கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

May 22, 2011 § 7 Comments


எனக்கு ஒன்று புரியவில்லை. ‘அன்பே சிவம்’, ‘அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே’என்றெல்லாம் சொல்லுகிறோம், ஆனால் நம் கடவுளர் அனைவரும் ஏன் கையில் ஆயுதம் ஏந்தி நிற்க வேண்டும்?

ஆண் கடவுளர்களில் பிள்ளையாரைத் தவிர மற்றைய அனைவர் கைகளிலும் சக்கரமோ, சூலாயுதமோ, வேலோ, மழுவோ, வில்லோ இருக்கின்றன. பெண் கடவுளரில் துர்கா உக்கிரத்தின் சின்னம். பக்தர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்ற என்கிறார்கள். தீயவர்களையும் அன்பினால் அரவணைத்து வன்முறை ஏதுமின்றி, பக்தர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க இயலாதா?

உலக வரலாற்றில், மனித நாகரிகத்தின் தொடக்கக் காலக் கடவுளர் அனைவருமே கொடூரமானவர்கள். கிரேக்க தெய்வங்கள் மனிதர்களை என்ன பாடு படுத்தியிருக்கிறன?

Advertisements

§ 7 Responses to கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 • ram says:

  அரசாங்கத்திற்கு ராணுவம் தேவையா என்பது போல் இருக்கிறது இந்தக் கேள்வி. மக்களைக் காத்த அன்றைய தலைவர்கள் பின்னாள் கடவுளர்களாகவும் காவல் தெய்வங்களாகவும் ஆனார்கள். அப்படி காவல் காத்தவர்களுக்கு ஆயுதம் வேண்டாமா என்ன?

 • நல்லசிவம் says:

  உங்கள் கேள்வியை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், ‘கடவுள் தேவையா?’ என்பதில்தான் முடியும்.
  கடவுள் இருக்கையில், தீயவர்கள் எப்படி உருவாக முடியும்? முடியும் என்றால், கடவுளின் சக்தி என்ன? சூ மந்திர காளி, no more தீயவர்கள். அப்படின்னு கடவுள் ஒருதரம் சொன்னாக்க என்னவாம்?

 • virutcham says:

  சிவலிங்கம் கூடவா? just kidding.

  மனிதன் கடவுள் அடையாளத்தை குறியீட்டில் இருந்து உருவத்துக்குக் கொண்டு சென்ற போது அவனது பரிணாமத்தின் வளர்ச்சி போல் கடவுளையும் வளர்த்துக் கொண்டு சென்றான். காட்டில் அலைந்து கொண்டு இருந்த அவனுக்கு பாதுகாப்புக்கு என்ன என்ன வேண்டியிருந்ததோ அதை தான் படைத்த கடவுளுக்குக் கொடுத்து வைத்தான். கூடவே இரு கை பத்தாது அதிகம் இருந்தால் எவ்வளவு சுலபமாக எதிரிகளை வீழ்த்தலாம் என்ற கற்பனை செய்து மகிழ்ந்த அவன் ஒவ்வொரு கைக்கும் ஒரு ஆயுதத்தையும் கொடுத்து வைத்தான். இன்றைய சூப்பர் man , ஹி man , சூப்பர் கேர்ள் கார்டூன் சித்திரங்கள் அன்று கடவுளர்கள் ஆகின. ஏனென்றால் அவன் கலையை கல்லில் செதுக்கி விட்டதால் அது காலங்கள் தாண்டி வாழ்ந்து விட்டது.
  என்று யாரவது வந்து பரிணாமக் கதை சொல்லக் கூடும். அப்படி ஒரு விவாதத்துக்கான அடிதளமா இந்த தலைப்போடான சிறு குறிப்பு?

 • Kangal-Irandaal says:

  என்னை பொறுத்த வரை ‘அன்பே சிவம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்துவது இந்த ஆயுதங்கள் மட்டுமே. ஒவ்வொருவருள்ளும் இருக்கும் தீயவைகளை அழிக்க, நாம் நமக்குள் பிரயோகப் படுத்தாமல், மற்றவரை தாக்குதளுக்கு பயன்படுத்துவது,நாம் செய்யும் தவறு. (These are guided to be used to kill one’s inner demons. )அதற்காக கடவுளை, மதத்தை, குறைகூறுவது எப்படி சரியாகும்? Probably we can blame the “society” that had(s) influenced our thought-processes and “us”, the people for succumbing to these influences.

 • சும்மான் says:

  தெய்வத்தின் கையில் உள்ள ஆயுதங்கள் படிமங்கள். ரத்தம் சிந்தும் ஆயுதங்கள் இல்லை. ஒவ்வொரு தெய்வீக ஆயுதமும் குறிக்கும் கருத்துருவம் புரியாத போது குழப்பம் ஏற்படத்தான் செய்யும்.

  தெய்வங்களின் கையில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்த நீங்கள், அத்தெய்வங்கள் அந்த ஆயுதங்களை எப்படிப் பிடித்துள்ளன என்பதையும் பார்க்க வேண்டும். மென்மையாய். எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற வகையில்.

  மென்மையான வன்முறை வாழ்விற்கு அவசியம். கலவி போல். கல்வி போல். படைப்பூக்கம் கொண்ட உழைப்புப் போல்.

  அன்பு என்றால் வலி இல்லாத விஷயம் இல்லை. சூரனைச் சிரச்சேதம் செய்த பெம்மான், அவனைத் தன் கொடியில் ஏற்றி வணங்கப்படும் அடையாளமாக்கினான். உயர்வைத் தரும் வன்முறை அன்பின் வடிவமே. பூமியைப் பிளந்துதான் விதை செடியாகிறது.

  எனவே, ஆயுதங்கள் இல்லாதவற்றை அமைதியின் அடையாளம் என்று சொல்லிவிடமுடியாது. தான் சொன்ன சொல் கேட்காதவர்களை நிரந்தர நரகத் தீயில் தள்ளுகின்ற ஆபிரகாமியத் தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் இல்லைதான். ஆனால், ஆயுதம் ஏந்திய சிவனுக்கு மட்டுமே அனைத்து உயிரையும் தன் உயிராகக் காண முடிகிறது.

  அவனால் அனைத்தும் சிவமயமாகின்றன. ஆபிரகாமியத்தால் சவ மயமாகின்றன.

  அதனால்தான், அன்பே சிவம்.

 • சும்மான் says:

  அடுத்த பாகத்தை இப்போதுதான் பார்த்தேன்.

  ஒரு வரியை வைத்து, ஒரு முழுப்புத்தகத்தையும் எடை போடுவது போல இருக்கிறது இரண்டாம் பாகம். ஒரு கவிதையை வைத்து ஒரு பிரம்மாண்டத்தின்மீதே ஒற்றை முத்திரை பதிப்பது தகுமா ?

  சீதையின் பெருமையைப் பேசினான் அனுமன். அம்மாவைப் பெருமையாகப் பேச, “அப்பா, நீ ஒரு அசடு” என்று சொல்லும் மகனைப் போல.

  ராவணனிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சீதையிடம் இருந்தன கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்கள். இலங்கையில் இருந்து சீதையை மீட்க ராமனிடம் இருந்தன கண்ணுக்குத் தெரிந்த ஆயுதங்கள்.

  கண்ணுக்குத் தெரியாத வலிமையை, கண்ணுக்குத் தெரிந்த வலிமை காத்து நிற்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த வலிமை கண்ணுக்குத் தெரியாத வலிமையினாலே விளையும்.

  கண்ணுக்குத் தெரிந்த ஆயுதங்கள் கொண்ட அனைவரும் ராமனாகிவிட முடியாது. ஏனெனில், ராமனை ராமன் ஆக்கியது அவன் கை வில் அல்ல. வில்லுக்குப் பின் இருந்த விழுமியம். வில் இல்லாத போது புல்கூட ராமனுக்கு பாணமானது அதனால்தான்.

  வில்லேந்தியதால் பார்த்தன் பராக்கிரமசாலி ஆகிவிடவில்லை.

  பார்த்தசாரதியின் சொல் ஏந்திய பார்த்தனுக்குத்தான் பராக்கிரமம் விளைந்தது.

  அந்தப் பார்த்தசாரதியின் சொல் அறிந்த இந்தப் பார்த்தசாரதிக்கு இப்படி ஒரு ஐயம் ஏனோ ?

  .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கடவுளுக்கு ஆயுதம் தேவையா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: