முட்டை அரங்கில் முட்டைத் தலையர்கள்.

May 31, 2011 § 3 Comments


வார்த்தையை ஆள்பவன் வையத்தை ஆளலாம் என்ற ஒரு புது மொழியை உருவாக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்தியவில் வெற்றிப் பெற்ற அரசியல்வாதிக்ள், வழக்கறிஞர்கள் அனைவரும் வார்த்தையை ஆள்பவர்கள்.அர்த்த சூன்யத்தில் அவர்களால் பிருமாண்டமான வார்த்தைக் கட்டடத்தை  உருவாக்க முடியும். ‘ ஒரு ம்ணி பேசியும் ஒன்றும் சொல்லாம்ல் இருப்பது எப்படி?’ என்ற கலையில் வல்லுநர்கள். இந்தக் கலை மேல்நாட்டிலிருந்துதான் நமக்கு இறக்குமதியாகியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. சொற்கள் அனைத்தும் பொருள் குறித்தன என்பதுதான் தொல்காப்பிய விதி.

‘வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்’ என்று அலுத்துக் கொள்கிறான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்.  ஆனால் நாடகம் முழுவதிலும் அவன் பேசும் வசனங்கள்தாம் பாதிக்கு மேல். வாழ்க்கையின் எதர்த்தத்தை எதிர்நோக்க அஞ்சும் அவன், பேசிப் பேசி சோற்களில் மறைந்து கொள்கின்றானேயன்றிச் செயல்படுவதில் தயக்கம் காட்டுகின்றான். ‘ சொல்லினால் பேச்க் கற்றிலம் யாம், வில்லினால் பேசுவோம்’ என்று இலக்குவன் இந்திரசித்திடம் கூறுவது நினைவுக்கு வருகிறது.

ஆங்கிலத்தில் ‘phoney’ என்ற சொல் உண்டு. ‘பாசாங்குத்தனம்’ என்று பொருள் சொல்லலாம்.  தற்கால அறிவுஜீவி உலகத்தின் இயக்க விதி இந்த ‘பாசங்குத்தனம்’. சென்னைப் பல்கலைகழகம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆங்கில-தமிழ் அகராதியில் இந்த ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் தேடினேன். தமிழ் கலாசாரத்தில் ‘பசாங்குத்தன்ம்’ இல்லையோ என்னவோ இந்தச் சொல் அகராதியில் காணவில்லை. ஆனால் முன்னுரையில் இவ்வகராதியைத்  தொகுத்த தமிழ்ப் பேராசிரியர் கூறியிருப்பதே ‘phoney’க்குச் சான்று: ‘ தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒவ்வாச் சொற்களை விடுத்து, பழந்தமிழ் அருஞ் சொற்களைத் தமிழின் அன்றாட உரையாடல்களில் பெய்து எம்தம் தமிழர் பேச வேண்டுமென்பதுதான் எம் வேணவா’.

தில்லியின் அறிவுக் கூடாரங்கள்தாம் அறிவுஜிவிப் பாசாங்குத்தனதின் தலைமைக் கேந்திரம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு  தில்லிப் பல்கலைக்கழகத்தில் அறிவுப் புலிகள் குழுமீருந்த ஒப்பிலக்கியக் கருத்தரங்கில்,  ஓர் அறிமுக அறிவுஜிவி தமக்குப் பிடித்த ஒரு நூலைப் பற்றி technical jargon ஏதுமின்றி  எளிய முறையில் இலக்கிய நேர்மையுடன் ஒரு கட்டுரை படித்தார்.

அது முட்டை வடிவில் இருந்த ஒரு பெரிய அரங்கம். கூடியிருப்பவர்கள் ‘முட்டைத் தலைகள்'(eggheads)  அல்லவா?

கட்டுரையை அவர் படித்து முடித்த பிறகு பொருள் பொதிந்த அமைதி நில்வியது.

சில் நிமிஷங்களுக்குப் பிறகு, ஒரு பேராசிரியர் தம் மூக்குக் கண்ணாடியைக் கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டே,’ நல்ல பேப்பர்.உங்கள் அளவுக்குச் சிறப்பாகத்தான் தயாரித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.’ என்றார்.

‘நன்றி’ என்றார் கட்டுரையாளர்.’உங்கள் அளவுக்கு’ என்பதை அவர் பொருள் படுத்தவில்லி.

பேராசிரியர் ஆழ்ந்த அமைதியான குரலில்(ஆழ்ந்த சிந்தனைக்கு அடையாளம்) மேலும் சொன்னார்: ‘ நாவலின் architectonics பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே!’  இதைத் தொடர்ந்து மற்றவர்களைச் சுற்று முற்றும் பார்த்து ஒரு புன்முறுவல்.

‘Architectonics’ என்ற சொல்லைக் கட்டுரை படித்த இளைஞர் கேள்விப்பட்டதே இல்லை என்று தோன்றிற்று.ஆனால் மெத்தப் படித்த அறிஞர்களிடையே தம் அறியாமையைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவோ என்னவோ அவர் பொதுவாகச் சொன்னார்;  ‘நன்றாக வந்திருக்கிறது.’

‘எது நன்றாக வந்திருக்கிறது?’

‘நீங்கள் சொன்னது.’ அது என்ன வார்த்தை என்று அவருக்கு மறந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு பொருள் பொதிந்த அமைதி. புன்முறுவல்கள்.

புலிகளுக்கிடையே அகப்பட்ட ஆட்டுக் குட்டியைப் போல் உணர்ந்திருக்க வேண்டும் கட்டுரையாளர்.

அப்பொழுது முன்னால் கேள்விக் கேட்டவரின் பிரிய எதிரியாகிய இன்னொரு ஜாம்புவான் கட்டுரையாளருக்கு ஆதரவாகப் பேச வேண்டுமென்று நினைத்து,’ ஐ ஆம் ஸாரி.  மைக்கேல் ஜோடன், இதைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறான், architectonics காவியத்துக்கேயன்றி நாவலுக்கன்று. பேராசிரியர் இதைஅறியவில்லை என்பது ஆச்சர்யம்’.

‘நாவல் என்பது காவியத்தின் வாரிசுதானே? இங்கிலாந்தில் தொழிற்புரட்ச்சிக்குப் பின் பிரபுத்வ சமூக அமைப்பு…’ என்பதற்குள் இன்னொருவர் குறுக்கிட்டார்; ‘மன்னிக்கவும். இது மார்க்ஸிய பார்வை.Please spare literature..’.

“Why not?’ என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் எழுந்தன.

கட்டுரை வாசித்தவர் எழுந்து போய்விட்டார் என்பதை அறிவு ஜீவிகள் யாரும் கவனிக்கவில்லை.கவலைப் படவுமில்லை.

Advertisements

§ 3 Responses to முட்டை அரங்கில் முட்டைத் தலையர்கள்.

 • Karthikeyan says:

   alan sokal எனும் பெளதீக பேராசிரியர் விஞ்ஞானத்தையும் பெண்ணியம், மார்க்சியம் என போட்டு கூரறுக்கும் அறிவுஜீவி கும்பலை பொருக்கமட்டாது “Transgressing the Boundaries: Towards a Transformative Hermeneutics of Quantum Gravity” எனும் தலைப்பில் ஒரு நையாண்டி கட்டுரையை social text என்ற postmodern cultural studies பத்திரிகைக்கு அனுப்பினார். அவர் எழுத்தில் தேவையான அளவு socialism, feminism, மற்றும் வாயில் நுழையாத morphogenetic field போன்ற சொற்றொடர்களை எல்லாம் பிரயோகித்தார். அக்கட்டுரை ivy league பேராசிரியர்களை உள்ளடக்கிய peer review குழுவால் ஏற்கப்பட்டு பிரசுரமும் செய்யப்பட்டது. பின்னர் sokal இந்த கட்டுரையை hoax என்று வெளிப்படுத்தியபோது அப்பத்திரிகை sokal தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாய் கூச்சலிட்டது. trendy fads காரணமாய் sociology, anthropology போன்ற துறைகள் இன்று சீரழிந்துவருகின்றன என்பது சோகமான உண்மை

  • தமிழ் இலக்கிய உலகில் பல்கலைகழகக் கூடாரத்து வெளியிலும் இந்நோய் பரவியுள்ளது. தங்களைத் தாமே மொழிபெயர்த்துக் கொள்வது போன்ற ஒரு சிக்கலான நடையில், மற்றவர்களுக்குப் புரிந்து விடக் கூடாதென்ற அக்கறையுடன் எழுதுகிறார்கள்

 • சுப்பராமன் says:

  அருமையான விமர்சனம், இ.பா. சார்.
  The bait is the means to get the fish where you want it, catch the fish and you forget the bait. The snare is the means to get the rabbit where you want it, catch the rabbit and forget the snare. Words are the means to get the idea where you want it, catch on to the idea and you forget about the words. Where shall I find a man who forgets about words, and have a word with him?
  -Chuang Tzu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading முட்டை அரங்கில் முட்டைத் தலையர்கள். at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: