என்ன வேண்டும் பிள்ளையாரா, அநுமானா?

May 27, 2011 § 2 Comments


சமச்சீர் கல்வித் திட்டம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. காரணம் ,இதற்காக எழுதப் பட்டுள்ள பாடப் புத்தகங்கள். குறிப்பாக, தமிழும், வரலாறும் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் பதவிக்கு வந்த பிறகு படுகின்ற பாட்டைச் சொல்லி மாளாது.

‘தமிழக அரசால் வெளியிடப் படுகின்ற தமிழ்ப் பாட நூல்கள் ஆளுங் கட்சியின் பிராசார ஏடுகள் போல் இருக்கின்றன’ என்ற ஒரு குற்றச்சாட்டு  போன நூற்றாண்டு எழுபதுகளில் மத்திய அரசாங்கக் கல்வித் துறைக்கு வந்தது. அதுறையினர் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கும்படி CBSE தமிழ்ப்பாடக்குழுவைக்கேட்டுக்கொண்டார்கள்.டாக்டர்ஆறுமுகமும்(பல்கலைகழகத் தமிழ்த்துறைதலைவர்) நானும் அப்பாடக் குழுவில் இருந்தோம். ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை(அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு கிடையாது) வைக்கப்பட்டிருந்த பாட நூல்களையும் அனுப்பி வைத்தார்கள். முதல் அமைச்சர், கல்வி அமைச்சர் ஆற்றிய சொற்பொழிவுகள் பாடங்களாக வைக்கப் பட்டிருந்தன. தமிழின் உரை நடைக்கு எடுத்துகாட்டாக, நான் பள்ளியில் படித்தகாலத்தில், திரு வி.க, டாக்டர் உ.வே.சா, வெள்ளக்கால் சுப்ரமனிய முதலியார், மறமலையடிகள், செல்வகேசராய முதலியார் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளைப் பாடமாக வைப்பார்கள். கருத்திலோ, நடையிலோ தரமற்ற அரசியல் செல்வாக்குள்ளவர்களும், கிணற்றுத்தவளை தமிழாசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் பாடமாக இருந்ததைக் கண்டு திடுக்கிட்டோம். ஆகவே எங்கள் கணிப்பின்படி, அரசியல் பிர்சாரங்கள் என்பதைக் காட்டிலும் இலக்கியத்தரம் அறவே அற்ற பாட நூல்களாக இருக்கிற்ன என்று எங்களுடைய மதிப்பீட்டை எழுதி அனுப்பினோம்.  குற்றச் சாட்டு வந்தால்  அது பற்றி விசாரிப்பதுதான் அரசாங்கத்தின் கடமையே தவிர, விசாரணை முடிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அதன் பொறுப்பல்ல.ஆகவே நாங்கள் எழுதி அனுப்பிய மதிப்பீடு அரசாங்க ஆவணப் பாதுகாப்பு நிலையத்தில்( ‘குப்பைதொட்டி’ யின் மங்கல வழக்கு)இருக்கக்கூடும்.

வரலாற்றுப் பாடங்கள் அரசியலோடு மிகவும் தொடர்புடையது. சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திர் போஸ், ஜெயப் பிரகாஷ் நாரயன், காம்ராஜ், போன்ற பல  உண்மையான தேசபக்தர்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிடாமல் இந்திரா காந்தி யின்  ஆஸ்தான வரலாற்று ஆசிரியர்கள், இந்திய வரலாற்றுநூல் எழுதி ஒரு ‘காப்சூலை’ பூமியில் 1976ல் புதைத்தார்கள் என்று இக்கால இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 1977ல், ஜனதா கட்சி பதவிக்கு வந்ததும்  அக்’காப்சூல்’ புமியைத் தோண்டி எடுக்கப் பட்டு விட்டது.

வரலாறு  களி மண் என்று சொல்வதில் தவறில்லை. பிள்ளையாரும் அதைக் கொண்டு பிடிக்கலாம், அநுமானும் பிடிக்கலாம். நீங்கள் பிள்ளையார் பக்தரா அலலது அநுமான் பக்தரா என்பதைப் பொறுத்த விஷயம் இது.

Advertisements

§ 2 Responses to என்ன வேண்டும் பிள்ளையாரா, அநுமானா?

 • kakkoo says:

  வணக்கம் அய்யா.
  என்னுடைய சில வரிகள்.
  வடக்கில்,அவர்கள் வழி காட்டினார்கள். இவர்கள் தொடர்கிறார்கள். இதில் வெறுமெனே தெற்கில் திராவிட கட்சிகளை மட்டும் குறை சொல்ல என்ன உள்ளது.நீங்கள் சத்தியம் செய்யுங்கள். உண்மையான , கலப்படமற்ற இந்திய தேசத்தின் சரித்திரமா நீங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்தீர்கள்?

  இன்றைய பிள்ளைகளுக்கு நாட்டின் உண்மையான வரலாற்றையா நாம் சொல்லித்தருகிறோம்?
  அங்கு மட்டும் வேண்டிய மாற்றங்கள் செய்து கொண்டுவிட்டு வழியும் காட்டியாகி விட்டது. காங்கிரஸ் காரர்கள் எது செய்தாலும் அது தேச பக்தி ,நாட்டு பற்று. ஆனால் அதையே நாட்டில் வேறு பலரும் செய்தால் அதற்கு பெயரே வேறா? கல்வியாளர்கள் எவ்வித காழ்புணர்வும் இன்றி இருத்தல் வேண்டும். நமக்கு அப்படியா வாய்த்துள்ளது?
  எல்லோரும் வெறும் “ஜால்ரா ” மற்றும் “அடி வருடி” கும்பல்கள்தானே கும்பல்தானே ஆளும் கட்சிகளுக்கு. பின்னர் பாடபுத்தகங்கள் என்ன கதியில் இருக்கும்??

 • sathianarayanan says:

  என் மதிப்புக்குரிய இ.பா அவர்களுக்கு,
  உங்கள் ப்ளாக்-ஐ இன்று தான் படித்தேன்.
  உங்கள் தீவிர வாசகன் நான்.
  மாயமான் வேட்டை,நிலமென்னும் நல்லாள்,குருதிப்புனல் ஆகிய புதினங்கள் என் இளமையில் தந்த மன எழுச்சி விவரிக்க இயலாதது.
  உங்களுக்கு இந்த வாசகனின் நன்றிகள்.
  சோ அவர்கள் கூட இந்திரா வின் பேழை புதைப்பை கிண்டல் செய்து சென்னை யில் ஒரு பேழை புதைத்ததாக நினைவு.
  வாழக நீ எம்மான்!,
  இன்னுமொரு நூற்றாண்டிரும்!
  வணக்கங்களுடன்,
  சத்திய நாராயணன்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading என்ன வேண்டும் பிள்ளையாரா, அநுமானா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: