தாகூரின் ‘கீதாஞ்சலி’

May 27, 2011 § 5 Comments


ராகவன் வலைப் பதிவில் கரிச்சான் குஞ்சு  தி.ஜானகிராமனைப் பற்றி எழுதிருப்பதைப் படித்தேன்.  திஜா கும்பகோனத்தில் எனக்கு பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலப் பாடம் எடுத்தார். எனக்கு தாகூர் எழுதிய  ‘சுபா’ என்ற கதை பாடமாக இருந்தது. ‘சுபாஷினி’  ( இனிமையாகப் பேசக் கூடியவள்) என்பதன் சுருக்கம்  ‘சுபா’.  ஆனால் சுபா பிறவி ஊமை. தி.ஜா  இந்தப் பாடத்தை நடத்தும்போது அவர் சொன்னதாக என் நினைவு : ‘தாகூரின் கவிதைகளைக் காட்டிலும் அவருடைய சிறுகதைகள் ரஸம் பொருந்தியவை’.

கரிச்சான் குஞ்சு, தி.ஜாவுக்குத் தாகூர் பிடிக்காது என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது , தி.ஜா தாகூர் கவிதைகளைப் பற்றிச் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. தாகூரின் கவிதைகளைப் பற்றி நானும் தி.ஜா கட்சிதான். பாரதியின் கவிதையின் தனித்துவமான மேதைமையும் புதுமையும்  தாகூர் கவிதைகளில் இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.

தாகூர் ‘கீதாஞ்சலி’ யின் தாம் செய்த(மற்றவர் உதவியுடன்) ஆங்கில மொழி ஆக்கத்துடன் லண்டன் சென்றபோது அவர் குறிக்கோள் நோபல் பரிசுதான்.வங்காள மொழியில் எழுதியபோது, அதில் 157 கவிதைகள் இருந்தன. ஆங்கிலத்தில், 103. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வங்காள மொழியில் இல்லாத புது 53 கவிதைகள் இந்த ஆங்கில் 103 கவிதைத் தொகுப்பில் இருந்தன. இவை அனைத்தும் மேற்கத்திய இலக்கிய ரஸனையை அநுசரித்து எழுதப் பட்டவை.

தாகூரின் அதிர்ஷ்டம் அவருக்கு ஒரு நண்பர் உதவியால் ஏற்கனவே நோபல் பரிசு பெற்றிருந்த W.B,Yeats யின் அறிமுகம் கிடைத்தது.  ‘கீதாஞ்சலி’ யைப் படித்து முன்னுரை எழுதித்தர வேண்டுமென்று தாகூர் யீட்ஸைக் கேட்டுக் கொண்டார்.

அதுவரை யீட்ஸுக்கு  இந்திய mystical கவிதைப் பாரம்பரியம் ( like sufism, Kabir, bhakti poetry of Tamilnadu) etc) அறிமுகமாயிருக்க வில்லை.  தாகூரின் கவிதைகள் அவருக்கு ஓர் புதிய ஆச்சர்யமான பிரபஞ்சத்தை அகக் கண்முன் நிறுத்தின. அவர் ஓர் அற்புதமான முன்னுரையை எழுதித் தந்தார். ஆனால் அவரும் இந்நூலுக்கு நோபல் பரிசு கிடைக்குமென்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று பின்னால் கூறியதுதான் வேடிக்கை!

திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசகம், திருக்கோவையார், ஜலாலுடீன் ரூமி, கபீர், சூர்தாஸ் படித்தவர்களுக்கு, ‘கீதாஞ்சலி’யில் புதுமை ஏதும் இருப்பதாகப் புலப்படாது. ஆனால் மேலே குறிப்பிட்ட நூல்கள் நோபல் பரிசை மனத்தில் கொண்டு எழுதப் படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய நாடக ஆசிரியர் ஹெரால்ட் பிண்டருக்கு நோபல் பரிசு கிடைத்த போது, அமெரிக்க இலக்கியல் உலகத்துக்கு அது ஓர் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. காரணம், பிண்டர் totally ant5i-American. அப்பொழுது ஓர் அமெரிக்க விமர்சகர்(பெயர் மறந்து விட்டது) எழுதினார்: ‘நோபல் பரிசு விசித்திரமானது. யார் யாருக்கோ கொடுக்கப் படுகின்றது. ஹென்றி ஷென்கெவிட்ச்சை (‘Quo Vadis’) உங்களுக்குத் தெரியுமா? பேர்ள் எஸ்.பக்கை(‘Good Earth”) உங்களுக்குத் தெரியுமா? ரவீந்திரநாத் தாகூரை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது, யார் இவர்கள் என்று கேட்கின்றீர்கள். தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் இலக்கியத்துக்காக  நோபல் பரிசு பெற்றவர்கள்.டால்ஸ்டாயைத் தெரியுமா? எட்வர்ட் ஆல்பியைத் தெரியுமா? தெரியும் என்கிறீர்கள். ஆனல் இவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை..’

Advertisements

§ 5 Responses to தாகூரின் ‘கீதாஞ்சலி’

 • BalHanuman says:

  நோபல் பரிசுக்கும் Lobbying தேவைப்படுகிறது.

  பிரிக்க முடியாதது ?
  விருதுகளும், அதைத் தொடரும் சர்ச்சைகளும் 😦

 • Kangal-Irandaal says:

  I think, நாம் பாரதிக்கு posthumous ஆகத்தான், அவருக்கான recognition கூட கொடுத்தோம். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் செய்யவில்லை, அதன் அருமை பெருமைகளை நாம் சரியாய் marketing உம் செய்யவில்லை. Infact, இன்னொரு பெங்காலிப் புலவரான Toru Dutt என்பவற்றின் பல Sonnets ரொம்ப நன்றாக இருக்கும். கீதாஞ்சலியை விட எளிமையும், அமைதியும் அதில் இருக்கும். I first studied one of her sonnet in my school english syllabus. Do not remember if it was in 10th or 11th.

  அவருக்கும் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காமலே போய்விட்டது, அவர் பிரெஞ்சிலும் எழுதியும் கூட.

  Yeats’ எழுதிய அறிமுகம் தாகூருக்கு உதவி இருந்தாலும், ஒன்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். நோபெல் பரிசுக்கு consider செய்யப்பட்ட படைப்புகளில் இருந்து கீதஞ்சலை செலக்ட் செய்யப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்வோமாக.

  இந்த பின்னூட்டத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, I got a parallel thought. நம்முடைய நாகேஷுக்கு எந்த விதமான அவார்டும் கிடைக்கததுக்கான காரணங்களில் ஒன்று அவருக்கான முன்னுரையை, யாரும் “award committe” இல் எழுதாதது தானோ?

 • anonymous says:

  Iyaaiyo – Jeyamohan idha padicha avlo than . Tagore en Maha Kavi endru oru nooru pakkam ezhudiduvar

 • chandhra mouli says:

  There are those who wrote that Bharathi adored Sanskrit more than Tamil. The reasons are obvious. Sivaji Ganesan was not honoured as and when he should have been..You will shed tears if you read his reaction when he was awarded the “Best supporting artist” for the movie Thevar Mahan. Tamilians need no rivals from outside.They are either born or made in the same state.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading தாகூரின் ‘கீதாஞ்சலி’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: