மனித முகம்

May 24, 2011 § 1 Comment


நான் போலந்தில் வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது (1981-86)இச்சம்பவம் நடந்தது.

அப்பொழுது ராணுவ ஆட்சியின் உக்கிரம். போலந்து முழுவதும் ஊரடங்குச் சட்டம். இரவு 9 மணிக்கு மேல் யாரும் வெளியே  நடமாடாடக் கூடாது.

என் மாணவிகள் நால்வர் என்னையும் என் மனைவியையும் ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.பெயர் மறந்து விட்டது. அந்தக் கிராமத்தையே பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஒரு நாட்டுபுற அருங்காட்சி அகமாக வைத்திருந்தார்கள். இரண்டு நூற்றாண்டை உதறித் தள்ளிய கோலம் பூண்டு  அந்தக் கிராமம் இருந்தது.

கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தன அந்தக் கிராமத்து நாட்டுப்புறக் கலைகள்.

அந்தக் கிராமத்திலிருந்து 3 கி.மீ தள்ளியிருந்த ஒரு சிறிய நகரத்தில் நானும் என் மனைவியும் மாணவிகளும் ஒர் வீட்டில் தங்கியிருந்தோம். இது அந்த நகரத்து நகராட்சித் தலைவர் செய்திருந்த ஏற்பாடு.

என் மனைவி தெருவில் நடக்கும் போது திடீரென்று கால் இடறி கீழே விழுந்துவிட்டாள். கால்  ‘பொல பொல’வென்று வீங்கிவிட்டது!

உடனே அவளை ஆஸ்பத்திரிக்கு டாக்ஸியில் அழைத்துச் சென்றோம். ஆஸ்பத்திரியில் நல்ல கூட்டம்.   வாழ்க்கையில் முதல் தடவையாக புடவைக் கட்டிய ஒரு இந்தியப் பெண்ணை[ப் பார்க்கும் பிரமிப்பு அந்தச் சிறிய நகரத்து மக்க்ளின் முகங்களில் தெரிந்தது.

‘ஜிப்ஸியா?’ என்று ஒரு பெண் என் மணவி ஒருத்தியைக் கேட்டாள்.

‘இந்தி’ (இந்தியா) என்றாள் என் மாணவி நடாலியா.

எலும்பு முறிவு என்பது தெளிவாகியது. ‘ப்ளாஸ்டர்’ போட்டார்கள். வார்ஸாவுக்குத் திரும்பிவிடலாமென்று தீர்மானித்தோம்.

நாங்கள் வரும்போது  பஸ்ஸில் வந்தோம். என் மனைவி படுத்த நிலையிலேயே இருந்ததால் பஸ்ஸில் போக முடியாது. ரெயிலில்தான் போக முடியும். விடியற்காலை 3 மணிக்கு வண்டி என்றார்கள்.

இரவு 2 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படவேண்டும். ரெயில்வே நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ.

இரண்டு மாணவிகள் இரவு ஒண்ணேமுக்கால் மணிக்கு டாக்ஸி கொண்டு வர புறப்பட்டுப் போனர்கள்.

அரைமணியாகியும் திரும்பி வரவில்லை. டாக்ஸி கிடைக்க வில்லையா?

பத்து நிமிஷம் கழித்து இரண்டு இளம் போலீஸ்காரர்களுடன் அவர்கள் வந்தார்கள்.

‘ கர்ஃப்யூ என்பதால் எங்களைப் போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். நாங்கள் விஷயத்தை  விளக்கினோம். இவர்கள் நம்பவில்லை. உறுதிப் படுத்திக் கொள்வதற்காக நேரில் வந்திருக்கிறர்கள்’ என்றாள் ஆஷா.

அந்த இரண்டு போலீஸ்காரர்களையும் என் மனைவி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள் இவோன்னா அவர்கள் அவள் காலில் போடப்பட்டிருந்த ப்ளச்டரை’ பார்த்தார்கள். என் மனைவி அவர்களைப் பார்த்துச் சற்று பயந்து விட்டாள். அவளுக்குத் தெரிந்திருந்த அரைகுறை போலிஷில்( என்னை விட நன்கு பேச அவள் கற்றுக் கொண்டிருந்தாள்) ‘கீழே விழுந்துவிட்டேன் . எலும்பு முறிவு’  என்றாள் கஷ்டப்பட்டுப் புன்னகை செய்து கொண்டே.

அந்த இரண்டு இளைஞர்களும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

என் மாணவிகள் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.

:எங்களுடன் வானில் வாருங்கள். நாங்கள் ரெயிலேற்றி அனுப்புகிறோம்’ என்றான் ஓர் இளைஞன்!

போலிஷ் கம்யூனிஸத்துக்கும் சோவியத் கம்யூனிஸத்துக்கும் இதுதான் வித்தியாசம். மனித முகம்!

நம் நாட்டில் இந்தச் சூழ்நிலையில் போலீஸ்காரர்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

Advertisements

§ One Response to மனித முகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மனித முகம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: