‘வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’

June 3, 2011 § 5 Comments


பா.ராகவன் கல்விப் பாடத்திட்டங்களைப் பற்றி எழுதியிருந்த மூன்று பதிவுகளும் , கிணற்றை எல்லை நிலமாகக் கொண்ட இன்றையக் கல்விப் பாடத்திட்டத்தால் தன் பள்ளிக்கூட நாட்களில்  சிறை செய்யப்படாத ஒரு திறந்த மனம் எப்படிச் சிந்த்திக்கின்றது என்பதற்கு  உதாரணம். ஒவ்வொரு மாணவரின் சுயமான முழு ஆற்றலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்காத நம் கல்விப் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

கல்வியில் ‘எவை’ ‘எவை’  என்ற கேள்வியைக் காட்டிலும், ‘ஏன்’  ‘எப்படி’ என்ற கேள்விகள்தாம் அடிநாதமாக இருக்க வேண்டும். நசிகேதஸ் போன்று ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்டுத் தொளைக்கும் மாணவர்களைத் திருப்தி படுத்தக் கூடியதாக இருந்தால்தான் அது சிறந்த  கல்விப் பாடததிட்டம்.

இன்று நம் நாட்டில், பள்ளிகூடங்களோ சரி, பல்கலைக்கழகங்களோ சரி, நுகர் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மாதிரி இயங்குகின்றனவேயன்றி,  விஞ்ஞானப் பார்வையும் கறபனைத் திறனுமுடைய கலைக் கூடங்களாக இல்லை. எனக்கு தில்லியில் ஏற்பட்ட ஓர் அநுபவம் நினைவுக்கு வருகிறது.

தில்லியில் ‘இண்டியா இண் டர்நேஷனல் சென் டர்’ என்ற ஓர் இடம் இருக்கிறது.  ஒரு காலத்தில் அறிவுஜீவிகள் கூடும் பிரத்யேக கிளப்பாக இருந்த அது இப்பொழுது வியாபாரிகளும் அரசியல் வாதிகளும் தொழில் பேரம் செய்யும் இடமாக மாறி விட்ட்து. நான் தில்லியில் வசித்த நாட்களிலேயே மாறத் தொடங்கி விட்டது.

போன நூற்றாண்டு எழுபதுகளில் நானும் ‘கணையாழி’ ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கனும் அங்குக் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது  எனக்குத் தெரிந்த சர்தார் ஒருவர், மர வியாபாரி, அங்கு ‘ஹல்லோ’ என்று சொல்லிக் கொண்டே வந்து எங்கள் எதிரே உட்கார்ந்தார்.

‘ஜெகத்சிங் பிஸினஸ்மன், கஸ்துரிரங்கன் ‘நியூயார்க் டைம்ஸ்’ என்றேன் நான்.

‘ வாட் வாட்?’ என்றார் ஜெகத்சிங் கஸ்தூரியைப் பார்த்து.

‘நியூயார்க் டைம்ஸ்’ என்றார் கஸ்துரி.

‘ வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’ என்றார் சர்தார்.

கஸ்தூரி பதில் சொல்லத் தயங்க வில்லை. ‘பேப்பர்’ என்றார் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் தோற்றுவிக்காமல்.(with a dead pan face)

அந்த சர்தார் இத்தனைக்கும் தில்லியில் மிக உயர்ந்த பள்ளிக்கூடத்தில் (Modern School) படித்தவர். பள்ளிப் படிப்பு அவர் அறிவின் பரப்பை எந்த விதத்திலும் விசாலப்படுத்தியாகத் தெரியவில்லை. தனியார் பள்ளிக் கல்வித் திட்டத்தும் அரசு பள்ளிக்கல்வித் திட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தனியார் பள்ளிகளில் படிக்கின்றவர்கள் ஆங்கிலத்தை நுனிநாக்கினால் பேச முடியும், அவ்வளவுதான். ஆனால் பேசுகின்ற ஆங்கில வார்த்தைகளுக்கு Spelling தெரியுமா என்று நிச்சியம் சொல்ல முடியது.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கே.என்.ராஜ் என்ற பொருளாதர மேதை துணை வேந்தராக இருந்த போது,  கல்லூரிப் படிப்புக்காகச் சேரும் தனியார் பள்ளி மாணவர்கள் நுழைமுகமாக ஆங்கிலத்தில் ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். இது கல்வி வட்டாரங்களில் ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் அப்பொழுது சொன்னார்: ‘It is true these public school boys and girls speak English well, but do they know the spelling of the words they use? ‘

Advertisements

§ 5 Responses to ‘வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’

 • BaalHanuman says:

  அன்புள்ள இ.பா,

  வழக்கம் போல் சுருக்கமாக அதே சமயம் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  >>‘It is true these public school boys and girls speak English well, but do they know the spelling of the words they use? ‘

  இங்கு ‘private school’ என்று இருந்திருக்க வேண்டுமோ?

  • அமெரிகாவில்தான் public school என்றால் அரசுப் பள்ளி என்றும் private school என்றால் தனியார் பள்ளி என்றும் கூறுவார்கள்.தில்லியிலும் சரி, மெற்றெங்கிலும் இந்தியாவில் தனியார் பள்ளிகளை ‘public school’ என்று அழைப்பது மரபு. ‘public school accent’ என்ற சொல்லாட்சியும் உண்டு.

 • virutcham says:

  பதினோராம் வகுப்பில் சேரும் மாணவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது சொல்லுவதை கவனித்து அப்படியே படித்து மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள் இப்போது தனியார் பள்ளிகளில். காரணம் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் போது பாடங்களை முடிக்க அதிக நேரம் எடுக்கும். குறைந்த கால அளவில் பாடங்களை முடித்து விட்டு மீதி நேரம் பூரா உருப்போட்டதை தேர்வாக எழுதி மதிப்பெண் எடுத்துக் காண்பிக்க வேண்டும்.

 • ரவி says:

  எழுபதுகளில் தில்லியில் நியுயார்க் டைம்ஸ் படிப்பவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள், எத்தனை பிரதி விற்றிருக்கும்.மாடர்ன் ஸ்கூலில் படித்து தில்லி பல்கலைகழக கலலூரி எதிலேனும் படித்திருந்தாலும் கூட அவர் நியுயார்க் டைம்ஸ் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு.எனவே அவரை குறை கூற முடியாது.

  அப்போது நீங்கள் அறிந்த இலக்கியவாதிகள் எத்தனை பேருக்கு நியுயார்க் டைம்ஸ் பற்றித் தெரியும்,எத்தனை பேர் அதை கண்ணால் பார்த்திருப்பர்கள். 2011ல் எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் EPW, Seminar படிக்கிறார்கள் அல்லது அவர்களில் எத்தனை பேருக்கு Nature என்ற வார இதழ் பற்றித் தெரியும்.அவர்களில் எத்தனை பேர் NYTIMES இணையத்தில் இருப்பதை அறிந்து படிக்கிறார்கள்,
  எத்தனை பேருக்கு NYRB, NEWYORKER, HARPERS, போன்றவை பற்றித் தெரியும்.அவ்வளவு ஏன் தில்லியிலிருந்து வரும் THE LITTLE MAGAZINE ஐ எத்தனை தமிழ் ரைட்டர்கள் படிக்கிறார்கள்.

 • ரவி says:

  ‘கல்வியில் ‘எவை’ ‘எவை’ என்ற கேள்வியைக் காட்டிலும், ‘ஏன்’ ‘எப்படி’ என்ற கேள்விகள்தாம் அடிநாதமாக இருக்க வேண்டும். நசிகேதஸ் போன்று ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்டுத் தொளைக்கும் மாணவர்களைத் திருப்தி படுத்தக் கூடியதாக இருந்தால்தான் அது சிறந்த கல்விப் பாடததிட்டம்’
  It will be a case of curiosity killing the cat:). Questioning for its own sake is not a sign of wisdom.Unless you get the fundamentals right you wont be able to raise right questions or you will end up raising why and why nots without any understanding. Education is about learning to know and learning to ask questions. If you dont know how to learn you will end up asking just questions.Nachiketas cannot be the right example because his situation was different. Why is that you folks dont understand this simple fact.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: