால், வேண்டாம் என்றா சொல்வார்கள்?

  ஆரிய-திராவிடம் என்பது அகடமிக் டெர்மினாலஜி. நடைமுறையில் இந்த இனவாதத்தைக் குறிக்கும் பிரயோகம்: பிராமணாள் – அப்பிராமணாள்.

 • சீனப் போராளி says:

  இந்திரா பார்த்தசாரதி அவர்களே,

  ஆரிய திராவிட இனவாதம் தவறு என்று சொல்கிறீர்களே. நீங்கள் இந்துத்துவவாதியா ? 😉

 • Sathish says:

  Sir, Mostly upon looking at any Brahmins we can easily identify them by their complexion and face. This is not just because of their spoken languages and practices. We can easily differenciate from Chinese to Japanese by looking at them. I want to know more about this.

 • kapilavastu says:

  We are all discussing with articles from history that were written in a biased manner depending on who is writing those articles. These discussions looks very very old. Now science especially genetic based analysis has advanced so much . I think intellectuals especially people like Indira parthasarathy should read those analysis rather and explain those conclusions to the masses than basing their arguments on crapy historical details which can be bent in any direction. If Indira sir quotes one article another guy can quote a totally contradicting article from history. Even here we can see one guy called vijaya raghavan bends definition of even commonly understood terms to suit his convenience and even he contradicts what ever opinion he gives in one reply with another reply.

  We need to move to the next moreover to an authentic plane in discussion. Analysis of the Y chromosomes which are passed on males through their ancestors provide a definite clue on this Aryan-Dravidian crap. The Y chosomal analysis has proved beyond doubt that there is no Aryan invasion. There were migrations some 40,0000 years ago.

  What is more surprising is the Haplogroup R1a the chromosomes which is present in many brahmins are present in tribes of Tamilnadu which clearly says that the brahmins are off shoot of some Adivasi tribe from TN.


  http://en.wikipedia.org/wiki/Haplogroup_R1a_(Y-DNA)#South_Asia

  “In South Asia R1a1a has often been observed with high frequency in a number of demographic groups. The main two subclades of R1a1a are R1a1a* and R1a1a7. R1a1a7 is positive for M458 an SNP that separate it from the rest of R1a1a. It is significant because M458 is a European marker and the epicenter is Poland. R1a1a influence into India was not from Europe since the M458 marker is rare in India.[8][10]

  In India, high percentage of this haplogroup is observed in West Bengal Brahmins (72%) [10] to the east, Konkanastha Brahmins (48%) [10] to the west, Khatris (67%)[2] in north and Iyenger Brahmins (31%) [10] of south. It has also been found in several South Indian Dravidian-speaking Adivasis including the Chenchu (26%) and the Valmikis of Andhra Pradesh and the Kallar of Tamil Nadu suggesting that M17 is widespread in Tribal Southern Indians.[11]

  Besides these, studies show high percentages in regionally diverse groups such as Manipuris (50%)[2] to the extreme North East and in Punjab (47%)[11] to the extreme North West.

  In Pakistan it is found at 71% among the Mohanna of Sindh Province to the south and 46% among the Baltis of Gilgit-Baltistan to the north.[2] While 13% of Sinhalese of Sri Lanka were found to be R1a1a (R-M17) positive.[11]

  Hindus of Terai region of Nepal show it at 69%.[12]

  It also has been established that R1N1 chromosmal had migrated from India to central Asia and other eastern european countries.

  South Asian origin hypothesisAn increasing number of studies have found South Asia to have the highest level of diversity of Y-STR haplotype variation within R1a1a. On this basis, while several studies have concluded that the data is consistent with South Asia as the likely original point of dispersal (for example, Kivisild et al. (2003), Mirabal et al. (2009) and Underhill et al. (2009)) a few have actively argued for this scenario (for example Sengupta et al. (2005), Sahoo et al. (2006), Sharma et al. (2009). A survey study as of December 2009, including a collation of retested Y-DNA from previous studies, makes a South Asian R1a1a origin the strongest proposal amongst the various possibilities.[2]

 • kapilavastu says:

  Couple of months ago openmagazine did an analysis based on this science and they have written beautiful article on it phooh poohing the aryan-dravidan myth. I think our tamil writers should base their articles on scientific DNA analysis. I hope writers like Indiraji take up the scientific analysis on this

 • Eesan says:

  What is Mr. Vijayaraghavan trying to say? He is confused and is confusing everybody. Can anybody prove that Aryans are Brahmins? If Aryans are Brahmins how come they originated (or followed) in Germany? Did they follow the the customs of the South Indian Brahmins? (now Aryanism is confined to South India)

 • Prakash says:

  It is a fact and you can see that most of the Brahmins are fair skinned and look differently compared to non-brahmins.They may not be Aryans but definitely they are a different stock

 • s.chandhra mouli says:

  what is wrong even the so called

 • s.chandhra mouli says:

  WHAT IS WRONG EVEN IF THE SO CALLED ARYANS ENTERED INDIA FROM OR THROUGH CENTRAL ASIA WHICH MIGHT HAVE HAPPENED MILLIONS OF YEARS BACK? WHEN WE CAN ACCEPT THE MUSLIMS(BY HEREDITARY -NOT BY CONVERSION) WHO INVADED BEFORE FEW CENTURIES SPREAD ALLOVER THE COUNTRY COULD BE ACCEPTED AS INDIANS-MANY POLITICIANS AND BUSINESS MAGNETS IN TAMIL NADU SPEAKING TELUGU IN PRIVATE AND ADMIRE TAMIL IN PUBLIC SHALL BE REGARDED AS TAMILIANS?.

  PEOPLE LIKE “SEENA PORALI” BLINDLY ACCEPT THE THEORY PURPOSEFULLY CREATED BY THE BRITISH.WHEN IT COMES FOR A DIFFERENCE OF OPINION FROM WRITERS LIKE INDIRA THEY DONT PUT FORTH COUNTER ARGUMENT-BUT OFFER THREATS LIKE ASKING “ARE U A HINDU FUNDAMENTALIST OR TERRORIST’-WHICH IS THEIR” BRAHMMASTHRA’, THEY ARE NOT EVEN WILLING TO TAKE GENETIC ANALYSIS INTO ACCOUNT: FEARING THE RESULTS WOULD TEAR OFF THEIR CENTURY LONG BELIEFS AND DISGUISE. DEAR MR.SEENA PORALI ,YOUR WEAPONS ARE 40 YEARS OLD AND OUT OF SERVICE. BY THE WAY IS THERE ANY “PORALI” EXIST IN CHINA OR U ARE A MIGRANT FROM CHINA ?. BY.S.CHANDHRA MOULI.

 • S.CHANDHRA MOULI says:

  THE UNCLEAR IMAGE OF ARYANS(IF EVER A RACE EXIST) EITHER THEY ORIGINATED IN INDIA OR INVADED INDIA, IS BECAUSE THAT OUR POETS-WHO SHOULD HAVE PLAYED THE ROLE OF HISTORIANS- SPENT THEIR SKILLS EITHER IN PRAISING GODS OR THE KINGS.

  • S.CHANDHRA MOULI says:

   I DO NOT UNDERSTAND WHAT SHOULD BE MODIFIED OR REQUIRED TO POST MY COMMENTS.I AM NEW TO THE WHOLE THING.KINDLY INFORM. SHOULD I POSSES A WEB SITE TO TAKE PART IN THIS COLUMN?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ஹிட்லர் பிராமணனா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: