‘சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது? II

May 19, 2011 § 4 Comments


நான் என் அறைக்குத் திரும்பியதும் நான் திடுக்கிட்டேன். என் திகைப்பு ஆறரை அடி உயரத்தில், வாட்டச்சாட்டமான உடல் வாகுடன் இன்னொரு கட்டிலில் பள்ளி கொண்டிருந்தது.’ கறுகறு’ வென்று வளர்ந்திருந்த அடர்த்தியான தாடி, மீசை. மார்பில் கறுப்பு வயல். சிவந்த மேனி. ஆஃப்கானியர் என்று தெரிந்தது.

நான் ‘ரிஸப்ஷனு’க்குச் சென்றேன்.

‘என் அறையில் இன்னொருவர் படுத்திருக்கிறார்..’ என்றேன்

‘ஆமாம். இங்கு எல்லாமே ‘டபிள் ரூம்’தான்’ என்றர்ர் பிரும்மாண்டம் உடைந்த ஆங்கிலத்தில்.

நான் அறைக்குத் திரும்பியபோது, அவர் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.

என்னை உற்றுப் பார்த்தார்.தாடியைப் பரிவுடன் நீவினார்.

என் பேரைச் சொல்லிக்கொண்டே என் கையை அவரிடம் நீட்டினேன்.

அவர் கைக் குலுக்கவில்லை. ‘அயுப்’ என்றார்.

அவர் என்னுடன் சிநேகபாவத்துடன் இருக்க விரும்பவில்லை என்று எனக்குத் தோன்றிற்று.

நான் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு பிறகு சாப்பிடச் சென்றேன். கூப்பன் கொடுத்திருந்தார்கள்.

உருண்டையாக ஒருபணிப் பெண் வந்து நின்றாள்.

‘வெஜிடேரியன்’ என்றேன் நான்.

‘வெஜிடேரியன்?’

‘ஆமாம்’.

கால் மணி நேரம் கழித்து உப்பு மிளகு போட்டு அழகாக நாலுதுண்டுகளாக வெட்டப்பட்ட, ஒரு தக்காளியைக் கொண்டு வைத்தாள் அந்தப் பெண்.

‘ திஸ்  ஈஸ் ஆல்?’ என்றேன் நான்.

‘மோர்?’

‘எஸ்.’

அவள் இன்னொரு தக்காளிப் பழத்தைக் கொண்டு வைத்தாள். இன்னும் கொஞ்சம் என்றால் இன்னொரு தக்காளி வருமென்று எனக்குத் தெரிந்தது.

இரண்டு தக்காளி சாப்பிட்டுவிட்டு இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன்.

அறைக்குத் திரும்பிய போது ஆஃப்கானிய நண்பர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கம்யூனிஸ்ட் ஆந்ப்கானியராக இருக்க வேண்டுமென்று தோன்றியது. மாஸ்கோவில் பயிற்சி முடித்துக் கொண்டு  காபூலுக்குப் போய்க்கொண்டிருக்கக் கூடும்.

அடுத்த நாள் காலை நான் எழுந்தபோது அவர் இல்லை. என் பெட்டி இருக்கிறதா என்று பார்த்தேன். ப்த்திரமாக இருந்தது.

மாஸ்கோவைச் சுற்றிப்பார்க்க பஸ் வந்ததும் அதில் ஏறிக்கொண்டேன். பயணிகளைக் காட்டிலும் போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.

மாஸ்கோ ஓர் அழகான நகரம். ஆனால் கீழே இறங்கி நம் விருப்பப்படி சுற்றிப் பார்க்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இயந்திர ரீதியாக ஒரு பெண் ஒவ்வொரு கட்டடத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனாள். அவள் ஆங்கில உச்சரிப்பில் பாதிதான் புரிந்தது.

என் கூட இருந்த சக  பயணிகளில் ஒருவர்கூட ரஷ்யரோ அல்லது கீழை ஐரோப்பிய தேசத்தைச் சேர்ந்தவரோ இல்லை. முக்கால்வாசி பேர் வயதான ஜப்பானியர். அவரகளுக்குஆங்கிலம் தெரியுமா என்று கூட அந்த ‘கைட்’ கேட்கவில்லை. அவர்களில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.  சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்த பெண்மணி சோவியத் சொர்க்க பூமியில், ஏகாதிபத்ய-முதலாளித்வ நாடுகளில் இல்லாத சாதனைகளை எல்லாம் கம்யூனிஸ்ட்  அரசாங்கம் நிகழ்த்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனாள்.

திடீரென்று பஸ் நின்றுவிட்டது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் அது நகர மறுத்தது. அந்தப் பெண் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

ஆண் பயணிகள் இறங்கித் தள்ளலாமே என்று ஒரு வயதான ஜப்பானியப் பெண்மணி சொன்னார்.

போலீஸ்காரர்கள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் இது இல்லை!

ஒரு மணி நேரம் கழித்து வேறொரு பஸ் வந்தது.

ஹோட்டலுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போய் விட்டர்கள்.

தக்காளி ‘டின்னர்’ முடிந்ததும், போலீஸ் புடை சூழ விமான நிலையம் சென்றேன்.

ததாவூஷும் ஏவாவும் எனக்காக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

‘உங்களை அழைத்துக் கொண்டு போகவில்லையா மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்க?’ என்று அவர்களைக் கேட்டேன்.

‘ தன் மானமுள்ள எந்தக் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாட்டைச் சேர்ந்தவன் எங்களை நசுக்கிப் பிழிகிற ஆட்சி பீடம் இருக்கும் கிரெம்லினைப் பார்க்க விரும்புவான்?’ என்றான் ததாவூஷ்.

Advertisements

§ 4 Responses to ‘சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது? II

 • ram says:

  உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம். தொடருங்கள்… ரசிக்கும் படியாக இருக்கிறது.

 • Ramanujam says:

  மானுடம் வென்றதம்மா! மற்றதெல்லாம் தோற்றதம்மா!!

 • sathianarayanan says:

  //திடீரென்று பஸ் நின்றுவிட்டது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் அது நகர மறுத்தது. அந்தப் பெண் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

  ஆண் பயணிகள் இறங்கித் தள்ளலாமே என்று ஒரு வயதான ஜப்பானியப் பெண்மணி சொன்னார்.

  போலீஸ்காரர்கள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் இது இல்லை!//

  typical E.PA style!

 • m ravichandran says:

  In a meeting A CPI leader was posed with the same question:”Why did Communism fail in Soviet Union? You should know, Comrade, as you had been to Soviet Union four times”.

  The leader told his young fellow traveller, ” Kunradkudi Adigalar had made more trips to the Soviet Union than I did”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது? II at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: