கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

May 23, 2011 § 7 Comments


இப்பொழுதுதான் வலைப் பதிவு எழுத தொடங்கியிருப்பதால், என்ன் காரணம் என்று தெரியவில்லை, போன பதிவைப் பிரசுரிக்க அனுப்பியபோது, இரண்டு மூன்று சின்ன பாராக்களைத் தவிர, நான் எழுதிய முழு கட்டுரையும் அச்சில் வரவில்லை. காணாமல் போய்விட்டது! ஆண்டவனே ‘சென்ஸார்’ பண்ணியிருக்கக் கூடும்!

அக்கட்டுரையில் வால்மீகி ராமாயணத்தில் வரும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தேன். இச்செய்தியைக் கம்பன் சொல்லவில்லை.

வன வாசத்தின் போது, சுதீட்சண முனிவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு, இராமனும் சீதையும் இளவலும் திரும்புகின்றனர். கம்பன், அகத்தியரிடமிருந்து இராமன் ஆயுதங்கள் பெறுவதாகக் கூறுகிறான்.

‘நீண்ட தமிழால் நேமியின் அளந்த’ அகத்தியன் ஏன் இராமனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. கற்றுக் கொண்டிருந்தால், இராவணன் இங்குச் சிலர் கூறுவது போல் தமிழனாய் இருந்திருப்பின், இராமன், தமிழ் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்து, சீதையை விட்டிருப்பான். உயிர்ச் சேதம் இருந்திருக்காது.

சுதீட்சண முனிவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்ட இராமனைச் சீதை கடிந்து கொள்வதாக வான்மீகத்தில் வருகிறது.

சீதை கூறுகிறாள்:’ ‘ நீயோ காட்டுக்குத் ‘ தாங்கரும்  தவ மேற்கொண்டு புண்ணிய துறைகளாடி’ வருவதற்காக  வந்திருக்கிறாய்.  உனக்கு எதற்கு ஆயுதங்கள்? ஆயுதமிருந்தால்தான் போராடத் தூண்டும். ஒரு கதை சொல்லுகிறேன். ஒரு முனிவன் கடுமையாகத் தவம் செய்தான். இந்திரப் பதவிக்கு ஆபத்தோ என்று அஞ்சிய இந்திரன் அந்த முனிவனிடம் சென்று, ‘ முனி சிரேஷ்டரே, உங்களுக்குப் பாது காவ்லாக வலிமை மிக்க இந்த வாளை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். முனிவரும் வாங்கிக் கொண்டார். பிறகு அவருக்கு அந்த வாளைப் பற்றியே நினைவு. அதன் வலிமையைப் பரிசோதிக்க வேண்டும் என்று தோன்றிற்று.  எதிர்ப் பட்டவர்களைப் போருக்கு அழைத்தார். தவம் போயிற்று, வாள் விஞ்சியது, அவ்வளவுதான். காட்டின் அமைதியைக் காக்க வேண்டுமென்ற பொறுப்பு உன்னுடையதுதான் என்று உனக்கென்ன நாட்டாமை?’ (சீதை தீர்க்க தரிசனத்தோடு அமெரிக்காவைச் சுட்டிக் காட்டுகிறாளோ என்று தோன்றுகிறது.)

வான்மீகத்தில் காணும் இச்செய்தியைப் படித்த் போதுதான், எனக்கும் உதயமாயிற்று. தவம் செய்துவிட்டு வா என்று ஏவப்பட்ட இராம்ன், கோதண்டத்தைத் தாங்கி ஏன் காட்டுக்குப் போனான்? கமண்டலமும், மரவுரியுந்தானே அவனுடைய ஆயுதங்களாக இருந்திருக்க வேண்டும்?காட்டில் அவனுக்கு ஏற்பட்ட பல பிரச்னைகளுக்கு அவன் தாங்கிய வில் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

So Sita was the first person in civilized history who stood for total disarmament!கம்பனே சொல்லுகிறான், சீதை அசோக வனத்தில வாளையோ வில்லையோ நம்பி இராவணப் பேரரசை எதிர்த்து நிற்கவில்லை.

‘விற் பெரும் தடந்தோள் வீர ‘ என்று இராமனுடைய வில்லைச் சற்று ஏளனமாகக் குறிப்பிட்டு விட்டு, சீதையைக் கண்டு திரும்பிய அநுமன் கூறுகிறான், சீதைக்கு ஆயுத பலம் இல்லாமலிருக்கலாம் ஆனால் அவளைக் காத்து நிற்பன அவளுடைய குடிபிறப்பு,பொறுமை, அநீதி கண்டு தலை குனியாத கற்பு என்ற பண்பு தந்த வீரம். ‘ நீ யொ இங்கு இன்னும் வில்லைச் சுமந்து கொண்டு வாளாய் நிற்கிறாய். ஆனால் சீதை அசோக வ்னத்தில் இராவண சாம்ராஜயத்தை தனித்து நின்று எதிர்த்து வெற்றி பெற்று விட்டாள்! ‘களிநடம் புரியக் கண்டேன்’ என்கிறான் அநுமன்!

‘விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்

நற்பெரும் தவத் தாளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்

இற்பிறப்பு என்பதொன்றும் இரும் பொறை என்பதொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்ட்டேன்!

Advertisements

§ 7 Responses to கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 • Karthik says:

  என் அறிவுக்கு எட்டியது. தவம் செய்துவிட்டு வா என்ற காட்டிற்கு அனுப்பவில்லை. வனவாசம் செய்துவிட்டுவா என்றுதான் ராமன் அனுப்பபட்டார். இரண்டுக்கு வித்தியாசம் உள்ளதல்லவா ?

  • ”தாழிரும் சடைகள் தாங்கி தாங்கரும் தவமேற் கொண்டு’ என்பது கம்பன் வாக்கு.

 • Karthik says:

  பார்க்கிறேன் அய்யா

 • Kangal-Irandaal says:

  Sir, wonderful observation. Have never thought about this before.

  இராமன், இலக்குவனிடம் கூறும், இது, எவ்வளவு பெரிய உண்மை.
  “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
  பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
  மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
  விதியின் பிழை; ”

  சீதையும் ராமனுடன் காட்டுக்குச் செல்வதால், பாதுகாப்புக்ககருதி, எடுத்து சென்றிருப்பாரோ?

  Also, மரவுரி தரித்து ராமன், இளையவனும் ஜானகியும் தொடர செல்கிறான் என்று கூறும் கம்பனின், கையில் வில் எடுத்துச் சென்றான் என்று சொல்கிறாரா, தெரியாது. ஒரு வேளை காட்டுக்குள் புகுமுன், would somebody like Gugan or somebody else gifted a bow to him?

 • shanthi says:

  //வனவாசம் செய்துவிட்டுவா என்றுதான் ராமன் அனுப்பபட்டார்.//

  வன வாசம் என்று தான் படித்த நினைவு.

 • ram says:

  முதலில் ராமாயணத்தில் மூலத்தை ஆராய்ச்சி செய்ய வால்மீகியை விட்டு விட்டு கம்பனை எடுத்துக்கொள்வதே தவறு. ஏனெனில் கம்பன், காளிதாசர் போன்றவர்கள் ராமாயணக் கதையிலும் பக்தியிலும் அதீத பிரேமை காரணமாக மிகுதியான கற்பனையைச் சேர்த்தும் பக்திரசத்தில் அதீதமாக ராமசார்புடனும் எழுதியிருப்பார்கள். அதனை வைத்து மூலக்கருத்தை ஆராயாமல் வால்மீகியின் நேரடி மூலஸ்லோகத்தை வைத்து ராமாயணத்தை ஆராய்வதே மேல் என நினைக்கிறேன். மேலும் ///சீதை கூறுகிறாள்:’ ‘ நீயோ காட்டுக்குத் ‘ தாங்கரும் தவ மேற்கொண்டு புண்ணிய துறைகளாடி’ வருவதற்காக வந்திருக்கிறாய். உனக்கு எதற்கு ஆயுதங்கள்?/// தவமேற்கும் போது தான் ஆயுதம் வேண்டாம் என்கிறாளே ஒழிய, ஆயுதம் இல்லாத ராமனாகவே எப்பொழுதும் இரு என்று ராமனை சீதை வேண்டவில்லை. அப்படி வேண்டியிருந்து அதனை ராமன் செய்துமிருந்தால் ராவணனிடமிருந்து சீதையை ராமனால் மீட்டிருக்க முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கடவுளுக்கு ஆயுதம் தேவையா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: