‘நெருநல் உளன் இன்றில்லை’

June 28, 2011 § 7 Comments


தமிழ் எம்.ஏ (தமிழ்) முதல் வகுப்பில் தேறியிருந்தாலும் ,ஆறு மாதங்கள் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. தப்பான ஜாதியில் பிறந்துவிட்டு தமிழ் படித்ததினால்தான் என்று என் உறவினர்கள் சொன்னார்கள்.

பம்பாய் போய்விட்டேன். என் அண்ணன் அங்கு’பாம்பே கிரானிகிள்’ என்ற பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். ‘ஃபிரீ ப்ரெஸ் ஜ்ர்னல்’ என்ற பத்திரிகையில் என்னைச் சேர்த்து விட முயன்றார்.

அப்பத்திரிகையின் ஆசிரியர் சதானந்த். நேர்முகத் தேர்வுக்கு என்னை அழைத்திருந்தார். சதானந்த் வயதானவர். விசித்திரமானவர். அடுத்த நிமிஷம் என்ன செய்வாரென்று யாருக்கும் தெரியாது. தேசபக்தி மிகுந்தவர். ஆங்கில ஆட்சியின் போது அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்று கூறுவார்கள். தமிழர்.

நான் போனவுடன் என்னையே ஐந்து நிமிஷங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு 22 வயது. அவர் பார்த்த பார்வை என்னை பயத்தில் ஆழ்த்தியது. உடம்பு நடுங்கியது.

‘நீ எம்.ஏ தமிழா?’ என்றார்.

‘ஆமாம்’.

‘கம்ப ராமாயணம் படிதிருக்கிறாயா?’

‘படித்திருக்கிறேன்.’

‘ராமனும் சீதையும் எத்தனை வருஷங்கள் காட்டில் இருந்தார்கள்?’

‘பதினாலு வருஷங்கள்’

‘பதினாலு வருஷங்களுக்குப் பிறகா ராவணன் அவளை இலங்கைக்குத் தூக்கிக் கொண்டு போனான்?’

என் தவற்றை உணர்ந்தேன்.

‘கம்பன் சீதை எத்தனை ஆண்டுகள் அசோக வனத்தில் இருந்தாள் என்று சொல்ல வில்லை.’ என்றேன்.

‘ஆனால் பதினாலு வருஷங்கள் அவள் காட்டில் இருந்திருக்க முடியாது.’

‘நான் சொன்னது தப்புதான்..’

‘எத்தனை வருஷங்கள் ராம-ராவண யுத்தம் நடந்தது?’

‘பதினெட்டு மாதங்கள் என்கிறார்கள்’

‘மஹாபாரதப் போர்?’

‘பதினெட்டு நாட்கள்’

‘ இலியத்தில் கூறப்படும் ட்ராய் யுத்தம்?’

‘பதினெட்டு ஆண்டுகள். ‘

‘பதினெட்டு ஏன் அவ்வளவு விசேஷமான எண்?’

‘தெரியவில்லை.’

அவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

நான் கேட்டேன்:’ பதினெட்டு என் விசேஷம்’?’

‘சரி, அடுத்த வாரம் பதினெட்டாம் தேதி திங்கள் கிழமை காலை  பத்து மணிக்கு வேலையில் சேர்.’ என்றார் சதானந்த்

நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. மறுபடியும் கேட்க தயக்கமாக இருந்தது. அடுத்த வாரம் கேட்டுக் கொள்ளலாமென்று இருந்து விட்டேன்.

கேட்க வாய்ப்புக் கிடைக்க வில்லை.

திருச்சி  தேசியக் கல்லூரியில் வந்து  வேலையில் சேரும்படிஎன் அப்பா கும்பகோனத்திலிருந்து அடித்த தந்தி அன்று மாலை வந்தது. பத்திரிகையா, கல்லூரியா என்ற ‘எக்ஸிஸ்டென்ஷையலிஸ’ மனப் போராட்டம்.

என் அண்ணன் சொன்னார்:’  நீ அடுத்த வாரம் திங்கள்கிழமை போனாயானால், ‘நீ யார்?’ என்று சதானந்த் கேட்கமாட்டாரென்று  என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. பேசாமல் திருச்சிக்குப் போ.”

சதானந்திடம் சொல்லாமல் போக எனக்கு விருப்பமில்லை. திங்கள் காலை கூப்பிட்டுச் சொல்லலாமென்றிருந்தேன்.

அத்ற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.

திங்கட்கிழமை காலை அவர் காலமாகிவிட்டார்.

 

 

Advertisements

§ 7 Responses to ‘நெருநல் உளன் இன்றில்லை’

 • virutcham says:

  வாழ்க்கையின் நிச்சயமின்மை இப்படி பட்டவர்த்தனமாக வெளிப்படுவது அதிர்ச்சியான அனுபவம்

 • Kangal-Irandaal says:

  நீங்கள் எழுதியவற்றைப் படித்த பிறகு தான் தோன்றியது.. “அட ஆமாம். நெறைய “18 ” இருக்கு” என்று.

  நமது புராணங்கள் கூட 18 தானே. அஷ்டதச ரகசியங்கள் என்று சொல்லப் படுவதும் 18 தானே. ஒட்டு போடும் வயதும் 18 தானே

 • vasanth says:

  ய = 1 , ஜ = 8 , ஜய= 18 . ஜயம் எனும் கிருஷ்ணன் .
  ( Ref: ஸ்ரீ அண்ணா , ஸ்ரீ மகாபாரத சாரம் )

 • vasanth says:

  க = 1 , அ= 8 , அக = 18 , அகம் .

 • ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள். இந்த உலகத்தின் ஒரே பெருமை நேற்றிருந்தவன் இன்றில்லை என்பதுதானே. பகிர்விற்கு நன்றி.

 • srikala murali. says:

  a example in your life,for that lines… super…

 • Bhaskar says:

  Nice presentation. I never thought about that number 18. good one.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘நெருநல் உளன் இன்றில்லை’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: