சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது?

May 18, 2011 § 1 Comment


சோவியத் யூனியனில் கம்யூனிஸம் வீழ்ச்சியடையுமென்று எனக்கு 1984 ஜூலை மாதத்திலேயே தெரிந்து விட்டது.

எப்படியென்றால், அப்பொழுதுதான் நான் வார்ஸாவிலிருந்து மாஸ்கோ வழியாக தில்லிக்குச் சென்றேன். ஏரொஃப்ளூட் விமானத்தில்(சோவியத் ஏர்லைன்ஸ்) வார்ஸாவிலிருந்து மாஸ்கோவுக்கு போலிஷ் ஏர்லைன்ஸில் .மாஸ்கோவிலிருந்து தில்லிக்கு  ஏரோஃப்ளூட்

போலிஷ் விமானங்களிலும், ஏரோஃப்ளூயட்டிலும் ரிஸர்வேஷன் வசதி கிடையாது. டார்வினின் சித்தாந்தம் செயல் முறையில். ‘வலிமையுடையது எஞ்சும்’.  கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில்  போக பஸ் பிடிப்பதற்கு ஓடுவது போல், வேகமாகச் சென்றால் வசதியான இடத்தில் உட்கார முடியும்.

என்னுடன் வார்ஸா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த  இளம் மாணவத் தம்பதியர் இருவர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார்கள். ஏவா, ததாவூஷ். இருவரும் இந்தியமொழிவியல் துறை மாணவர்கள்.

ததாவூஷ் கருத்தின்படி போலந்தின் காவல் தெய்வமாகிய ‘கறுப்பு மதோனாவுக்கும்’ (Black Maddona’- Black Mary))  தமிழ்நாட்டு மாரியம்மனுக்கும்  நிறைய ஒற்றுமைகள் . அதைப் பற்றிய தீவிர ஆய்வுக்காகத்தான் அவன் இந்திய விஜயம். அவன் மனைவி ‘பாலே'(Ballet) வுக்கும் பரத நாட்டியத்துக்கும் ஒற்றுமைகள் உண்டா என்று ஆராய்வதற்காக அவனைப் பின்தொடர்ந்தாள். முதலில் அவள் கதகளிக்கும் ‘பாலே’வுக்கும் தொடர்பு உண்டா என்று ஆராயத்தான் பயணம் மேற்கொண்டாள். அப்படியானால், அவன் தமிழ்நாட்டிலும் அவள் கேரளாவிலும் இருக்க வேண்டியிருக்குமென்று நான் சொன்ன பிறகு, கதகளி பரதநாட்டியமாக மாறியது.அவள் ஆராய்ச்சித் தலைப்பை மாற்றிக் கொண்ட வேகத்தைப் பார்க்கும்போது, அவளுக்கு ‘ பாலே’யைப் பற்றி என்ன தெரியுமென்று கேட்கலாமாவென்று நினைத்தேன்.கேட்கவில்லை.

மாஸ்கோவில் ஓர் இரவு தங்கி, அடுத்த ஆள் அரசாங்க ஏற்பாட்டில் மாஸ்கோவை ஒரு வானில் (கீழே இறங்காமல்) சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த நாளிரவு தில்லி போவதென்று திட்டம். எனக்கு ரஷ்ய மொழி தெரியாதாதலால்  ததாவூஷ்  எனக்கு உதவி செய்வதாகக் கூறியிருந்தான்.

மாஸ்கோவில் இறங்கியதும் எங்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சோவியத், கீழ் ஐரோப்பிய கம்யூனிஸ நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகப் போக முடியாது. எங்களைப் பிரித்துவிட்டார்கள்.

அவர்களுக்கும் எனக்கும் ஒரே ஓட்டலில்தான் தங்குவதற்கு ஏற்பாடு. பிறகு எங்களை ஏன் பிரிக்க வேண்டுமென்று புரியவில்லை.

இமிக்ரேஷன் கவுண்டரில் என்னை யும், என் பாஸ்போர்டிலிருந்த புகைப்படத்தையும் ஐந்து நிமிஷங்கள் தொடர்ந்து பார்த்தார் பிரும்மாண்டாக இருந்த ரஷ்ய அதிகாரி. எனக்கு பயமாக இருந்தது.

இரண்டு மிலிட்ஸியா (போலீஸ்) அதிகாரிகள் அவர் என் பாஸ்போர்ட்டைத் திரும்பக் கொடுத்ததும்  என்னைத் தொடர்ந்தார்கள்.

இன்னொரு கவுண்டரில் நிறகச் சொன்னார்கள். அங்கு என் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு  இலக்கமிட்ட ஒரு சீட்டைக் கொடுத்தார்கள். என்னைக் கைது செய்திருக்கிறார்களா என்னவென்று எனக்குப் புரியவில்லை. ரஷ்யத் தாய்மொழியில் ஆங்கிலம் பேசிய ஒருவர் அடுத்த நாள் நான் திருப்பிப் போகும்போது, அவர்கள் கொடுத்திருக்ககும் சீட்டைக்கண்பித்து என் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாமென்றார். அதாவது நான் எங்கும்  தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்!

போலீஸ்காரர்கள் இருவரும் என்னை நீண் ட ஒரு பெரிய ‘வானு’க்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ‘வானி’லிருந்த நான்கு போலீஸ்காரர்களிடம் என்னை ஒப்படைத்தார்கள்.

‘எங்கே போகிறோம்?’ என்று நான்  சைகை மொழியில் கேட்டேன்.

‘ஹோத்தல்’ என்று ஓட்டுநர் சொன்னார்.ரஷ்ய மொழியில் ‘ட்’கரம் கிடையாது.  நான் ஒருவன் தான் பயணி! எனக்கா நாலு போலீஸ்காரர்கள்?

ஹோட்டலுக்குப் போன பிறகுதான் தெரிந்தது, ததாவூஷும் ஏவாவும் அங்குதான் தங்கியிருக்கிறார்களென்று! ஆனால் என்னையும், அவர்களையும் ஒரு பெரிய  sound-proof  கண்ணாடித் தடுப்பு பிரித்தது! கம்யூனிஸ நாட்டைச் சேர்ந்த விசுவாசமான குடிமக்களை வெளிநாட்டார்,  மாஸ்கோவில் தங்கியிருக்கும் வரை கெடுத்து விடக்கூடாது!

நான் கண்ணாடித் தடுப்புக்கு இந்தப் பக்கம், அவர்களிருவரும் அந்தப் பக்கம்!  ‘ Pantomime’ மொழியில் உரையாடினோம்!

(தொடரும்)

Advertisements

§ One Response to சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது?

  • virutcham says:

    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

    சைகை மொழியில் என்று சொல்லாமல் Pantomime மொழியில் என்று சொல்ல காரணம் இருக்கா ?

    இவ்வளவு கெடுபிடி வைத்துக் கொண்டு அவ்வூர் மக்களை வெளிநாட்டுக்கு படிக்க ஆராய்ச்சி செய்ய எல்லாம் எப்படி அனுமதித்தார்கள். அங்கே போய் விழிப்புணர்வு பெற்று திரும்பி வந்தால் உள்நாட்டுக்கு ஆபத்து விளைவிக்க மாட்டார்களா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading சோவியத் கம்யூனிஸம் ஏன் தோற்றது? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: