முற்போக்கு

June 15, 2011 § 5 Comments


நான் கல்லூரியில் படிக்கும்போது என்னை ஒரு தீவீர முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தேன். அந்த அளவுக்கு என் பால்ய அக்கிராஹார வாழ்க்கை எரிச்சல் ஊட்டியிருந்தது. கோயிலை அண்டிப் பிழைத்த குடும்புங்கள். காலி பெருங்காய டப்பிவாசனையாக இருந்த ஜாதி ஜம்பம் மட்டும் அகலவில்லை.

என் அக்கிரஹார எதிர்ப்பு உணர்ச்சியின் காரணமாக, எனக்கு பிராம்மண நண்பர்கள் அதிகம் இல்லை. ஷண்முகவடிவேலு என்ற நண்பன்ஒருவன் இருந்தான்.. நல்ல வளர்த்தி. ஆறடி உயரம். தேவர் வகுப்பைச் சார்ந்தவரன். ‘வேங்கை மார்பன்’ என்ற புனை பெயரில் வரலாற்று நவீனங்களை மரபுக் கவிதை வடிவில் எழுதுவான்..அவன்அரசியல் பார்வை விசித்திரமானது. பெரியாருடைய ஜாதி மறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தான்.. ஆனால் நாத்திகன் அல்லன்.. அசாத்திய சிவ பக்தி. திருநீறு இல்லாமல் அவனைப் பார்க்க முடியாது. முஸ்லீம்களையும், கிறிஸ்துவர்களையும் கண்டால் அவனுக்கு அறவே பிடிக்காது.

எனக்கு முகம்மது ரஃபி என்ற இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பா கும்பகோண்த்தில் பிரபல காங்கிரஸ்காரர். குடந்தை நகர காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்தாரென்று நினைக்கிறேன். ரஃபிக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு. ஷண்முகவடிவேலுக்கு நான் ரஃபியிடம் நட்புப் பாராட்டுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதை அவன் அடிக்கடிச் சுட்டிக் காட்டவும் தயங்குவதில்லை.

ஒரு நாள் ஷண்முகவடிவேலு என் வீட்டில் என்னைப் பார்க்க வந்தபோது, ரஃபி என்னைப் பார்க்க வந்தான்.

‘நீ நாளைக்கு என் வீட்டுக்குச் சாப்பிட வரயா< வண்டியை அனுப்பறேன்..’ என்றான் ரஃபி. அவன் வீடு பாலக் கரையில் இருந்தது.

‘என்ன் விசேஷம்?’ என்றேன் நான்.

‘நீ  ‘நான்வெஜிடேரியன்’ சாப்பிடுவே இல்லே? நீ முற்போக்குவாதி, பூணுல் கிடையாது, சாப்பிடாமியா இருப்பே?’ ஃபர்ஸ்ட்கிளாஸ் ஐடெம்ஸ்’. மதியம் பன்னிரெண்டு மணிக்கு வண்டி வரும்..சரியா?’ என்றான் ரஃபி.

ஷண்முகவடிவேலு கூட இருப்பதைப் பார்த்து, ‘ நீங்களும் வாங்களேன்’ என்றான் ரஃபி.

‘நான் பழுத்த சைவன். மாட்டையும் ஆட்டையும் அடித்துத் தின்ன மாட்டேன்,’ என்றானவடிவேலு குரலில் ஒரு வகையான எரிச்சலுடன்.

ரஃபி இதை ரஸிக்கவில்லை என்பது அவன் முகத்தினின்றும் தெரிந்தது.

எனக்கும் ஷண்முகவடிவேலு  அப்படிப் பேசியது பிடிக்கவில்லை..

‘சரி, வரேன்’. என்றேன் நான்.

ரஃபி போனபிறகு ஷண்முகவடிவேலு என்னைக் கேட்டான்:’ நீ ‘நான்வெஜ்’ சாப்பிடுவியா?’

‘ஒரு நாளைக்குச் சாப்பிட்டுப் பாக்கிறது, என்ன தப்பு? ‘ என்றேன் நான்.

‘நீ ஒரு கோழை. உனக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காதுன்னு சொல்ல உனக்குத் தைர்யமில்லே.. ஒரு முஸ்லீம், அவன் கூப்பிடறான், அவன் வீட்டுக்குப் போய் சாப்பிட்றதினாலே உன் முற்போக்கு முகத்தைக் காட்டணும், அதுக்காகத்தானே போறே? இதுவா முற்பொக்குத் தனம்?’ என்றான் ஷண்முகவடிவேலு.

இவ்வாறு சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

அடுத்த நாள் ரஃபி வீட்டுக்கு நான் சென்றேன்.

பெரிய வீடு. செல்வச் செழிப்பு   ‘ஹாலி’லிருந்த ஒவ்வொரு பொருளிலும் தெரிந்தது.

கிரமஃபோனில் எம்.எஸ். பாடிக் கொண்டிருந்தார்.

சாப்பிட உட்கார்ந்தோம்.

உருண்டையாக, போண்டா மாதிரியாக ஏதோ ஒன்று வந்தது.

நான் வாயில் வைத்தேன். விழுங்க முடியவில்லை. என்னுடைய ப்தினெட்டு ஆண்டு மரபு, அதை ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்தது.

என்னுடைய சங்கடத்தை ரஃபி பார்த்துவிட்டான்.

‘நீ ‘நான்வெஜ்’ சாப்பிட்டதில்லையா? ‘ என்றான் அவன்.

‘இல்லே. ஐ வில் ட்ரை.’

‘வேண்டாம். அப்படியே வச்சிடு. நான் என் சின்னம்மா வீட்டிலேந்து சாப்பாடு கொண்டாரச் சொல்றேன்..’

”சின்னம்மாவா?’

‘ஆமாம், அவங்க என் வாப்பாவோட இளைய சம்ஸாரம். அவங்க அய்யங்கார். அவங்க ‘கிச்ச்ன்’ தனி… என்னோட வாப்பாவும் உன் மாதிரி முற்போக்குச் சிந்தனையுடையவர்தான்.. சின்னம்மாவோட பிராம்மண ஆசாரத்துக்குக் குறுக்கே நிக்க மாட்டார் .’ என்றான் ரஃபி.

Advertisements

§ 5 Responses to முற்போக்கு

 • Meenakshisundaram Somaya says:

  மதிப்பிற்குரிய இந்திரா பார்த்தசாரதி அவர்களே உங்கள் மனபோக்கு/ எழுத்துவலு எங்களை அதிர வைக்கிறது
  தமிழ் கூறும் நல் உலகம் சார்பாக எங்கள் வணக்கங்கள் உங்கள் வித்தியாசமான கருத்து சேவை என்று என்றும் தொடர வேணும் …

 • Meenakshisundaram Somaya says:

  மதிப்பிற்குரிய இந்திரா பார்த்தசாரதி அவர்களே உங்கள் மனபோக்கு /எழுத்துவலு எங்களை அதிர வைக்கிறது
  தமிழ் கூறும் நல்ல உலகம் சார்பாக எங்கள் வணக்கங்கள் உங்கள் வித்தியாசமான கருத்து சேவை என்று என்றும் தொடர வேணும்

 • சும்மான் says:

  சாதியை மறுக்கிற, அதே சமயம் பக்தி உள்ள, அதே சமயம் இஸ்லாமிய, கிறுத்துவ மதங்களை வெறுக்கிற ஷண்முகவடிவேலுக்கு இந்தக் காலத்தில் ஒரு பெயர் இருக்கிறது. இந்துத்துவவாதி !!

  சின்னமாவோட ஆச்சாரத்துக்குக் குறுக்கே நிற்காமல் இருப்பது முற்போக்கு இல்லை. சின்னம்மாவிற்குப் பிறந்த பிள்ளைகளின்மேல் தன் ஆச்சாரத்தைத் திணிக்காமல் இருப்பதுதான் முற்போக்காக இருக்கும்.

 • Kangal-Irandaal says:

  ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது எரிச்சலூட்டுகிறது என்பதற்காகவோ அது தவறேன்றாகிவிடுமா என்ன? அது என்னமோ தெரியவில்லை. ஒரு இந்துவுக்கு, குறிப்பாக பிராமணனுக்கு வருகிற தன் மத சம்பந்தப்பட்ட சம்ப்ரதாயங்கள்
  மீதான எரிச்சல்கள், ஒரு முசல்மானுக்கோ, கிருச்துவனுக்கோ வருவதில்லை. And i really appreciate christians and muslims for this.

  இந்து மதம், மற்ற மதங்களைப் போல் எந்த ஒரு செயலையும் எப்படி செய்யவேண்டும் என்று சொல்லாமல், “மகனே இதை இப்படி செய்தால், இது கிட்டும், இது கிட்டாது. நீயே முடிவு செய்து கொள், எப்படி செய்ய வேண்டும் என்று” சொல்வதால், may be hindus take their religion too leniently.

  இப்பொழுதெல்லாம் ஒருவர் ஒரு செயலில் தெரிந்தே தவறு செய்தாலோ அல்லது இயற்கைக்கு முரணாக செய்தாலோ, அதை “முற்போக்கு சிந்தனை” என்று சொல்லிக் கொள்வது ஒரு fashion ஆகிவிட்டது. அதற்காக என்ன கையில் வணக்கம் சொல்வதற்கு பதில் காலால் வணக்கம் சொன்னால் நன்றாகவா இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading முற்போக்கு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: