யாருடைய விளையாட்டு?

May 30, 2011 § 2 Comments


காலை ஆறு மணி. நான் உலாவப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

வாசலில் அந்த ஆறு வயது மராத்திப் பையன் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் பரவசப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். கையில் அவனை விடப் பெரிய கிரிக்கெட் மட்டை. பயிற்சிக்குப் போய்க்கொண்டிருந்தான். ‘ஈன்ற பொழுதினும் பெரிது உவந்து’ காரை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டிருந்தாள் அவன் அம்மா.

‘ஹல்லோ சச்சின்!’ என்றேன் நான்.

‘நான் சச்சின் இல்லை.என் பேர் தினேஷ்’.

‘நீ சச்சின் டெண் டூல்கர் இல்லையா?’

‘இல்லை. நான் நான் தான்..’ இப்பொழுது பரவசப் புன்னகைக்குப் பதிலாக லேசான எதிர்ப்புணர்வு தெரிந்தது.

‘நீ தினேஷ்தா ன்..சச்சின் இல்லை.. சச்சினைத்தான் இனிமேல்  ‘தினேஷ்’ என்று கூப்பிட வேண்டும்.’ என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளைக் குலுக்கினேன். பரவசப் புன்னகை மீண்டும் அவ்ன் முகத்தில் விளக்கேற்றி வைத்தது.

உற்சாகத்துடன் இருக்கும் இந்தச் சிறுவர்களைக் காணும்போது எண்பதின் தலைவாசலில் நிற்கும் என் மனம் ஏன் உவகையில் ஆழ்கிறது? காரணம், எப்பொழுதோ காணாமல் போய்விட்ட என்னுள் இருக்கும் அந்த ஆறு  வயது சிறுவனை நான் தேடுவதினாலோ என்னவோ?

இப்பொழுது நடுவயதினராக இருக்கும் என் குழந்தைகள்  தொலைத்து விட்ட அவர்களுக்குள் இருக்கும் அந்த ஆறுவயது சிறுவர்களை நான் தேடிக் கொண்டிருப்பதினாலும் இருக்கலாம்!

கனவுகளையும் பேதைமையும் சுமந்து கொண்டு வண்ணத்துப் பூச்சிகளைப் போல் திரியும் குழந்தைகள் பெரியவர்கள் ஆகாமலேயே இருந்து விடக் கூடாது? பெரியவர்கள் ஆன பிறகுதான் நமக்கு இப்படித் தோன்றுகிறது.

பாரதிக்கும் இப்படித் தோன்றியிருக்க வேண்டுமென்று தெரிகிறது. ஜான் ஸ்கார் ஆங்கிலத்தில் குழந்தை உலகை பாவனை செய்து எழுதிய கவிதையை மொழி ஆக்கம் செய்திருக்கிறார். பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் அனைத்துமே  உளவியல் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்த மன நிலையின் விளைந்தவைதாம். பெரியவர்கள் ஆகிவிடக் கூடாது என்ற பிடிவாதம். யதார்த்த உலகைக் காண அச்சம்.

வேர்ட்ஸ்வொர்த் இந்தக் குழந்தைப் பருவ இழப்பு பற்றி ஓர் அருமையான கவிதை எழுதியிருக்கிறான்.

‘There was a time when meadow, grove and stream

The earth and and every common sight

To me did seem appareled in celestial light

The glory and the freshness of a dream

It is not now as it hath been of yore

Turn wheresoever I may

By night or day

The things which I have seen I can see no more!

வாழ்க்கையின் முரண்பாடோ அல்லது இதுதான் இயல்போ தெரியவில்லை சிறுவனாக இருக்கும்போது,  விரைவில் பெரியவனாக ஆகிவிடமென்ற துடிப்பு இருக்கிறது. பெரியவனாகிவிட்டால் கட்டுப்பாடு இல்லை, எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக போய்விட முடியும் என்பன போன்ற சலுகைகளினால். பெரியவர்கள் ஆன பிறகு ஏற்படுகின்ற மனத்தடைகளும், சமூகத் தளைகளும் பற்றி குழந்தையாக இருக்கும்போது தெரிவதில்லை.

இயற்கையோ இறைவனோ இது யாருடைய விளையாட்டு?

Advertisements

§ 2 Responses to யாருடைய விளையாட்டு?

  • Kangal-Irandaal says:

    எல்லாவற்றிலும், நாளையை தேடி ஓடுவதும், நேற்றை நினைத்து ஏங்குவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மாதிரியான வார்த்தைகளை நமக்கு நாமே சொல்லிக்கொண்டால் அதை ஏக்கம் என்றும், நம்மை விட சிறியவரிடம் சொன்னால் அதை “generation-gap” என்றும் சொல்கிறோமோ?

    இன்னொரு வேடிக்கை பார்தீர்களா? “சச்சினை தான் இனிமேல் தினேஷ்ன்னு கூப்பிடனும்” என்பதற்கு சந்தோஷப்படும் மனம் தான், வளர்ந்த பின், தன்னை ஒரு successful person இன் அடையாளத்தை தான் எடுத்து கொள்ள விரும்புகிறது. 15 வயதிற்கு பின் தன்னையும் ஒரு சச்சின் என்றோ ஷாருகான் என்றோ மற்றவர் சொன்னால் சண்டோஷபடுபவர்கள் தானே அதிகம்.

    • It is not a question of missing the ‘golden past’. It is recollecting the emotions of childhood in tranquility. Yes, you have said it. The child wants to be what he is as of now and does not want to be any other person. But as one grows up, he is conditioned to think of ‘success’ and he wants to be Tendulkar or any other successful guy.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading யாருடைய விளையாட்டு? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: