இன்றும் என்றும் ஷேக்ஸ்பியர்

June 2, 2011 § 2 Comments


ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அதிகம் பேசப்படாத, மேடையேறியிராத நாடகம் ‘ ட்ராயிலஸ் அண் ட் க்ரெஸ்ஸிடா'( Troilus and Cressida).அண்மைக் காலத்திய இலக்கிய, நாடக விமர்சகர்களின் கருத்தின்படி, இது நவீன கால மதிப்பீடுகளுக்கு இசைந்த மிக உன்னதமான நாடகம். சில விமர்சகர்கள் இதை ‘ஹாம்லெட்’டுக்கு நிகரானது என்கிறார்கள்.

என் அபிப்பிராயத்தின்படி, இந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றுதான் நினைக்கின்றேன். இந்த நாடகத்தைப் புரிந்து கொள்ள நம் மனத்தில் சுமையாகத் தொங்கும் கலாசார மூட்டைகளை வீசி எறிந்தாக வேண்டும்.

காளிதாஸன், பவபூதி, பாசா போன்ற ந்ம் நாடக ஆசிரியர்கள், மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் தம் ஆக்கங்களுக்குக் கருப் பொருள்களாகக் கொண்டது போல், ஷேக்ஸ்பியரும் ஹோமரின் ‘இலியட்’டில் நிகழும் சம்பவமொன்றை இந்நாடகத்தில் எடுத்து ஆள்கின்றார்.

‘இலியட்’ என்கிற காவியத்தில், ஹெலன் என்கிற மிக அழகானப் பெண்ணை (மெனெலஸ் என்ற கிரேக்கனுடைய மனைவியை)  ட்ராய் இளவரசன் பாரிஸ் கடத்திக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மனைவியாகவும் ஆக்கிக் கொண்டு விடுகிறான். மெனெலஸ்ஸின் அண்ணனாகிய அகமெம்னன் என்ற பிரதம கிரேக்க ராணுவத் தளபதி ஒரு மாபெரும் சைனயத்தை அழைத்துக் கொண்டு  ட்ராய் மீது போர் தொடுக்கிறான். அவன் சைன்யத்தில் யுலிஸிஸ், அச்சிலஸ், அஜாக்ஸ் போன்ற பிரசித்திப் பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ட்ராய் அரசன் ப்ரயாம்மின் மூத்த மகனாகிய ஹெக்டாரைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியான மாபெரும் வீரர்கள் யாரும் ட்ராய் ராணுவத்தில் இல்லை. ஏழு ஆண்டுகள் போர் நடக்கின்றது.

ட்ராயிலஸ்,  ப்ராயம் மன்னனின் கடைசி மகன். க்ரெஸ்ஸிடா ,கால்ச்சன் என்கிற ட்ரோயன் மத குரு மகள். அவன் ட்ராய் அழியப் போகிறது என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு, கிரேக்கர்களிடம் போய்விடுகின்றான்( இக்கால அரசியல்வாதி!) . ட்ராயிலஸும் கிரெஸ்ஸிடாவும்  ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதலை ஊக்கிவிப்பவன், கிரெஸ்ஸிடாவின் சிற்றப்பன் பாண்டரஸ். ட்ராய் ராணுவ தளபதி ஒருவனை கிரேக்கர்கள் ஒரு பிணைக் கைதியாக வைத்திருக்கிறார்கள்.பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு, க்ரெஸ்ஸிடா கிரேக்கர்களிடம் அனுப்பப்படுகின்றாள். ராணுவ த்ளபதி ட்ராய்க்க்குத் திரும்பி வருகிறான். இதுதான் மூலக் காவியத்தில் காணும் ஒரு சிறு சம்பவம்.

இரும்பைப் பொன்னாக்கும் ரஸ வித்தையில் ஷேக்ஸ்பியர் கைதேர்ந்தவர், நம் கம்பனைப்போல. ஷேக்ஸ்பியருக்கு உலகத்தில் புனிதமான விஷ்யங்கள் என்று எதுவும் கிடையாது. முதலில் ஏழு ஆண்டுகள் நடக்கும் இந்தப் பைத்தியக்காரப் போரைக் கிண்டல் செய்கிறார். இவருடைய பாத்திர வார்ப்பின்படி ஹெலன் இவ்வாறு போராடிட் திரும்ப்பெறுவதற்கான தகுதியில்லாத சாதாரணத்துக்கும் சாதரணமான வெறும் தளுக்குக்காரி.  அச்சிலஸ் என்றாலே, மேலைய நாட்டினரின் க்லாசார அடிமனத்தில்  ஒரு மாபெரும் வீரனின் தோற்றம் உருவாகும். நம் கர்ணனைப் போல். ஆனால் ஷேக்ஸ்பியரின் இந்நாடகத்தில் அவன் வெட்டி வார்த்தைகள் பேசும் ஒரு கோழையாக வருகிறான். அவன் ஹெக்டாரை நய வஞ்சகமாகக் கொல்கிறான். இந்நாடகத்தில் வரும் யாருக்குமே வாழ்க்கையின் உன்னத மதிப்பீடுக்ள் பற்றி நம்பிக்கை இல்லாவிட்டாலும்  பாசாங்குத்தனமான வார்த்தைகளில், தங்கள் உண்மைத் தோற்றம் வெளியில் தெரியாதபடி தங்களை மறைத்துக் கொள்கிறார்க்ள், யுலிஸிஸ் உள்பட. க்ரெஸ்ஸிடா இக்காலத்திய நவ நாகரிகப் பெண். அவளைத் தொடக்கத்திலிருந்தே ஒரு cynic ஆகக் காட்டுகிறார் ஷேக்ஸ்பியர். அவளுக்கு ட்ராய்லெஸ்ஸின் உடலுறவை விரும்புகிறாளேயன்றி, அவனுடைய காதல் பற்றிய ‘moonshine thoughts’ களில் நம்பிக்கை இல்லை. இந்நாடகத்தில் வரும் கோமாளி தெர்ஸைட்ஸ் என்பன் தான் நாடக முக்கிய கதா பாத்திரங்கள் அனவரையும் தோலுரித்து ந்மக்குப் புலப்படுத்துகிறான்!

‘ Any war good or bad is an expense of spirit in a waste of shame’ இதுதான் ஷேக்ஸ்பியரின் அடிப்படைக் கருத்து.

Advertisements

§ 2 Responses to இன்றும் என்றும் ஷேக்ஸ்பியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading இன்றும் என்றும் ஷேக்ஸ்பியர் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: